தமிழ் வளர்க்க

தமிழை வளர்க்க என்ன வழி? முதல் வழி பேசுவது. நல்ல தமிழை எழுதவும் பேசவும் செய்தாலே அது வளரும். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசப் பழக வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம். இது எல்லோருக்குமானது. ஆனால் வளரும் தலைமுறைக்காரர்களிடம் நல்ல தமிழை விதைத்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நல்ல தமிழ்நூல்களை வாசிக்கப் பழக்கினால், அதன் சுவையில் அவர்களாகவே தமிழை உணர்ந்து படிப்பார்கள். குறளைச் சொல்லித் தருகையில் அதன் பொருளை … தமிழ் வளர்க்க-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதை படி

கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் எப்போதுமே பலருக்கும் உண்டு. சிலருக்கு கேட்பதில், சிலருக்கு எழுதுவதில் கூட ஆர்வம் இருக்கலாம். இங்கு நான் பகிரப்போவது கதைகளைப் பற்றி. கதை என்றால் இங்கே சிறுகதை. வாசிக்க வாசிக்கத்தான் எழுதுவதற்கான உத்வேகம் வருமென்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாகவே சிறுகதைகளைத் தேடித்தேடி படிக்க முயற்சித்தேன். எப்படியெல்லாம் கட்டமைக்கிறார்கள்? கரு எப்படி எடுக்கிறார்கள்? வாக்கிய அமைப்பு, சொற்களின் தேர்வு என கொஞ்சம் நுண்ணியமாகவும் ஆராய நேரம் கிட்டியது. கதைகள் வெறும் கதைகள் அல்ல. … கதை படி-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாசிப்பிலிருந்து…

சிதறல் வகை பதிவுகளை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று பல கருத்துகள் வந்தபடியால், நீண்ட இடைவெளிக்குப் பின் சிதறல் வகைப்பதிவுகள் இங்கே. மாதம் ஒரு புத்தகம் படிக்க எண்ணியிருந்தேன். தாய், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மலைக்கள்ளன் ஆகியன மட்டும்தான் படித்து முடித்துள்ளேன். இவைதவிர சிறு புத்தகங்கள் தனி. சில புத்தகங்கள் தொடங்கியபடி நிற்கின்றன. எப்படியும், ஜூன் - ஜூலையில் நிலைமை கைக்குள் வந்துவிடும்! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) சிறுநூல் வரிசை என்கிற பெயரில் குட்டிகுட்டி நூல்களை … வாசிப்பிலிருந்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுழற்காற்று நினைவுகள்-4

முந்தைய பகுதிகளைப் படிக்க: முந்தைய அத்தியாயத்தின் முடிவில் ஊமை ராணியார் என்று நான்  குறிப்பிட்டது கொஞ்சம் தவறுதான். காரணம் இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் பொன்னியின் செல்வரைக் காவிரியாற்றின் (பொன்னி) வெள்ளத்தினின்று அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிய காவேரி அம்மனாகக் குறிப்பிடுகிறார் கல்கி. இதில் வந்தியத்தேவன் தன்னுடைய குலப்பெருமை குறித்த பாடல் ஒன்றைப் பாட, அதற்கு பொருள் கூறுகிறான் ஆழ்வார்க்கடியான்.   தொடர்ந்து,  காவேரி அம்மன் குறித்த பல தகவல்களை பொன்னியின் செல்வர் கூறுகிறார். இலங்கையின் பலபகுதிகளில் அப்போதிருந்த குளிர்காய்ச்சல் காரணமாய் நிலவிய … சுழற்காற்று நினைவுகள்-4-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதைகள் பிறந்த கதை!

பிரபல எழுத்தாளர் ஒருவரின் பேத்தி ஒருவர், சிறுவயதிலேயே சிறுகதைகள் எழுதியிருப்பதாகப் படித்தவுடனே, உள்ளம் சிலிர்த்தபடி ஒரு நோட் (எப்படியும் 40-50 பக்கம் இருக்கும்!) எடுத்துக் கொண்டு கதை எழுதப் போகிறேன் என்று சொல்லி அமர்ந்தேன். இதற்கு முன் நான் அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாமலிருந்ததால் என் அம்மாவும் ஆதரித்தார். திடீரென்று எழுத உட்கார்ந்தால் என்ன எழுத வரும்? கி.ரா (கரிசல் கதைகளின் மன்னர்தான்!) அவர்களின் சிறுகதை ஒன்றின் நூல் பிடித்து கொஞ்சம் கற்பனை தட்டி எழுதினேன். முதல் … கதைகள் பிறந்த கதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.