தீராக் கனா -08

#08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். … More தீராக் கனா -08

Rate this:

தீராக் கனா -07

#07 கிளம்பியாயிற்று. நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும். நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா … More தீராக் கனா -07

Rate this:

தீராக் கனா-05

#05 இரவாகி விட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. உறக்கம் வந்த மாதிரியே உணர்வில்லை. அறையை விட்டு வெளியேறி நடந்தேன். அந்த நிசப்தம் ஒரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் என் பாத ஒலிகள் எனக்கே சங்கடமாய் இருந்தன. அந்த நிசப்தத்தில் என் காரணமாய் ஏற்பட்ட அதிர்வுகள் தனியே ஒலித்தன. என்னால் மற்றவர்கள் உறக்கம் பாதிக்கப்படக் கூடாதென மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். அலைபேசியில் பாட்டு கேட்க முடிவெடுத்து இசை என் காதுக்குள் மட்டும் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியது. … More தீராக் கனா-05

Rate this:

தீராக் கனா -04

#04 நிதானமாக நடந்து வந்து ஒரு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். வெயில் உச்சியில் நின்ற மாதிரி இருந்தது. மணி இரண்டை நெருங்கியது. ரொம்ப சொற்பமானவர்களே அங்கு நின்றிருந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். காற்று அவ்வப்போது வந்து தழுவியது. வியர்வை மேல் பட்ட காற்று கொஞ்சம் குளிர்ச்சி தந்தது. ஆனாலும் நா வறண்டதை உணர்ந்தேன். கைவசம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. ஒன்றிரண்டு சிவப்பு நிற ஏசி பேருந்துகள் வந்தன. அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்தான். ஆனால் டிக்கெட் … More தீராக் கனா -04

Rate this:

தீராக் கனா – 3

#03 விடியலுக்கு முன்னரே பெங்களூருவுக்குள் வண்டி நுழைந்து விட்டது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று ஊர்ந்தது. எங்கெங்கோ நின்று நின்று வந்தாலும், பின்னர் வேகம் கூட்டி புலியின் பாய்ச்சலில் ஓசூர் வரைக்கும் விரையும் வண்டிகள் அதற்குப் பிறகு அவ்வப்போது உறுமிக் கொண்டு நகரும். பெங்களூருவிற்குள் அப்படித்தான். விடிகாலையில் பெங்களூருவிற்குள் நுழைகையில் வீசுகிற குளிர்காற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. எல்லோரும் அதை அனுபவிக்கத் தயாரில்லை அல்லது அவரவர் அதனை அனுபவிக்கும் முறை வித்தியாசமானது. எனக்கும் இன்றைக்கு அப்படியில்லை. குளிர்காற்று … More தீராக் கனா – 3

Rate this: