தீரா வானத்தின் கதை -3

1 2 எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.முதலிரு அத்தியாயங்களை மனம் போன போக்கில்தான் எழுதத்தொடங்கினேன். கதைக்கான நடை அதுவாக வெளிப்படும்போது மறுபடியும் திருத்திக் கொள்ளலாம் என்பதே திட்டம்.மூன்றாம் அத்தியாயம் எழுதும்போது ஒரு யோசனை வந்தது. கி.ரா எழுதிய 'கன்னிமை' சிறுகதையின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை இதே கதையில் வேறு மாதிரி பயன்படுத்திக் கொண்டேன். எழுத எழுத அந்த முறை மிகவும் எளிதாக்கியது. Narrative முறையில்தான் எப்போதும் கதை சொல்ல எனக்குப் … தீரா வானத்தின் கதை -3-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீரா வானத்தின் கதை -2

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.தீராக் கனா கதை யோசித்த காலத்திலேயே நிறைய கதாபாத்திரங்கள் வைத்து எழுதும் யோசனை இருந்தது. அந்த கதைக்கு அது அவசியமற்றது என புரிந்ததுமே இரண்டே பாத்திரங்கள் கொண்டு சிறியதாக எழுதி முடித்தேன்.தீரா வானம் தொடங்கியபோதே அதை பெரிதாக எழுதிப் பார்க்கும் எண்ணம் இருந்தது. நிறைய கதை மாந்தர்களை இக்கதை தாங்கும் என தோன்றியது. நாவல்களில் கதை மாந்தர்களை பயன்படுத்தும் விதம் பற்றி சற்றே படித்தேன். கி.ரா எழுதிய முன்னுரை ஒன்று … தீரா வானத்தின் கதை -2-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீரா வானத்தின் கதை

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் சில பத்திகள், சில உரையாடல்கள் மட்டும் எழுதி தீரா வான் என்று தலைப்பு யோசித்தேன். அதற்கு சில வாரங்கள் முன்பு தீராக் கனா எனும் நீள்கதை ஒன்றை எழுதி முடித்திருந்தேன். அம்மின்னூல் 2018 பிப்ரவரியில் வெளியானது.இனி எழுதும் கதை குறைந்தது 100 பக்கங்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற கதையொன்று யோசிப்போம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்போதைய மனநிலை அப்படி. அதே காலத்தில் படித்த … தீரா வானத்தின் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராத நினைவு

மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை. எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் … தீராத நினைவு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீராக் கனா -08

#08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். … தீராக் கனா -08-ஐ படிப்பதைத் தொடரவும்.