அன்புள்ள அப்பாவிற்கு…

அன்புள்ள அப்பாவுக்கு, தங்கள் அன்பு மகன் எழுதிக்கொள்வது, உங்களுக்கும் கடிதம் எழுதிவிட்டால் இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்துவிடும். உங்களுக்கு முதல் கடிதமாக எழுத எனக்கு விருப்பமில்லை. அதற்கு இரண்டே காரணங்கள்தான். ஒருவேளை இக்கடிதம் பெரிதாக, நீண்டு செல்லலாம். இக்கடிதம் உங்களுக்கு முதல் கடிதம் அல்ல. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏற்கனவே நான் உங்களிடம் இரு கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன். இன்னும் 2 கடிதங்கள் எழுதினேன். அவை உங்களை வந்து சேரவில்லை. … அன்புள்ள அப்பாவிற்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்புள்ள அம்மாவுக்கு,

அன்புள்ள அம்மாவுக்கு, தங்கள் அன்பு மகன் எழுதியது. தம்பிக்கான கடிதம் அனுப்பப்பட்டது. இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் உங்களுக்காக ஒரு கடிதம் எழுதுவது எனக்கான விருப்பம். உலகில் அம்மாக்களை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனையோ ஆண்டுகள் உங்கள் அருகிலேயே இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் உங்களைப் பிரிந்திருந்தால் மனம் வலிப்பதில்லை. என்னுடைய எண்ணம் யாவிலும் நீங்கள் வழி நடத்துவீர்கள் என்கிற எண்ணம் எனக்குண்டு. வீண் வார்த்தை அலங்காரங்களால் உங்களைப் புகழ்வது மோசமான செயலாக நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் … அன்புள்ள அம்மாவுக்கு,-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்புள்ள தம்பிக்கு…

அன்புள்ளதம்பிக்கு, அண்ணன் எழுதியது. உனக்காக நான் ஒரு கடிதம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணித் துவங்குகிறேன். எவராலும் சுலபமாக புரிந்துகொள்ளப்படாத சகோதரர்கள் நாம் என்று நினைக்கிறேன். நாம் உண்மையிலேயே நல்ல சகோதரத் தன்மையோடு இத்தனைகாலமும் வாழ்ந்துள்ளோமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். இருவருக்குமே முதிர்ச்சியில்லை என்று சொன்னால் அது கொஞ்சம்தான் உண்மை. காரணம் இணக்கமான சகோதரர்களை நம் வாழும் காலத்திலேயே கண்டுள்ளோம். நம் இருவர் மீதும் நம் பெற்றோர் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டுள்ளார்கள். … அன்புள்ள தம்பிக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.