தீரா வானத்தின் கதை -2

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.தீராக் கனா கதை யோசித்த காலத்திலேயே நிறைய கதாபாத்திரங்கள் வைத்து எழுதும் யோசனை இருந்தது. அந்த கதைக்கு அது அவசியமற்றது என புரிந்ததுமே இரண்டே பாத்திரங்கள் கொண்டு சிறியதாக எழுதி முடித்தேன்.தீரா வானம் தொடங்கியபோதே அதை பெரிதாக எழுதிப் பார்க்கும் எண்ணம் இருந்தது. நிறைய கதை மாந்தர்களை இக்கதை தாங்கும் என தோன்றியது. நாவல்களில் கதை மாந்தர்களை பயன்படுத்தும் விதம் பற்றி சற்றே படித்தேன். கி.ரா எழுதிய முன்னுரை ஒன்று … தீரா வானத்தின் கதை -2-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீரா வானத்தின் கதை

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் சில பத்திகள், சில உரையாடல்கள் மட்டும் எழுதி தீரா வான் என்று தலைப்பு யோசித்தேன். அதற்கு சில வாரங்கள் முன்பு தீராக் கனா எனும் நீள்கதை ஒன்றை எழுதி முடித்திருந்தேன். அம்மின்னூல் 2018 பிப்ரவரியில் வெளியானது.இனி எழுதும் கதை குறைந்தது 100 பக்கங்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற கதையொன்று யோசிப்போம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்போதைய மனநிலை அப்படி. அதே காலத்தில் படித்த … தீரா வானத்தின் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்கள் -2014

வணக்கம். கொஞ்சம் முன்னதாகவே இப்பதிவை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனாலும் பரவாயில்லை. எதிர்பாராத ஒரு சிறு இடையூறின் காரணமாய் பதிவுகள் எழுத இயலவில்லை. கடந்த ஆண்டு பட்டியல் மட்டும் இட்டுவைத்தேன். அதில் சில புத்தகங்களைப் படிக்க இயலவில்லை. ஆனால் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. புதிய புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும் தாராளமாய் கிட்டின. இனி இந்த ஆண்டுக்கு.. 1. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது (And Quiet Flows the Don) எழுதியது: மிகெய்ல் சோலோகோவ் (mikhail sholokhov) தமிழில்: … புத்தகங்கள் -2014-ஐ படிப்பதைத் தொடரவும்.

குறிப்பு-2

சென்ற பதிவின் தொடர்ச்சி… வழக்கம் போல முதலில் புத்தகங்கள். ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் என்று நினைக்கிறேன். அண்ணன் ஓஜஸ் மூலமாக மலைக்கள்ளன் நூல் எனது வாசிப்புக்குக் கிடைத்தது. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் எழுதிய நாவல் என்பதை விட எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த திரைப்படமாக மலைக்கள்ளன் பெரும்பாலானோருக்கு அறிமுகம் ஆகியிருக்கும். அவர் என்னிடம் 2-3 நாட்களுக்குள் இந்நூலைப் படித்து முடித்துவிடுவாய் எனக் கூறியிருந்தார். முதலில் நான் ஏற்கவில்லை. ஆனால் முடிவில் அதன்படியே இரு நாட்களில் அந்தநூலை முடித்துவிட்டேன். … குறிப்பு-2-ஐ படிப்பதைத் தொடரவும்.

குறிப்பு-1

தலைப்பு சற்று வித்தியாசமாகத் தோன்றினால் பொறுத்தருள்க. இப்பதிவு புத்தகங்கள் பற்றியது. முழுக்கவே புத்தகங்கள் பற்றியதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதில். இவ்வருட துவக்கம் முதலாகவே படித்து முடித்த புத்தகங்கள் பெயரைக் குறித்துவைத்துக் கொண்டே வந்தேன். மாதம் ஒன்று என்ற இலக்கை வெற்றிகரமாகத் தாண்டியதே போதுமானதாக இருந்தது. புதிதாக எதிர்பார்த்த நூல்களைக் காட்டிலும் அதிகமாகவே படிக்க முடிந்தது. அதில் சில நூல்கள் பற்றிய குறிப்புகளே இப்பதிவு. இவ்வருடம் முதலில் படித்து முடிக்க வேண்டும் என்கிற இலக்கோடுதான் ‘தாய்’ … குறிப்பு-1-ஐ படிப்பதைத் தொடரவும்.