சீனாவின் இன்னொரு முகம்!

சீனா- இந்த ஒற்றை வார்த்தை இன்னும் சில வருடங்களுக்குள் தீப்பிழம்பாய்  இந்தியாவில் பரவக்கூடும்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்கரில் தீவிரமாக எழுத முயற்சித்த தருணங்களில், வாசிப்பின் மகத்துவம் அறிந்த தருணங்களில் எழுதிய ஒரு பதிவு. ஏற்கனவே படித்தவர்கள் இப்போதே வெளியேறலாம். அல்லது சீனா பற்றித் துளியும் அறிய விரும்பாதவர்களும் வெளியேறலாம். பழைய பதிவு புதிய வாசகர்களுக்காக. புதிய அனுபவத்திற்காக.

சிறந்த கட்டுரைக்காக நீண்ட யோசிப்பிலும்,வாசிப்பிலும் இருந்தேன்.நண்பர் ஏசி-ன் கட்டுரை மொழிபெயர்ப்பில் இருந்தேன்.அது சமயம்,அண்ணன் மருதன் அவர்களின் கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.அவரின் சிறுசிறு கருத்துகளை ட்வீட்டிய நான் இக்கட்டுரையை மீள்பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன்.அவரின் முழு அனுமதி பெற்றே இதை நான் வெளியிடுகிறேன்.
          

சீனாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? “சீனா-விலகும் திரை “-யை நீங்கள் படிக்கவில்லையெனில் இக்கட்டுரை உங்களுக்கு பயன் தரும் என்றே நம்புகிறேன்.இன்னும் தீவிர புத்தக வாசிப்பிலிருந்து உங்களுக்கு கருத்துகளை திரட்டி வருகிறேன். இனி

 

 

சீனாவின் இன்னொரு முகம்

Chen Guidi, Wu Chuntao இருவரும் இணைந்து எழுதியிருக்கும் Survey of Chinese Peasants என்னும் புத்தகம் குறித்த விமரிசனம் நியூ லெஃப்ட் ரிவ்யூவில் வெளிவந்துள்ளது. பழைய கட்டுரை. எனக்கு இப்போதுதான் காணக்கிடைத்தது. நூலாசிரியர்கள் இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்ஹுய், ஹுனான் மாகாணாவாசிகள். இருவருமே எழுத்தாளர்கள். தம்பதிகள். அக்டோபர் 1, 2000 அன்று அன்ஹுயின் தலைநகரமான Hefei என்னும் பகுதியில் இருந்து இவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர். பெய்ஜிங்கில் இருந்து தெற்கே 500 மைல் தொலைவில் உள்ள ஒரு பகுதி இது. இங்கிருந்து தொடங்கி அன்ஹுயில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான மாகாணங்களை இவர்கள் பேருந்து மூலமாகவும் கால்நடையாகவும் சுற்றிவந்தனர்.

ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சீனாவின் இன்னொரு பக்கத்தைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கம். சீன விவசாயிகளிடம் உரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை, கொடுமைகளை நேரடி அனுபவங்கள் வாயிலாக நூலாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை தரவுகளோடு முன்வைக்கும் இந்தப் புத்தகம் உடனடியாக சீனாவில் தடைசெய்யப்பட்டது.

பல விவசாயிகளின் ஆண்டு வருமானம் 270 யுவான். கிட்டத்தட்ட 1400 ரூபாய். என்றால், மாதத்துக்கு, 115 ரூபாய். வெங்காயம் பயிரிடும் ஒரு விவசாயியால் காசு கொடுத்து வெங்காயம் வாங்கமுடியாது. சாப்பிடவே போதுமான காசு இல்லை என்றாலும் கிராம அதிகாரிகளுக்கு பெரும் தொகையை வரியாகச் செலுத்தியாகவேண்டும். மறுத்தால், வரி வசூலிக்கும் குழு சம்பந்தப்பட்ட விவசாயியின் வீட்டுக்கு நுழைந்து, அவர் வசமுள்ள பொருள்களை பறிமுதல் செய்யும். பன்றி முதல் வீட்டுச்சாமான் வரை எதையும் பறித்துச் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இது தவிர, விவசாயியை அடிக்கலாம். கைது செய்யலாம். சிறையில் தள்ளலாம். அபராதம் விதிக்கலாம்.

காசில்லை விட்டுவிடுங்கள் என்று கதவைப் பூட்டிக்கொண்டால், கதவு உடைத்து திறக்கப்படும். கதவை உடைத்து திறக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதற்காக சிறப்பு அபராதம் விதிக்கப்படும். மிரட்டி, அடித்து பணத்தைப் பிடுங்கிகொள்வார்கள். பிறகு, இருப்பதிலேயே பெரிய உணவகத்துக்குச் சென்று வரி வசூலிக்கும் குழு சாப்பிடும். பில் கட்டுவது சம்பந்தபட்ட விவசாயியின் கடமை. Ding Zuoming என்னும் விவசாயி, வரி வசூலிப்பவர்களிள் அராஜகத்தை அம்பலப்படுத்தி சீன உயர் அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ச்சியாகப் பல புகார்களை அனுப்ப ஆரம்பித்தார். மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினார். கோபமடைந்த அதிகாரிகள் டிங்கை கைதுசெய்தனர். சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

ஒரு சில கிராம அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைக் குறுக்கிவிடமுடியாது. மேல் மட்டத்தின் துணை இல்லாமல் இந்த அதிகாரிகளால் இவ்வாறு இயங்கமுடியாது. அந்த வகையில், விவசாயிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்பது சீனாவின் அரசாங்க கொள்கை. 1990ம் ஆண்டைவிட 2003ம் ஆண்டு தானிய உற்பத்தி அளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் 1997ம் ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளின் மதிப்பு அதிகரித்துவிட்டது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய சீனா, நகரங்களை மட்டுமே கவனித்துவருகிறது. நகரங்கள் ஜொலித்தால் போதும். நகரங்கள் தொழில்மயமானால் போதும். நகரங்களின் செல்வம் குவிந்தால் போதும். கிராமங்களை ஒடுக்குவதில் தவறில்லை. விவசாயிகளிடம் இருந்து கூடுதல் வரி பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.

மொத்தம் 93 வகையான வரிகள் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. இவை போக, 293 தனிப்பிரிவுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளூர் கிராம அதிகாரிகளுக்கு வரி கட்டவேண்டும். கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் மேம்பட, கட்சி உறுப்பினர்களுக்கு சமூக நல விடுதி உருவாக்க, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமலாக்க என்று பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் வீட்டில் புதிதாக ஒரு பன்றிக்குட்டி பிறந்தால் அதற்கு வரி செலுத்தியாகவேண்டும். காவலாளிகளுக்குச் சீருடைகள், காலுறைகள் வாங்குவதற்கு தனியே வரி வசூலிக்கப்படும். அரசாங்க நிமித்தமாகவும் கட்சி வேலைகளுக்காகவும் உறுப்பினர்கள் பயணம் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து வரி திரட்டப்படுகிறது. ஒரு மாட்டின் உடல் மீதுள்ள முடிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான வரிகளை நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.

புத்தகம் எங்காவது கிடைத்தால் படிக்கவேண்டும்.

************************************************

 அண்ணன் மருதன் அவர்களுக்கு  நன்றி எனும் வாக்கியத்தோடு  இக்கட்டுரை முடிக்கப்படாவிடின் நான் நன்றியற்றவனாவேன்.

அன்பன்

தமிழ்

மூலக் கட்டுரையாளர்: மருதன்

உங்களுக்கும் சீனா குறித்து ஏதேனும் கூற விருப்பமிருந்தால்  Comment-ங்கள். இன்னும் சில குறிப்புகளும் உள்ளன. பிறிதொரு சமயம் வெளியிட விருப்பம்.
ஒரு சிறு புத்தகப் பரிந்துரை:
பல்லவி அய்யர் என்கிற பத்திரிக்கையாளர் எழுதிய ‘சீனா விலகும் திரை’ (தமிழ்) புத்தகத்தை வாய்ப்பு கிடைத்தால் படிக்கலாம். இதே புத்தகத்தின் நேரடி ஆங்கில வடிவ நூலின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் குறிப்பிடலாம். தமிழ் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Advertisements

4 thoughts on “சீனாவின் இன்னொரு முகம்!

  1. மின்னஞ்சலில் வாசித்தவர்களுக்கு முழுமையான பதிவு சில தொழில்நுட்பக்(!) காரணங்களால் கிடைக்காமல் போயிருக்கலாம். தவறுக்கு வருந்துகிறோம். தவறுகள் திருத்தப்படும். பொறுத்தருள்க. நன்றி.

    1. நீங்கள் இன்னும் சீனாவைப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவில் ரோட்டுக்கு வந்து உங்களால் (இப்போது) போராட முடியும்! ஆனால் சீனாவில் மக்களாட்சி நசுக்கப்பட்டுள்ளது.
      இங்கே விலையேற்றம்…..அங்கே வேறு!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s