பல நேரங்களில், பல்வேறு சூழல்களில், உணர்ந்தவை, உணராதவை, கேட்டவை, பார்த்தவை என வகைதொகை இல்லாமல் நான் எழுதியவையே இப்பக்கத்தில் இருக்கின்றன. கவிதைகள் என்றெல்லாம் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதென்றாலும் சில அந்த வகைக்குள் அடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மின் வடிவில் இல்லாத என்னுடைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் இப்பக்கத்துள் அடக்க விருப்பம்.

மழையல்ல இது. மழைக்கு முந்திய மென் தூறல்.
பெருமழையில் நனைதலில் சுகம் கண்டவர்கள் இங்கேயே வெளியேறிவிடலாம்.

************************************************************************************************

அவனுக்கு அண்ணன் எழுதியது:

இறுகிய மனதும் உருகும்- அவன் மொழி கேட்டால்.
கடக்கின்ற தூரங்கள் குறையும்- அவன் வழி நடந்தால்.
சுமக்கின்ற பாரங்கள் குறையும்- அவன் துணை கிடைத்தால்.

உச்சத்தில் கொதித்த கோபத்தையும், உற்சாகமாய் மாற்றியது நீயல்லவா!
மிரட்டினாலும், விரட்டினாலும் நானா பணிவேன்?
உன் அன்பை மட்டுமே நகையாய் அணிவேன்!
அவனுக்காக நான் எழுதிய சொற்களுக்கான
அர்த்தங்கள் அவனாலேயே சிறப்பிக்கப்பட்டன.

அவன் உதிர்க்காத சொற்களின் நீளம் நான்.
நான் பறிக்காத மலர்களின் வாசம் அவன்.

அன்புள்ள தம்பிக்காக அண்ணன் எழுதியது.

************************

வித்தியாசங்கள்:

நான் முடித்ததை நினைப்பவன்.
அவன் நினைத்ததை முடிப்பவன்.
அவ்வளவுதான் அவனுக்கும் எனக்கும் வித்தியாசம்.

-Coming Asap!

உணவு மேசை:

உணவு வேளைகளுக்கு முன்பாகவோ, பின்பாகவோ தோன்றியவை
பெரும்பாலும் ட்விட்டர் கீச்சுகளுக்காக எழுதியவை

பசிக்கிற நேரமிது!
ருசிக்கிற தேனமுது!
சோறுதானே என்றாலும்
யாரு என்ன சொன்னாலும்
கவலை இல்லை என்பேனே!
கவளம் பல உண்பேனே! 

********

இராத்திரி சாப்பாடுக்கு எத்தனை கூப்பாடு?
இதெல்லாம் எம்பாடு! மெட்டு வச்சு நீயும் பாடு!!
*****************************
மழைப் பேச்சு!
பல்வேறு மழைச் சிதறல்களை, பெருமழைப் பொழுதுகளைச் சுமந்து எழுதியவை. பெரும்பாலும் 140-க்குள் முயற்சித்தவை. அதனாலேயே தரத்தில் குறைந்தோ அல்லது உயர்ந்தோ இருக்கலாம்.

கண்ணைப் பறிக்கும் மின்னலாம்!
கண்டுகளிக்க ஆவலாம்!
வானில் வெள்ளைப் பின்னலாம்!
வண்ண மழைத் தூவலாம்!!

**************

கதவடைக்குது காத்து!
மழையைக் கொஞ்சம் காட்டு!
பரபரக்குது நெஞ்சம்!
துறுதுறுக்குது கொஞ்சம்!!

***************
மழை பொழிகையில்தான் எத்தனை ஆனந்தம்!
கட்டிடங்களைக் கண்பார்வையிலிருந்து மறைக்கும் மழை!
மண்ணில் விழும் மழைத்துளி இரைச்சல் அல்ல இசை!

காலையென்றாலும், மாலையென்றாலும்
மனதை வசீகரிக்கத் தவறுவதில்லை.
மழையும் சூடான தேநீரும்!

***********

சரம் மாறியாகப் பொழிகிறதா?
சரமாரியாகப் பெய்கிறதா?
மழை.
***************

இமைதொடும் சிறுமழைத் துளிகள்!
இலைகளில் கிளைகளில் நிலம் தொட எத்தனிக்கும் நீர்த்திவலைகள்!
சன்னலோர பேருந்துப் பயணத்தை ரம்மியமாக்கும் மழைச்சாரல்கள்!
குரலெடுத்துப் பாடத் தூண்டிடும் இசையென வீழும் துளிகள்!
கை விரல் நனைத்துத் தெறிக்கிற நீர்த்துளிகள்!
செந்நிலம் நனைத்து வண்ணம் குழையும் செந்நீர்த்துளிகள்!
வண்ணப் பூக்களின் அழகினைக் கூட்டும் முத்துத்துளிகள்!
எண்ண ஓட்டத்தின் வேகம் கடக்கும் பெருமழைத்துளிகள்!

*****************

ட்விட்டரில் அதிகம் மீள்கீச்சு செய்யப்பட்ட எனது கீச்சுகளுள் இதுவும் ஒன்று!

ஒவ்வொரு பெருமழைக்கும் முன்போ, பின்போ ஒரு தேநீர்க்கோப்பையின் வெப்பம் வசீகரிக்கிறது…!

https://twitter.com/iamthamizh/status/377440067343486976

தேநீர்க் கோப்பைகள்:

தேநீரை அருந்துவதும், அதுகுறித்து எழுதுவதும் மிகப் பிடிக்கும்.  அவ்வாறானவை…

Coming Asap!

சந்தப் பாடல்கள்:

சில திரையிசைப் பாடல்களின்பால் விருப்பங்கொண்டு, அவற்றின் ஒலிநயம் கெடாமல் புதுவரிகள் இட்டு எழுதப் பிடிக்கும்…

தோனி படத்தில் இடம்பெற்ற “விளையாட்டா படகோட்டி” பாடலின் ஒலிநயத்தில் என் வரிகள். நீண்ட நாட்கள் கழித்து 20 நிமிடத்தில் எழுதிய பாடல்.

பாடல் இதோ!

அதிகாலை எழுந்தாலே
மனசெல்லாம் உற்சாகம்!
மழை பொழிந்த பாலை போல்
மனம் மாறுதோ?

மலைபோல வரும் வேலை
மடுவைப் போல் குறையாதா?
அலைபோல் தான் துன்பமெல்லாம்
அது உனக்கு புரியாதா?

எண்ணம் போல வாழ்க்கையடா!
ஏத்துக்கணும்.

தொட்டு விடும் தூரம்தானே
வெற்றியென்னும் எண்ணம் போதும்!
குட்டிக் குட்டிக் கனவுகள்தானே
வாழ்க்கையடா!

வலிகள் சொல்லும் கதைகள் எல்லாம்
வழியில் சொன்ன கதைகள் இல்லை
புரிந்து கொண்டால்  வாழ்க்கை முழுக்க
இன்பமடா!

கற்ற கல்வி யாவிலுமே
பெற்ற அறிவு உனதாகும்
மற்றதெல்லாம் துணை சேரத்தான்
கனவெல்லாம் நனவாகும்.

எப்போது இலக்கை அடையும் கனவு…..கனவு?

தென்றல் வந்து தீண்டும்போதும்
வண்டல் மனதை வருடும்போதும்
கலையாத உள்ளம்தானே
கரை சேரும்!

பறக்கிற பொழுதுகள் எல்லாம்
சிறகாகும் உன் மனதோடு
புது வெள்ளம் போல நீயும்
நடைபோடு

எழுதித்தான் தீர்த்தாலும்
பழுதின்றிப் போகாது
தழுவித்தான் தீர்த்தாலும்
அன்பென்றும் குறையாது

இப்போதும் உன்னைச் சேரும் அன்பு….அன்பு!

One thought on “மென் தூறல்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s