இந்நாள்!

வணக்கம்.

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன்.

இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா! என்றுதான் சொல்ல முடிந்தது.

நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. அக்கறையோடு உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழி!

இன்றைக்கு அப்பா சொன்னது. சில மாதங்கள் முன்பிருந்தே, ஏன் பல வருடங்கள் முன்னரே இதைத்தான் சொல்லியிருக்கிறார். கடினம் என்பதை எட்டுவதே கடினமாக இருக்கிறது.

தளத்தை ஆரம்பிக்கையில் என்னவெல்லாம் எழுத நினைத்தேனோ அதில் ஒரு பத்து விழுக்காடு எழுதியிருப்பேன். அதிலும் எழுத நினைக்காதவற்றைதான் அதிகம் எழுதினேன். 120 பதிவுகளைத் தாண்டி எழுதியிருக்கிறேன். 2013 ஆண்டின் துவக்கத்தில் தினம் ஒரு பதிவு எழுதலாம் என்று திட்டமிட்டேன். இரண்டோ, மூன்றோ தொடர் பதிவுகள் எழுதிய தருணம். நான்காவது நாள் பல் துலக்கும்போது நண்பர் வந்தார். இன்னைக்கு என்ன போஸ்ட் என்றார். நாளொரு பதிவு திட்டம் இனிதே கைவிடப்பட்டது. மாறாக இன்னொரு தோழர் சொல்லியதன் பேரில் இன்னொரு பக்கம் எழுதி வருகிறேன்.

இனிமேல் என்னுடைய பரிசோதனை முயற்சிகளும், சொற்பமான-நீளமான அனுபவங்களும், ஓரளவேனும் தேர்ந்த (நேர்த்தியான தமிழ்க்) கட்டுரைகளும் மட்டுமே* இங்கே இடுவதாக உத்தேசம். *- மாறுதலுக்குட்பட்டது.

எல்லோருக்கும் நன்றி. இதைத் தாண்டி விரிவாகச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னேன் அல்லவா!

மொத்தமாய் 4-5 சிறுகதைகள் கைவசம் உள்ளன. கவிதை முயற்சிகள், சந்தப் பாடல்கள் என தனிப்பிரிவுகள் உண்டு. குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள், தொழில்நுட்பம், வரலாறு, மொழியியல் எதையும் விடுவதாயில்லை. ஆனால் காலம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

அதிகம் என்பதைக் காட்டிலும் மிக அதிகம் தேவைப்படுகிறது!

சரி விடுங்கள்….

வழக்கம்போல என்னுடைய பரிசு இம்முறை (யும்) பாடல் வடிவில்!

வழக்கம்போல (இதுவும்) ராஜாவின் பாடல். (க்ளூ: இரு பாடகர்களில் ஒருவர் ஸ்ரேயா கோஷல்! )

என்னை அதிகம் வேலை வாங்கிய பாடல். ஏறத்தாழ அரை மணிநேரம் எழுதியிருப்பேன். ஆனால் மூன்று- நான்கு வாரங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கேற்ற வார்த்தைகள் அமைவதில் சில சிக்கல்கல் இருந்தன. பாடலின் இசையை  மட்டும் எடுத்துக்கொண்டு தீம் நானே எழுதியது. பாடலைக் கண்டுபிடித்தால் பாட இனிமையாக இருக்கும். வெறுமனே படித்தாலும், இனிமையாகவே (எனக்கு) இருக்கிறது.

பாடலைக் கண்டுபிடித்தவர்கள்.. கருத்தாக குறிப்பிடலாம்.

உந்தன் எண்ணத்தில்
வண்ணம் சேர்க்கிறாய்
சொந்தம் யாவையும்
ஒன்று சேர்க்கிறாய்  எப்படி?

பழைய நினைவுகள்
புதிய கனவுகள்
இவை யாவும் ஒன்றென
மாற்றிச் செல்கிறாய் எப்படி?

கனிச் சுவை போல
மெல்லச் சிரிப்பாயே!
தனித் திறனாலே
உளம் ஈர்ப்பாயே!
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

சொற்கள் யாவிலும்
உள்ளம் தொடுகிறாய்! –இனித் தேனாய் வா!

(உந்தன் எண்ணத்தில்…)

இனியன சொல்லிச் சென்றாய்
புதியன கற்றுத் தந்தாய்
மறந்திடும் நினைவு யாவும்
மனதினில் பதியச் செய்தாய்

ஒரு குன்றின் மீது
இரவு இட்ட ஒளியாய்
பெரு மரத்தின் மீதில்
உள்ள ஒற்றைக் கனியாய்

தன்னிலை மறந்தெனை
உவகையில் கொல்கிறாய்
என்னிலை சொல்லவே
வார்த்தைகள் இல்லையே

புது காற்றாக பெரும் ஊற்றாக
மனங்கள் யாவிலும் மலர்ச்சி செய்கிறாய் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்…)

கணிப்புகள் கடந்து சென்றாய்
பணித்திடும் நிலையைக் கொண்டாய்
சினத்தினைப் போக்கி வைத்தாய்
மனத்தினில் உயரே நின்றாய்

மலர்ந்த பூவைப் போல
உன் உள்ளம் என்றும்
முதிர்ந்த கனியைப் போல
உன் சொற்கள் போதும்

பாதைகள் யாவிலும்
வழிகளைத் தருகிறாய்
பயணங்கள் யாவிலும்
துணையென வருகிறாய்

மழைத் துளியாக தேன் சுவையாக
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்… )
   

மூன்றால் ஆண்டில் தமிழ்!

வாழ்த்துங்கள் -வளர்கிறேன்!

நன்றி.

தோழர் ஒருவரின் கடிதம் ஒன்றை மீண்டும் படித்தேன். புத்தக வாசிப்பு அனுபவம் ஒன்றினை எழுதச் சொல்லியிருக்கிறார். அடுத்த பதிவாகக் கொண்டுவரத் திட்டம்.

Advertisements

8 thoughts on “இந்நாள்!

 1. இரண்டாம் வருட நிறைவுக்கும், மூன்றாம் வருடப் பிறப்பிற்கும் நல்வாழ்த்துகள், தமிழ்.
  மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

   1. குமார் துப்பறிகிறார் படித்துவிட்டேன், தமிழ். பேயோன் எப்போதுமே இப்படித்தான் எழுதுவாரா? இதுதான் இவரது எழுத்துக்களை முதல் முறையாகப் படிக்கிறேன். அதனால் இந்தக் கேள்வி.
    ஒவ்வொரு கதையுமே நகைச்சுவையாக இருக்கிறது.

    1. நகைச்சுவை என்பதையும் தாண்டி உரைநடை எழுதும் முறை பேயோனின் தனிச்சிறப்பு.
     கவிதை நூல்களில் நகைச்சுவை குறைவாக இருக்கும்! முயற்சியுங்கள்…

     உரைநடை படிக்க: இந்த பக்கங்கள் உதவும்.

     பதிவுகள்

     இன்னொன்று

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s