தீராத நினைவு

மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை. எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் … தீராத நினைவு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராக் கனா -08

#08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். … தீராக் கனா -08-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராக் கனா -07

#07 கிளம்பியாயிற்று. நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும். நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா … தீராக் கனா -07-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராக் கனா -06

#06 நடக்க ஆரம்பித்து ரொம்ப தொலைவெல்லாம் இல்லை. ஒரு பேருந்து நிறுத்தத்திலிருந்து இன்னொரு பேருந்து நிறுத்தம் வரை நடக்க விருப்பம் கொண்டு நடந்தே போனேன். மரத்தினின்று பூக்கள் சிதறிக்கிடந்தன. இன்னுமா சாலையை சுத்தம் செய்யவில்லை என்று தோன்றவிடாதபடிக்கு ஒரு அழகுணர்ச்சி அவ்விடத்தே இருந்தது. வண்டிகள் அவ்வப்போதே வந்து சென்றன. இன்னும் நெரிசலுக்கு நேரமுண்டு. யாரோ ஒரு பெண்மணி கையில் புத்தகத்தோடு நின்றிருந்தாள். சத்தியமாக அது பாட நூல் அல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அவள் முகம் மங்கலான … தீராக் கனா -06-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராக் கனா-05

#05 இரவாகி விட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. உறக்கம் வந்த மாதிரியே உணர்வில்லை. அறையை விட்டு வெளியேறி நடந்தேன். அந்த நிசப்தம் ஒரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் என் பாத ஒலிகள் எனக்கே சங்கடமாய் இருந்தன. அந்த நிசப்தத்தில் என் காரணமாய் ஏற்பட்ட அதிர்வுகள் தனியே ஒலித்தன. என்னால் மற்றவர்கள் உறக்கம் பாதிக்கப்படக் கூடாதென மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். அலைபேசியில் பாட்டு கேட்க முடிவெடுத்து இசை என் காதுக்குள் மட்டும் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியது. … தீராக் கனா-05-ஐ படிப்பதைத் தொடரவும்.