பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையைத் துரத்துகிற எளிய உயிர்- நான்.

நான் எழுதுகிறேன்.

எனவே என்னைப் பற்றியும் எழுத விருப்பம்.

ட்விட்டர் தளத்தில் @iamthamizh

தமிழ் மேல் எப்படியோ மோகங்கொண்ட என் தந்தை எனக்கு அப்படியே பெயராகவும் வைத்துவிட்டார். இருந்தாலும் இன்னும் பலப் பெயர்களால் நான் அறியப்பட்டாலும் நீங்களும் தமிழ் என்றே என்னை அறியலாம்.

முதல் முறை படிக்கிறபோது குழப்பத்தையும், இரண்டாம் முறை படிக்கையில் மேலும் குழப்பத்தையும் வரவழைக்கக் கூடியவாறு எழுத வெகுநாட்களாக முயன்று வருகிறேன்.

புதிய உரைநடை அமைப்புகள் (அதாவது (அதிகம்) பயன்படுத்தப்படாத அமைப்புகள்) அமைத்து எழுத ஆசை. அதன் பொருட்டு பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வாசிக்க முயல்கிறேன். இனியும் தொடர்வேன்.

பயணப்படுதல் மிகவும் சுவாரசியமான ஒன்று. விந்தையான, வித்தியாசமான அனுபவங்களை அது தருவதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெரும்பாலும் பயணப்படுவேன். ஏதாவதொரு பேருந்து நிலையத்தில் (தமிழகத்தில்) என்னைக் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டலாம்.

சென்ற தலைமுறைக்காரர்களை இசையால் இழுத்த (அல்லது கட்டிப்போட்ட அல்லது மயங்க வைத்த ) மேதையைப் பிடிக்கும். அதன் காரணமாய் பிறரது இசைமேல் எந்த வஞ்சமும் கொள்ளாமல் ரசித்துப் பழகப் பழகினேன்.குறிப்பாகச் சொன்னால் இசைக்குத்தான் நான் ரசிகன். (இதில் தொனிக்கிற இருபொருளை யூகிக்க முடிகிறதா???)

எனக்கென்று சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு. அதை இங்கே பிரதிபலிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முன்னர் முழுதாக கடவுள் மறுப்பைக் கொண்டிருந்தாலும் நான் மதிக்கிற நல்லோர் சொன்னதன் பொருட்டு மூட நம்பிக்கைகளை புறந்தள்ளுகிற அளவில் என் நம்பிக்கை தொடர்கிறது.

எல்லா சூழல்களிலும் எனை இயக்க என் தோழர்கள் இருக்கிறார்கள். நீரைப் போல எனக்கான கலனில் என்னைப் பொருத்துவது அவர்கள்தான். எனது ஆசிரியர்களில் சிலரைப் பற்றி சொல்லியாக வேண்டும். எனது இனிய நாட்களை அவர்களும் வடிவமைத்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து கட்டாயம் சொல்ல விருப்பம். அதற்காக செப்டம்பர்-5 வரை காத்திருக்கப் போவதில்லை.

என் பெற்றோர், என் தம்பி, என் அக்காள்கள், என் அண்ணன்கள், மற்ற உறவினர்கள் என் மேல் வைத்திருக்கும் மரியாதையையும், மதிப்பையும் காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியைக் கவனமுடன் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இந்த தளம்.

நிறைய எழுத ஆசை கொண்டால், இதைத் திருத்தி அதிகப்படுத்தவும் அஞ்சேன்.

எனது எழுத்துகளில் பிற எழுத்தாளர்களின் சாயலோ, தாக்கமோ தென்பட்டால் அது தற்செயலானதல்ல.

என்னை இதுகாறும் வழி நடத்திய என் பெற்றோர், நண்பர்கள், உற்றார் , ஆசிரியர்கள் மற்றும் என் தம்பிக்கும் என் உயிர் மண்ணில் பிரியும் வரை இதயத்திலிருந்து நன்றிகள்.

கனியிடை ஏறிய சுளையும் — முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், — காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் — தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், — தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

2 thoughts on “நான்

 1. நிறைகள் நிரம்பிய
  நேர்மை நீ!
  குறை யில்லா
  குணம் நீ!

  நம்பிகை நிறை
  நல்லவன் நீ!
  வெற்றி கொள்ளும்
  வேந்தன் நீ!

  சிறுமை யில்லா
  சிறந்தவன் நீ!
  பொறுமை குன்றே,
  பெருமை நீ!

  எழுத்தின் எல்லா
  எழுச்சியும் நீ!
  கருத்தின் கனிவும்,
  கலையும் நீ!

  கவிதையின் கனவும்,
  கடலும் நீ!
  உணர்ச்சியின் உருவம்,
  உறவும் நீ!

  வாசிப்பின் வரமும்,
  வாசமும் நீ!
  இசையின் இயல்பும்,
  இன்பமும் நீ!

  அன்பின் அலையும்,
  அழகும் நீ!
  பண்பின் பயனும்,
  பக்குவமும் நீ!

  சொல்லின் சுவையும்,
  சுகமும் நீ!
  தமிழின் தவமும்,
  தணலும் நீ!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s