தீராத நினைவு

மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை.

எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் எழுதிய கதையில் அத்தியாயமே கிடையாது.
ஏறக்குறைய ஓராண்டு காலம் அந்த கதையையே நான் தொடவில்லை. அதன் பின் எழுதிய இரண்டு அல்லது  மூன்று சிறிய கதைகளையும் நான் பதிவிடவில்லை. நெல்லிமரம் எனும் கதை மட்டும் இங்கே பகிர்ந்தேன்.
கிடைத்த சொற்பமான நேரங்களில் கொஞ்சம் வாசித்தேன். மீண்டும் இக்கதையை அத்தியாயம் பிரிக்குமளவு கொஞ்சம் விவரித்து எழுதினேன். எழுத எழுதத்தான் கதையின் மையம் எனக்கே விளங்கியது. ஆக, முன்னர் எழுதியது வீண் என அப்போதுதான் புரிந்தது. தோழர்களுக்கு நன்றி.
க்ளைமாக்ஸ் இல்லாத கதையைப் படித்து முடித்ததும் என் நண்பன் அர்ஜூன் முதலில் கேட்டது – தலைப்பு எங்க?
அப்புறம்தான் தலைப்பு யோசித்தோம். எனக்கு இந்த தலைப்பு  (தீரா கனா) சரியாக இருக்குமெனத் தோன்றியது. அப்புறம் இலக்கணமாய் யோசித்து ’க்’ சேர்த்துக் கொண்டோம்!
நிறைய திருத்தங்களை அர்ஜூன் சொன்னான். அத்தியாய எண் ஒவ்வொன்றிற்கும் # வை என்றான். ஏன் இப்போதெல்லாம் மேற்கோள் குறிகளுக்குள் உரையாடல்கள் எழுதுவதே இல்லை என்று கேட்டான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கு என்றான்.
அவன் மகிழ்ந்து சொன்னான் என்பதாலேயே உடனே ஒவ்வொரு அத்தியாயமாக இதே தளத்தில் பதிவிட்டேன்.
அவன் இதை மின்னூலாக்கினால் நன்றாக இருக்குமென்றான். கண்டிப்பாக செய்யலாம் என நானும் சொன்னேன்.
கடந்த ஆண்டு  இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துவிட்டான்.
இன்றைக்கு இந்த நூலைப் படிக்க அவனில்லை என்பதே பெரும் வலிதான். ஆனாலும் நான் எழுதுவதைப் படித்து, தட்டிக்கொடுத்தவன் அவன். என்னைக் காட்டிலும் என்னை நம்புகிற தோழர்கள் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவன் அர்ஜூன். இந்நேரம் அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். குறைந்தபட்சம் ஏண்டா க்ளைமாக்ஸை இப்படி எழுதியிருக்கிறாய்? என்று திட்டியேனும் எழுதியிருப்பான்.
அவனுக்காக சமர்பிக்கும் அளவு இந்நூல் உசத்தி இல்லை. நியாயமாக நான் எழுத நினைக்கும் ஒவ்வொரு நூலும் அவனுக்கானதும் கூட .
கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு அட்டைப்படம் தந்த நண்பன் அருணுக்கு நன்றி. சந்தித்த நாள் முதலாக நான் கேட்காமலேயே எனக்கு உதவும் தோழர் அரவிந்த்-க்கு வெறும் நன்றிகள் போதாது.
Miss You Arjun.
Advertisements

5 thoughts on “தீராத நினைவு

 1. படித்து முடித்துவிட்டேன். மிக ஆழமான கதைக்கரு. எளிமையான தமிழில் நெருடல் இல்லாத எழுத்து நடை. உறக்கம் மற்றும் விழிப்பு தாண்டி தீராக் கனவு. பாராட்டுகள்.

 2. என்னுடைய மின்னூல் “கொங்கு மண்ணின் சுவாமிகள்” கட்டுரைகள் இதே ஃபிப்ரவரி மாதம் Freetamilebook இல் வெளியிட்டுள்ளார்கள். நேரமிருப்பின் படித்துப்பாருங்கள். கருத்தினையும் பதிவிடுங்கள்.

 3. வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s