முன் கதை!

அமைதியும், நிதானமும் சமயங்களில் எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொடுத்து விடுகிறது. கிட்டத்தட்ட செப்டம்பர் 16-க்குப் பின் நான் இங்கு எழுதவில்லை. திடீரென எழுத வேண்டாம் என தீர்மானித்துவிட்டேன் என வைத்துக்கொள்ளலாம்.

நெடுநாள் கழித்து எழுதினால் செமையாக எழுத வேண்டும் என்று ஏதும் விதி இருக்கிறதா? என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அப்படி எழுதத் தோன்றவில்லை. உண்மையில் இரண்டு காரணங்கள் உண்டு.

கடந்த ஏழு எட்டு மாதங்களாக நடந்த நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் அனைத்தையும் நான் எழுதிக் கொண்டேதான் இருந்தேன்.
இரண்டாவதாக, அமைதி, நிதானம் என்றெல்லாம் சொன்னேன் அல்லவா அப்புறம் எப்படி ஆர்ப்பாட்டமாக எழுதுவதாம்?

அப்பா, என் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டு எடுத்த ஒரு முடிவின் காரணமாக நெடுந்தூரம் பயணித்தேன். அறியாத ஊரில் அப்பா ஒருநாளின் சில மணிநேரங்களை எனக்காக செலவழித்தார். அந்த கணத்தில் இருந்து எனக்கான அனுபவங்கள் ஒவ்வொன்றாக பெற ஆரம்பித்தேன்.

அதிகம் பேச மாட்டேன் என்கிற கருத்தை நானாகவே உடைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ் மட்டுமே பல ஆண்டுகளாக பேசி, சிரித்து கழித்த எனக்கு ஆங்கிலம் மட்டுமே பேசியாக வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்தேன்.

ஆனால் நடந்ததது – ஹிந்தி பேசினால் போதும் என்கிற நிலை. எனக்குத் தெரியாதே! என்றால் கற்றுக்கொள் என்றார்கள். ஓரளவுக்கு தெரிந்த இந்தியை வைத்துக்கொண்டு ஏதும் செய்ய முடியாமல் இருந்தேன்.

நண்பர்கள் சிலர் என்னோடு தொடர்ந்து பேச சில நாட்கள் ஆகின. சில வாரங்களில் ஓரளவு நண்பர்களைப் பெற்றேன். தினசரி பேசிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் கிடைத்தன. மற்ற மொழிக்காரர்களின் கலாச்சாரப் பரிமாற்றங்கள் வியக்க வைத்தன.

மொழி பேசும் விதம் கூட வித்தியாசம் உண்டு. தமிழ் மட்டும் விதிவிலக்கா என்ன? ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒவ்வொரு மாதிரியான தமிழ் உண்டல்லவா?

தெலுங்கானா தெலுங்கு, திருச்சூர் மலையாளம், போபால் ஹிந்தி (சொல்லப்போனால்,  ஹிந்தியின் பல்வேறு வடிவங்கள்) உள்பட பல்வேறான மொழிநடைகளை சுற்றியிருப்பவர்கள் பேசியும் – வித்தியாசம் எப்படி என எடுத்துக்காட்டினர்.

ஒன்றிரண்டு பேர் என்னிடம் தினம் தமிழ் பேசக் கிடைத்தது என் பாக்கியம். நானும் சக தோழரும் பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு தோழர் கேட்டார் – “எந்த மொழியில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?”

தமிழ் மொழியே தெரியாத பலரும் இருக்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனக்கு குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகள் குறித்த தெளிவு இருக்கிறது என நம்பினேன். அதற்கும் ஆப்புதான். தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் இடையேயான ஒற்றுமைகள் என் நம்பிக்கையை குலைத்தன.

முதலில் மொழிகளைக் கற்போம் என களத்தில் நிதானமாக இறங்கினேன். மணிக்கணக்கில் சுற்றி பத்து பேர் தெலுங்கில் பேசிக்கொண்டிருக்க அமைதியாக ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனிப்பேன். அவர்களின் உடல்மொழி சமயங்களில் பொருள் உணர்த்தும். எனக்கு ஏதும் ஐயம் ஏற்பட்டால் கேட்டவுடன் விளக்குவார்கள். தெலுங்கு, மலையாள திரைப்படங்களை மொழிமாற்றக் குறிப்புகளோடு கண்டு வந்தேன்.

என் மொழி கற்கும் படலம் தாண்டி நிறையவே கற்றுக்கொள்ள நேர்ந்தது. நிறைய பயணிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்புகிறேன்.

அவர்களால் நான் வளர்ந்தேன். கற்றேன். இன்னும் என்னென்னமோ. எப்போதெல்லாம் எனக்கு உதவி தேவைப்பட்டதோ அப்போதே உதவினார்கள். நிறைய அனுபவங்களைத் தேடிப் பெற்றேன்.

சில புத்தகங்கள் வாசித்தேன். தினமும் என்ன தோன்றியதோ அதை முடிந்தமட்டும் எழுதி வைத்துக்கொண்டேன். இங்கும் தொடர்ந்து எழுத விருப்பம். அனுபவங்களுக்கு என்ன குறைச்சல்?

எழுதித் தீர்க்கத்தானே இந்த இடம்…

இது என் நண்பர்களுக்காக நான் எழுதியது.

லிங்கா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இந்தியனே வா!’ பாடலின் சாயலில் அமைக்கப்பட்ட வரிகள் நான் எழுதியது.

வாழ்த்துகிறேன் பார்!
புது நாளொன்றை துவங்கிட நீ பார்..

போற்றுகிறேன் பார்
இது உனக்கென்று எழுதியது தான்

கரைகளைப் போலே கனவாகும்
புது அலையாகித் தொட நீயும் வா!

ஏற்றுகிறேன் பார்
நீ தொட்டதெல்லாம் பொன்னாகுமே

ஒரு கனவினைக் கடத்தி
கடமையைக் கிடத்தி
புது எதிர்காலம் ஒன்றினை எட்டுவோம்

முகிலாகச் சேர்வோமா
மழையாகப் போவோமா
விதையாக வீழ்வோமா
விண்ணாழப் போவோமா
கதையாகப் படிப்போமா
கனவெல்லாம் முடிப்போமா
முடிப்போமா?

கண்ணீர் இல்லாமல் வெற்றிகள் கிடையாது
வெற்றிகள் இல்லாமல் வாழ்க்கை முடியாது
தானாக தேனாக நீ பாடு

முகிலாகச் சேர்வோமா
மழையாகப் போவோமா
விதையாக வீழ்வோமா
விண்ணாழப் போவோமா
கதையாகப் படிப்போமா
கனவெல்லாம் முடிப்போமா
முடிப்போமா?

கொள்ளை இன்பங்கள் நமக்கென இருக்கிறது
நீ வர வேண்டும்

பட்டம் பலவும் நீ பெற வேண்டும்
நம் நட்பில் நாளும் நம்பிக்கை தர வேண்டும்

முகிலாகச் சேர்வோமா
மழையாகப் போவோமா
விதையாக வீழ்வோமா
விண்ணாழப் போவோமா
கதையாகப் படிப்போமா
கனவெல்லாம் முடிப்போமா
முடிப்போமா?

சற்று பொறு வெற்றி பெறு
உலகில் சாதிக்க நூறிருக்கு
வா! வாழும் காலம் அது சிறியதுதானே
அதனுள் வென்றால் அது பெரியதுதானே

நட்பை பெரிதாகச் செய்வோமா

முகிலாகச் சேர்வோமா
மழையாகப் போவோமா
விதையாக வீழ்வோமா
விண்ணாழப் போவோமா
எதையேனும் செய்வோமா
குறி ஒன்றை எய்வோமா
புது உலகைப் படைப்போமா
புகழ் மாலை கொள்வோமா

கதையாகப் படிப்போமா
கனவெல்லாம் முடிப்போமா
முடிப்போமா?

இந்த தளத்தில் எழுத ஆரம்பித்து மூன்றாண்டுகள் முடிந்து, நான்காவது ஆண்டு இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.  தொடர்ந்து எழுதுவேன் என நம்புகிறேன்.

Advertisements

2 thoughts on “முன் கதை!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s