கதை படி

கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் எப்போதுமே பலருக்கும் உண்டு. சிலருக்கு கேட்பதில், சிலருக்கு எழுதுவதில் கூட ஆர்வம் இருக்கலாம். இங்கு நான் பகிரப்போவது கதைகளைப் பற்றி. கதை என்றால் இங்கே சிறுகதை. வாசிக்க வாசிக்கத்தான் எழுதுவதற்கான உத்வேகம் வருமென்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாகவே சிறுகதைகளைத் தேடித்தேடி படிக்க முயற்சித்தேன். எப்படியெல்லாம் கட்டமைக்கிறார்கள்? கரு எப்படி எடுக்கிறார்கள்? வாக்கிய அமைப்பு, சொற்களின் தேர்வு என கொஞ்சம் நுண்ணியமாகவும் ஆராய நேரம் கிட்டியது. கதைகள் வெறும் கதைகள் அல்ல. … கதை படி-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய பரிமாணம்!

ஆம். உண்மையிலேயே புதிய பரிணாமம்தான். எதிர்பார்க்கவேயில்லை. இப்படியெல்லாம் எனக்கு வாய்ப்பு வரும் என்ற எண்ணம் துளியும் இல்லை. நண்பர் குழுவால்தான் இதெல்லாமே சாத்தியமாயிற்று. என் இனிய தோழர்கள் எல்லோருக்கும் நன்றி. விடயத்திற்குள் வந்துவிடுகிறேன். நண்பர் முஹ்ஸின் அவர்கள் என்னிடம் கிட்டத்தட்ட  சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன் வேர்ட்பிரஸ் தளத்தையும் தொடங்கினார். வெற்றிகரமாக நடத்திவருகிறார். பொதுவாக உறவுமுறைகள்-அன்பு-பொது-தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார் ஆங்கிலத்தில். அவர் கேரளத்து நண்பர். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதிய அவருக்கு திடீரென … புதிய பரிமாணம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!

நன்றாக எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாழ்த்துகிற தோழர்கள் இருக்கிறவரையில் நல்ல பதிவுகளை இடுவது என் கடன்! முன்னர் வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கவிதை நல்ல வரவேற்பு பெற்றதாலோ, என்னவோ இன்னுமொரு நல்ல மொழிபெயர்ப்புக் கவிதை கண்ணில் பட்டது. அதையும் பகிர ஆசை. முன் சொன்ன கவிதை போலவே இதுவும் சிலரால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு, நம்மால் அனுதாபப்பட்டு கடந்து போகக் கூடிய ஒன்று! டயரிக் குறிப்புகள் பல சமயங்களில் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனி ஃப்ராங் டைரிக் குறிப்புகள் … இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகை இயக்கும் ஆயுதம்

அன்பு - உலகை இயக்கும் ஆயுதம். இன்னும் இன்னும் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அத்தனையும் சொல்லலாம். அன்பு அத்தனை சுத்தமானது. அந்த அன்பு ஏன் அத்தனை சுத்தமாக இருக்கிறதென்றால் நமக்கெல்லாம் அது நம் தாயிடம் இருந்து வந்தது.  ஆம் தானே. தாய்மை என்கிற உணர்வு அவ்வளவு அன்பானது. தந்தையை அறிவுக்கு ஒப்பிடுவார்கள் (பொதுவாக!!). தாய்க்கு தானே அன்பு. நம்முடைய மனித சமூகத்தில் பெரும்பாலும் அன்பு-கருணை வடிவாக தாயானவள் பார்க்கப்பட்டாலும், சமீபத்தில் தென் தமிழகத்தில் ஒரு தாய் தன் மகளையே … உலகை இயக்கும் ஆயுதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..

நாமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறதையெல்லாம் நாமாகவே எழுதிவிடுகிறதில்லை. வேறொருவர் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது. அதை நம் சோம்பேறித்தனம்தான் என்பதா? இல்லையில்லை..... அப்படி முழுவதுமாக சொல்லிவிட முடியாதுதான். ஆனலும் நம் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்தும் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களை பிறர் வெளிப்படுத்துகையில் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்தானே! அப்படித்தான் எனக்கும் இருந்தது. இங்கே வெளியாகியிருக்கிற பதிவு வேறொரு தளத்தில் வேறொரு நபரால் எழுதி பதியப்பட்டது. ஆனாலும் என்ன? நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்கலாம் தானே. நாம் அன்றாடம் … ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..-ஐ படிப்பதைத் தொடரவும்.