டெமுஜின் கதை-5

 

5.நான் போர்ட்டே!

/*தொடரை முழுமையாக படிப்பதே சிறந்தது. புதியவர்கள் தயை கூர்ந்து முந்திய 4 அத்தியாயங்களையும் படித்தபின் தொடரவும். */

‘டெமுஜினுக்கு ஒன்பது வயதாகிவிட்டது. அவனுக்கான துணையை நாம் தேட வேண்டும்’ – ஹோலுன்.

‘உண்மைதான். நான் என் தோழர்களிடத்தில் இது பற்றி சொல்கிறேன். இது சரியான தருணம்தான்.’

யெசுகெய் (டெமுஜின் தந்தை) ஹோலுனிடம் (தாய்) சொன்னார். உடனே ஹோலுன், என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது என்றாள்.

தொடரை தொடர்ந்து நுணுக்கமாக படித்து வருபவர்களுள் சிலர் அது என்ன யோசனை என யூகித்திருக்கலாம்!!

ஹோலுன் யெசுகெய்யிடம் சொன்னாள்.

“நீங்கள் என்னைக் கடத்திக்கொண்டு வந்ததிலிருந்து எங்கள் இனக்குழுவினர் (மெர்கிட்) உங்கள் மீது கோபமாயுள்ளனர். எனவே டெமுஜினுக்கு எங்கள் இனக்குழுவிலிருந்து பெண் எடுத்தால் இருதரப்பினருக்கும் நல்லுறவு உண்டாகும்”

சில நிமிடங்களுக்குப் பின், யெசுகெய் சொன்னார்.

”சரி. நாளைக்கே டெமுஜினை நாளைக்கே கூட்டிச்செல்கிறேன்.”

மறுநாள் இருவரும் கிளம்பினர்.

ஹோலுன் கூடாரத்தில் இருந்து வெளியே வந்தாள். கையில் ஒரு மரப்பாத்திரமும், ஒரு கரண்டியும் இருந்தது. பாத்திரம் முழுக்க தண்ணீர் இருந்தது. டெமுஜின் குதிரை மேல் அலங்கரிக்கப்பட்டிருந்தான். கம்பளிக் குல்லா, முழு நீள அங்கி அணிந்திருந்தான். சிறிய உணவுப் பொட்டலமும், வில்லும் வைத்திருந்தான்.

நான்கு பாதுகாவலர்கள், யெசுகெய், டெமுஜின் ஆளுக்கொன்றாக ஆறு குதிரைகள்  இதோடு பொதிகளை சுமக்க ஒரு குதிரை. பெண் பார்க்கும் படலம் துவங்கிற்று. ஹோலுன் தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து நீரை கரண்டியால் எடுத்து வாரி, வாரித் தெளித்தாள் வானை நோக்கி.

நல்லபடியாக பயணம் முடியவேண்டும் என வானத்திடம் வேண்டுகோள் வைக்கும் முறை இது. அது மங்கோலியர் கலாச்சாரம்.

குதிரைகள் கிளம்பின.

ஆனால் சோச்சிஜெல்லின் (யெசுகெய்யின் முதல் மனைவி) முகம் இருண்டது. மூத்தமகனும், வயதளவில் பெரியவனுமான பெக்டெர் முறைத்தபடி நின்றிருந்தான். அவருக்கு அப்போது டெமுஜின் பற்றியே மனம் சென்றது. மூத்தமகன் பற்றியே அவர் நினைக்கவில்லை. மூத்த தாரம் இருக்கையில் இளைய தாரத்தின் மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் என்ன நிகழும்? என்றெல்லாம் அவரால் சிந்திக்க இயலவில்லை. காரணம் மெர்கிட்டுகள். வலுவான எதிரிகளை தோழர்களாக்க எண்ணினார்.

பயணம் நெடுகிலும் டெமுஜினுக்கு மெர்கிட்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான நெடுநாள் பகைமை பற்றியும், ஹோலுனின் ஆசை பற்றியும் யெசுகெய் பலவாறு சொல்லிக் கொண்டே வந்தார். அதுவரை ’ஆனான்’ நதிக்கரையிலேயே சுற்றிவந்த டெமுஜினுக்கு இயற்கை இன்னும் களிப்பூட்டியது. ஆனாலும், தந்தை சொன்ன ஒரு வார்த்தையைக் கூட டெமுஜின் கவனிக்கத் தவறவில்லை.

வானை இருள் சூழ்ந்த நேரம். நீண்ட பயணக் களைப்பு காரணமாய் குதிரைகளை நிறுத்த எண்ணினர். தொலைவில் சில கூடாரங்கள் தெரிந்தன. அதைக் கண்ட யெசுகெய்,

“அங்கே எனது தோழர் டெய்-செட்சென் (பெயர்களை உச்சரிப்பதில் சிரமம் இருப்பின் பொறுத்தருள்க!) இருக்கிறார். இங்கே தங்கிவிட்டு காலை பயணத்தைத் தொடரலாம்” என்றார்.

டெமுஜினும், யெசுகெய்யும் ஒரு கூடாரத்தை நோக்கி சென்றனர். உள்ளே இருந்து ஒரு நபர் வெளியே வந்தார். வந்தவர் டெய்-செட்சென் தான்!

இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். டெமுஜின் பற்றியும் அறிந்தார் அவர். தொடர்ச்சியாக இருவரும் கூடாரத்துள் நுழைந்தனர். டெமுஜின் மட்டும் குதிரைக்குத் தண்ணீர் காட்டப் போனான். தூரத்தில் சில சிறுமிகள் குளத்தில் நீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையே டெமுஜின் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

எல்லா சிறுமிகளையும் விட, ஒருத்தி மட்டும் உயரமாக இருந்தாள். இன்னும் சொல்லப் போனால், டெமுஜினை விட உயரமாக இருந்தாள்! அவள் முகம் வட்டமாக, அழகாக, சிரித்தவண்ணம் இருந்தது. (இந்தளவுக்கு வருணனை எதற்காக? தெரியுமா???) அவளே டெமுஜின் அருகில் வந்தாள்.

”உன் பெயர் என்ன?”

“நானே உன்னிடம் கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.”

“நான் போர்ட்டே.”

“நான் டெமுஜின்.”

-தொடரும்

### அப்புறம் என்ன நடந்திருக்கும் என சுலபமாக யூகிக்கலாமே!!

எக்ஸ்ட்ரா:

தற்போதைய தமிழ் வணிகத் திரைப்படங்களின் திரைக்கதைக்கு சற்றும் குறையாத திருப்பங்களை நிஜ வாழ்வில் கொண்டிருந்தவர் டெமுஜின். இன்னும் கொஞ்சம் பொறுங்கள். ஆட்டம் சூடேறும்!!

3 comments

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s