பெண்கள் -ஆண்கள் ஒரு பகிர்வு.

இந்த தளத்தில் நான் பதிகிற ஒவ்வொரு பதிவும் சிறப்பானதாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு கருத்தை, கொள்கையை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும் என்றே விரும்புவேன். அவ்வப்போது சில புத்தகங்கள், என் பயணங்கள், அனுபவங்கள் பற்றிய குறிப்பும், நானே எனக்காக எழுதி அழகு பார்த்த கதைகளும், கவிதைகளும், கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கே எனக்கான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளடக்கியதாக இந்த தளத்தை மாற்றிக் கொள்ள பிரயதனப்படுகிறேன். கடந்த (பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்!) இரு நாட்களாக  கவிதைகளை முயற்சிக்கிறேன். சூழலும் தோதாக இருக்கிறது. … பெண்கள் -ஆண்கள் ஒரு பகிர்வு.-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின் வாசிப்பு

மின் வாசிப்புக்கென இன்னும் சில... தமிழ் இணைய உலகில், வாசிப்பிற்கென எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. நான் இங்கே உங்கள் மின்வாசிப்பிற்கென தேர்ந்து தருவது, நான் படித்த சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்களில் சில மட்டும்.. இது உங்களுக்கு மின்வாசிப்பில் புது அனுபவத்தைத் தந்து விட்டால் அதுவே போதும். இவ்வாண்டு என் முதல் மின்வாசிப்பாக நான் எடுத்துக்கொண்டது ஜிரா-வின் நாகமாணிக்க வேட்டைதான்... இவ்வாண்டு நான் படித்து முடித்த முதல் நூல் இது. பத்து குட்டி அத்தியாயங்கள் கொண்ட மின்னல் வேகத் … மின் வாசிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாறாத மாற்றம்!

வணக்கம். கிட்டத்தட்ட கால் விழுக்காடு அளவில் பதிவுகளை எழுதிவிட்டேன். ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவின் காரணமாய் என் எழுத்திலும், நடையிலும் மாற்றங்கள் வருவதாய் நலவிரும்பிகள் மற்றும் பலரும் கூறினார்கள். வரும் செப்டம்பர் முதலாய் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதை மின்னஞ்சல்வழி நீங்கள் படிப்பதாய் இருந்தால், தயைகூர்ந்து தளத்தை நேரடியாக பார்க்கவும். காரணம் சில சோதனை மாற்றங்களைக் காண முடியும். மேலும் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் மேலும் செம்மைபடுத்த ஆவலாய் உள்ளேன். புதிய தொடர்கள் … மாறாத மாற்றம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தந்தையோடு..-3

பெரியார் அவர்களின் அறிவுக் கூர்மையானது; சுறுசுறுப்பானது; நினைவாற்றல் மிக்கது; ஓய்வை ஏற்காதது; எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ தான் இருப்பார். புதிது புதிதாக அறியக் கூடியவற்றை அறிந்து – தெளிவதிலே அவருக்குப் பேரார்வம். இயல்பிலேயே அவரிடம் காணப்பட்ட ஊக்கம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி, மடியின்மை ஆகியவையே, முதிர்ந்த வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னரும் தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத போதும், தமது குறிக்கோள் வெற்றி பெற, நாடு நகர் பட்டி தொட்டி எங்கும் … தந்தையோடு..-3-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈஃபிள் கோபுரம்!!

முதலாம் உலகப் போரின்போது (1914-1918) பாரிஸ் நகரில் கிளிகள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. ஈபிள் கோபுரத்தில் வைக்கப்பட்ட அந்த கிளிகள், தங்களின் சிறப்பான கேட்புத்திறன் மூலமாக வெகு தூரத்தில் எதிர்நாட்டு விமானங்கள் வரும்போதே சத்தம் எழுப்பி பாரிஸ் நகர மக்களை எச்சரித்தன. 19-ம் நூற்றாண்டில், பிரெஞ்சு எழுத்தாளர்களான கை டி மாப்பசந்தும், எமிலி ஸோலாவும் சேர்ந்து ஈபிள் கோபுரம் அசிங்கமாக நின்றுகொண்டிருப்பதாகப் பிரச்சாரம் செய்தனர்.மேலும் அது பயனேதுமில்லாமல் பூதாகரமாக நிற்பதாகவும்,அது பிரெஞ்சு கலைப் பண்பாட்டைப் பாதிப்பதாகவும், எனவே … ஈஃபிள் கோபுரம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.