சுஜாதா சொல்கிறார்!

பரிச்சயம் இல்லாதவர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். உங்கள் கையெழுத்திட்ட போட்டோ ஒன்று அனுப்புவீர்களா? உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் எழுதியுள்ள கள்ளும் முள்ளும் என்கிற காவியத்தை உங்கள் மேலான பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். அனுப்பலாமா? உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் ஆண்டிப்பட்டி இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட்டில் ஃபிட்டர் தொழில் பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். உங்கள் தொழிற்சாலையில்…. பரிச்சயம் இல்லாதவர்கள் நேரில் … சுஜாதா சொல்கிறார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!

நன்றாக எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாழ்த்துகிற தோழர்கள் இருக்கிறவரையில் நல்ல பதிவுகளை இடுவது என் கடன்! முன்னர் வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கவிதை நல்ல வரவேற்பு பெற்றதாலோ, என்னவோ இன்னுமொரு நல்ல மொழிபெயர்ப்புக் கவிதை கண்ணில் பட்டது. அதையும் பகிர ஆசை. முன் சொன்ன கவிதை போலவே இதுவும் சிலரால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு, நம்மால் அனுதாபப்பட்டு கடந்து போகக் கூடிய ஒன்று! டயரிக் குறிப்புகள் பல சமயங்களில் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனி ஃப்ராங் டைரிக் குறிப்புகள் … இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

வலியும் – வழியும்!

மிகுந்த மகிழ்ச்சியோடு வணக்கம். தொடர்ந்து சிறப்பான வரவேற்பு எனது தளத்திற்கு கிடைத்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் நான் தகுதியானவனா? என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. நான் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக எழுதிவிடவில்லை. அதேசமயம் என்னால் நிச்சயமாக சிறப்பாக எழுதமுடியும் என்பதில் ஐயமில்லை. சமீபமாக அதிக பதிவுகளை எழுதிவருவதுபோல் தோன்றுகிறது. அதிகம் எழுதினாலும், ஆழமாக எழுதுவதில்லை. எனக்கான வழிகாட்டிகள் யாவரும் (பெரும்பாலும்!) குறைவாகவே எழுதுகிறார்கள். இது போன்றவற்றை தவிர்க்க சமீபத்தில் கிடைத்த தொடர்விடுமுறைகளை பயன்படுத்த திட்டமிட்டேன். விதி என்னை … வலியும் – வழியும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..

நாமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறதையெல்லாம் நாமாகவே எழுதிவிடுகிறதில்லை. வேறொருவர் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது. அதை நம் சோம்பேறித்தனம்தான் என்பதா? இல்லையில்லை..... அப்படி முழுவதுமாக சொல்லிவிட முடியாதுதான். ஆனலும் நம் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்தும் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களை பிறர் வெளிப்படுத்துகையில் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்தானே! அப்படித்தான் எனக்கும் இருந்தது. இங்கே வெளியாகியிருக்கிற பதிவு வேறொரு தளத்தில் வேறொரு நபரால் எழுதி பதியப்பட்டது. ஆனாலும் என்ன? நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்கலாம் தானே. நாம் அன்றாடம் … ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவீன தத்துவங்கள்

அண்ணன் ஓஜஸ் அவர்கள், அடிக்கடி சில தத்துவங்களை உதிர்ப்பார். நாம் எல்லோருமே வாழ்க்கையில் அவ்வப்போது தத்துவங்களை உதிர்ப்பதுண்டு. அவற்றை அண்ணன் ஓஜஸ் போலவே நாமும் மறுப்பதுண்டு. காரணங்கள் இருக்கிறது. தத்துவங்கள் என்றாலே புரியாத சொற்றொடர்கள் என நமக்கு நாமே பழகிக் கொண்டுள்ளோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள ட்விட்டருள் வந்தாலே போதும். ஒவ்வொருவர் மனதிலும் எண்ண அலைகள் பாய்ந்தோடுகின்றன. சில நேரங்கள் தத்துவங்கள் கேலிக்குரியனவாகி விடுமோ என்ற அச்சமும், தத்துவங்கள் கூறினாலே நாமெல்லாம் புத்தனாகி விடுவோமோ என்ற … நவீன தத்துவங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.