சிதறல்!

இதுவரை இப்படி ஒரு பதிவு எழுதியதே இல்லை! இப்படித்தான் தொடங்குகிறேன். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகளைத் தொடர்ந்து இடலாமா? வேண்டாமா? என படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

செப்டம்பர் மாதப் பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. நன்றி. குறிப்பாக கோவர்த்தனன் தொடர் 100-க்கும் அதிகமான பார்வைகளைப் பெறப் போகிறது. மிக்க மகிழ்ச்சி.

அண்ணா பிறந்த தினத்திற்கெல்லாம் பதிவு எழுதினாயே? ஏன் பெரியாரை மறந்தாய்? எனவும், கோவர்த்தனன் தொடர் நன்றாக உள்ளதெனவும், ஏன் இரண்டாம் அத்தியாயத்தில் த்ரில் இல்லை என்றெல்லாம் கேட்ட நலவிரும்பிகளுக்கு மீண்டும் நன்றி.

பெரியார் ஒருபோதும் என்னைவிட்டு மறைவதில்லை. ஒரு திட்டம் தவறிவிட்டது.  விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். கோவர்த்தனன் -ல் அடுத்தடுத்த அத்தியாயங்கள் சிறப்பாக அமையக்கூடும் என நம்புகிறேன்.

டெமுஜின் கதை பலவாறான கமெண்ட்களைப் பெற்றது. மிக்க நன்றி. இனி வரும் ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் நகரும் என்பதைக் கூறிவிடுகிறேன். பரவசத்திற்கு தயாராகுங்கள்.

அதேபோல் எனது ‘நவீன தத்துவங்கள்’ பதிவு பல புதிய வாசகர்களையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. எதிர்பாராத தருணங்கள்/அனுபவங்கள் கிடைத்தன.

தொடர்ந்து இருமுறை சிறந்த 10 தமிழ் பதிவுகளுள் ஒன்றாக எனது பதிவுகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரே குறை. சுழல்காற்று நினைவுகள் விரைவில் வீசும். அதற்காக பொறுத்தருள்க.

அண்ணன் ஓஜஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் அக்டோபர் இதழில் வந்துள்ளது.

சமீபத்தில் படித்தவை:

பொதுவாக பழங்களை சாறாக (Juice) அருந்தாமல், அப்படியே (சுத்தமான நீரில் கழுவி விட்டு!!) சாப்பிட்டால் நார்ச்சத்து முழுமையாக கிடைக்குமாம். குறிப்பாக ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை. (நலவிரும்பிகளின் நலனுக்காக!! )

இன்று அண்ணன் எழுத்தாளர் மருதன் அவர்கள் கொடுத்த விளக்கங்கள் சிறப்பாக இருந்தது. அதை தங்களின் மேலான வாசிப்பிற்கு தருவதில் மகிழ்கிறேன்.

(தமிழ்) பதிப்பாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், மேற்படி ஆங்கிலப் பதிப்பாளர்களைப் போல் புத்தகங்களை ஃபாசிச நோக்கில் விளம்பரப்படுத்தவோ சந்தைப்படுத்தவோ கூடாது.

எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், பதிப்பாளர்கள் கடைபிடிக்கும் விளம்பர உத்திகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் அதைச் சம்பந்தப்பட்ட பதிப்பாளரிடம் தெரியப்படுத்தவேண்டும். உதாரணத்துக்கு, புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமரிசனம் கூடாது என்பது போன்ற அநியாய அக்ரிமெண்டுகள் கூடாது என்று ருஷ்டியும் ரவுலிங்கும் சொல்லியிருக்கவேண்டும்.

வாசகர்கள் மேற்படி விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, எப்படிப்பட்ட புத்தகம்,எப்படிப்பட்ட எழுத்தாளர், இந்தப் புத்தகத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்போவது என்ன என்று அனைத்தையும் ஆராய்ந்த ஒரு புத்தகத்தை வாங்கவேண்டும். விளம்பரங்களும் மார்க்கெட்டிங் மாயாஜாலங்களும் உங்களை அடித்துச் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது.

 

## தொடர்ந்து இது போன்ற பதிவுகளை தரலாமா-வேண்டாமா? என கூறுங்கள். தளத்தின் வெற்றிக்கு காரணமாய் பலரைக் குறிப்பிடலாம். என்றாலும், தனித்து யாரையும் சொல்ல விருப்பமில்லை. அனைவருக்கும் நன்றி.

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

“சிதறல்!” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. இன்றைய freshly pressed – இல் உங்கள் பதிவு வந்ததற்குப் பாராட்டுக்கள்!

    எந்தமாதிரிப் பதிவு என்று கொஞ்சம் குழப்பமாக எழுதி இருக்கிறீர்கள்.

    உங்கள் தொடர் பதிவுகள் பற்றிக் கேட்கிறீர்களா? அல்லது மேலே இருப்பது போல குட்டிக்குட்டி செய்திகள் சேர்த்து எழுதுவதா?

    1. அண்ணன் ஓஜஸ் சொன்னது போல இது ஒரு மாதிரியான கதம்பப் பதிவுதான்! முடிந்தமட்டும் பல்வேறு தகவல்களைத் திரட்டி பதிவாக்க விருப்பம்.
      நான் மேலே இருப்பது போன்ற பதிவைத்தான் கேட்டேன். மீண்டும் இது போல எழுதலாமா?
      பிற தொடர்கள் குறித்த தங்கள் மேலான கருத்துகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.
      வாழ்த்துகளுக்கு நன்றி

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி