அவன்….அவன் மட்டுமே!

அவன்....அவன் மட்டுமே! கடலெனக் கொண்டால் அலைதான் அவன் மடலெனக் கொண்டால் முதல் வரி அவன் உடலெனக் கொண்டால் உயிர்தான் அவன்  * இரவெனக் கொண்டால் முழுமதி அவன் பகலெனக் கொண்டால் ஆதவன் அவன் அகலெனக் கொண்டால் ஒளிதான் அவன்  * மனதில் பெருகும் உறுதியே அவன் தினமும் கேட்டிடும் இன்னிசை அவன் சினத்தினைக் கொய்திடும் கூர்வாள் அவன் * பாலையில் பெய்யும் மழையே அவன் சோலையில் பூத்த புதுமலர் அவன் காலையில் கனவில் வருவது அவன் * … அவன்….அவன் மட்டுமே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாசிப்பிலிருந்து…

சிதறல் வகை பதிவுகளை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று பல கருத்துகள் வந்தபடியால், நீண்ட இடைவெளிக்குப் பின் சிதறல் வகைப்பதிவுகள் இங்கே. மாதம் ஒரு புத்தகம் படிக்க எண்ணியிருந்தேன். தாய், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மலைக்கள்ளன் ஆகியன மட்டும்தான் படித்து முடித்துள்ளேன். இவைதவிர சிறு புத்தகங்கள் தனி. சில புத்தகங்கள் தொடங்கியபடி நிற்கின்றன. எப்படியும், ஜூன் - ஜூலையில் நிலைமை கைக்குள் வந்துவிடும்! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) சிறுநூல் வரிசை என்கிற பெயரில் குட்டிகுட்டி நூல்களை … வாசிப்பிலிருந்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடந்த வாரமும், கவிதையும்….!

வணக்கம். கடந்த வியாழனன்று நண்பர்கள் சேர்ந்து வார்த்தைகளைக் கொண்டு ட்விட்டரில் விளையாடினோம். அவர்களின் தூண்டுதலில் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் வார்த்தைகளின் போக்கு பிடிபட்டு ஓரளவு எழுதிவிட்டேன். அதையெல்லாம் கவிதை என்று சேர்த்துவிடக்கூடாது. குறும் பா (குறும்புப் பா!) என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவே! தொகுப்புகள் என்ற பெயரில் தளத்தின் கட்டுரைகள்/பதிவுகளைத் தொகுத்துள்ளேன். இன்னும் கொஞ்சம் சீரமைக்க வேண்டியிருக்கிறது. டெமுஜின் குறித்த ஆவணப்படம் தொலைந்து விட்டது. எனவே மீண்டும்  தொடர்கள் கொஞ்சம் தாமதமாகலாம். பரவாயில்லை. சிதறல் வகைப் பதிவுகளைத் … கடந்த வாரமும், கவிதையும்….!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே நான் குறைவாக எழுதுவதாக இங்கு  தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே அதிகமாகத் தான் எழுதுகிறேன். இசைப்பா தொடர்ந்து இயங்க எங்களால் ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறோம். அண்ணன் கூட தனது நாற்சந்தியில் நெடுங்காலமாய் எழுதாமல் இருக்கிறார். ஆனாலும் நான் தொடர்ந்து இயங்குகிறேன். ஆம். நண்பர்கள் தரும் ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து கூகுள் ப்ளஸ்-ல் குறும்பதிவுகள்-நடப்புகள்-அனுபவங்கள் ஆகியவற்றை மிகக் குறுகிய வட்டத்திற்குள் (Circles) எழுதி வருகிறேன். அவையெல்லாம் எனக்கே … ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!

நன்றாக எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாழ்த்துகிற தோழர்கள் இருக்கிறவரையில் நல்ல பதிவுகளை இடுவது என் கடன்! முன்னர் வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கவிதை நல்ல வரவேற்பு பெற்றதாலோ, என்னவோ இன்னுமொரு நல்ல மொழிபெயர்ப்புக் கவிதை கண்ணில் பட்டது. அதையும் பகிர ஆசை. முன் சொன்ன கவிதை போலவே இதுவும் சிலரால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு, நம்மால் அனுதாபப்பட்டு கடந்து போகக் கூடிய ஒன்று! டயரிக் குறிப்புகள் பல சமயங்களில் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனி ஃப்ராங் டைரிக் குறிப்புகள் … இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.