கேள்வியும்-பதிலும்…

வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்களுக்கு, வணக்கம். இந்த பதிவில் எனது இரண்டாம் சிறுகதையை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். முதல் கதையான நட்பு வட்டம் முழுக்க முழுக்க எனது ஆத்ம திருப்திக்காக எழுதியது. ஆகவே அது எல்லாத் தரப்பினருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று அவசியம் இருக்காது. அதிலிருந்து முழுமையாக மாறி இக்கதையை எழுதி முடித்தேன். இக்கதையை எழுதத் துவங்கியதும், முடித்ததும் சுவாரசியமான ஒரு விடயம். காரணம் இருக்கிறது. இக்கதையை துவங்கியபோது நினைத்த எந்த சம்பவங்களையும் இதில் எழுதவில்லை. கிட்டத்தட்ட 3-4 விதமான … கேள்வியும்-பதிலும்…-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதைகள் பிறந்த கதை!

பிரபல எழுத்தாளர் ஒருவரின் பேத்தி ஒருவர், சிறுவயதிலேயே சிறுகதைகள் எழுதியிருப்பதாகப் படித்தவுடனே, உள்ளம் சிலிர்த்தபடி ஒரு நோட் (எப்படியும் 40-50 பக்கம் இருக்கும்!) எடுத்துக் கொண்டு கதை எழுதப் போகிறேன் என்று சொல்லி அமர்ந்தேன். இதற்கு முன் நான் அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாமலிருந்ததால் என் அம்மாவும் ஆதரித்தார். திடீரென்று எழுத உட்கார்ந்தால் என்ன எழுத வரும்? கி.ரா (கரிசல் கதைகளின் மன்னர்தான்!) அவர்களின் சிறுகதை ஒன்றின் நூல் பிடித்து கொஞ்சம் கற்பனை தட்டி எழுதினேன். முதல் … கதைகள் பிறந்த கதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.