நிறைய!

அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 2 மாதங்களை நெருங்குகிறது. பதிவுகள் எழுதி. புள்ளிவிபரங்களின்படி மாறுபடலாம் என்றாலும். ஓரளவில் உண்மை இதுதான். நிறைய பயணப்படவும், படிக்கவுமாக இருந்ததால் இந்த இடைவெளி உண்டாகிவிட்டது. எழுதினால் உருப்படியாக மட்டும்தான் எழுதுவேன் என்றெல்லாம் யோசித்து வைக்கவில்லை. எழுதுவதையே கொஞ்சம் நிறுத்திவிட்டு, வாசிப்பிலும், பயணத்திலுமாக இருந்தேன்.அதிகாலை நகரம், காலைநேரத்து சந்தை, கிராமத்து விடியல், அதிகாலைப் பயணம், நள்ளிரவு பயணம், வரலாற்று நூல்களின் அணிவகுப்பு, ம்ம்ம்ம் இன்னும் நிறைய இருந்தன. மே இறுதி வாரத்தின் மாலையில் நண்பன் … நிறைய!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடந்த வாரமும், கவிதையும்….!

வணக்கம். கடந்த வியாழனன்று நண்பர்கள் சேர்ந்து வார்த்தைகளைக் கொண்டு ட்விட்டரில் விளையாடினோம். அவர்களின் தூண்டுதலில் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் வார்த்தைகளின் போக்கு பிடிபட்டு ஓரளவு எழுதிவிட்டேன். அதையெல்லாம் கவிதை என்று சேர்த்துவிடக்கூடாது. குறும் பா (குறும்புப் பா!) என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவே! தொகுப்புகள் என்ற பெயரில் தளத்தின் கட்டுரைகள்/பதிவுகளைத் தொகுத்துள்ளேன். இன்னும் கொஞ்சம் சீரமைக்க வேண்டியிருக்கிறது. டெமுஜின் குறித்த ஆவணப்படம் தொலைந்து விட்டது. எனவே மீண்டும்  தொடர்கள் கொஞ்சம் தாமதமாகலாம். பரவாயில்லை. சிதறல் வகைப் பதிவுகளைத் … கடந்த வாரமும், கவிதையும்….!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..

நாமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறதையெல்லாம் நாமாகவே எழுதிவிடுகிறதில்லை. வேறொருவர் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது. அதை நம் சோம்பேறித்தனம்தான் என்பதா? இல்லையில்லை..... அப்படி முழுவதுமாக சொல்லிவிட முடியாதுதான். ஆனலும் நம் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்தும் ஆதங்கத்தை.....நாம் வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களை பிறர் வெளிப்படுத்துகையில் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்தானே! அப்படித்தான் எனக்கும் இருந்தது. இங்கே வெளியாகியிருக்கிற பதிவு வேறொரு தளத்தில் வேறொரு நபரால் எழுதி பதியப்பட்டது. ஆனாலும் என்ன? நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்கலாம் தானே. நாம் அன்றாடம் … ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிதறல்! -2

சிதறல் வகைப் பதிவுகள் ஓரளவு வரவேற்பைப் பெற்ற காரணத்தால் தொடரும் எண்ணம் இருக்கிறது என்பது இப்பதிவை பார்த்தவுடனே உங்களுக்கு தோன்றியிருக்கக் கூடும். முன்னொரு காலத்தில்(!) எப்போதோ, ஏதேதோ தோன்றி கண்ணில் கண்டவற்றையெல்லாம் ட்ராஃப்ட் (Draft) ஆக்கி வைத்துள்ளேன். அண்ணன் ஓஜஸ் அதைக் கேள்விப்பட்டு “என்ன ஒரு 300 பதிவு தேறுமோ?” என்றார். (என்னிடம் இப்போது உள்ள ட்ராஃப்ட்கள் 297!) அதனாலோ என்னவோ, கதம்ப வகையில் அவ்வப்போது தொடர்-பதிவுகளை எழுத விருப்பம். எப்போதோ ரசித்த கவிதை: விளக்கு வெளிச்சம் … சிதறல்! -2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்கான குறிப்புகள்!

புத்தகம் என்றொரு நண்பன் இல்லாவிட்டால் நம் வாழ்வின் அர்த்தமே முற்றிலும் போய்விடும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. நம் எனச் சொல்லி உங்களையும் எதற்காக சேர்த்திருக்கின்றேன் என்றால், உங்களுக்கு கட்டாயம் வாசிப்பின் மகத்துவம் தெரியும் என்பதால். நேரடியாகவே சொல்லி விடுகிறேன். புத்தகங்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம். பொருளாதார ரீதியில் எனக்கு பலம் இருந்தால் இந்நேரம் ஒரு பெரிய நூலகமே கட்டியிருப்பேன்! (மிகைப்படுத்தப்பட்ட கற்பனையைக் கேள்விப்பட்டிருக்கலாம். தற்போது வாசிக்கிறீர்கள்!!) சமீபத்தில் திருச்சி நகருக்கு செல்ல நேர்ந்தது. … நமக்கான குறிப்புகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.