கடந்த சில நாட்கள்…!

எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது போலான உணர்வு. முக்கியமாக மின்தமிழில்.

இணையத்தோடு இணையாமல் சில நாட்கள் இருந்தது ஒன்றும் பெரிதாகப்படவில்லை. நண்பர்களோடு உரையாடவும், சில வேலைகளுமாய் (!) நேரங்கள் கடந்து போயின. அப்பாவோடு பேசுகையில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக இயல்பாக பேசினேன். அதுவே பெருமகிழ்ச்சியாயிருக்கிறது.

இன்று நள்ளிரவில் நண்பர்களோடு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்தேன். வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. சில தினங்களுக்கு முன்பு சில தோழர்களோடு பேச நேர்ந்தது. அதன் வாயிலாக ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளேன். இனி சுயமுன்னேற்ற நூல்களை வாங்குவதற்கு அவசியமில்லை.

சில தோழர்களின் உரையாடல் அத்தகைய நம்பிக்கையை எனக்குத் தந்துவிட்டுப் போயிருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்துக்கும் அதிகமானோர் என்னுடைய உடல்நிலை குறித்த ஆதங்கத்தை நேரடியாக சொல்லி நெகிழ வைக்கிறார்கள். உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றச் சொல்லி எக்கச்சக்கமான பரிந்துரைகள் கிடைத்தன. உடலை முதலில் மீட்க வேண்டியிருக்கிறது.

நேற்று அண்ணன் ஒருவர் அழைத்தார். குறிப்பிட்ட தேர்வு ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறார். பாராட்டுதலுக்குரிய அவ்வெற்றிக்கு என்னைக் (யும்) காரணமாகச் சொன்னார்.  அதுவும் காலை வேளையில் முதல் ஆளாக என்னிடம் சொல்லி பெருமிதப்படுத்தினார். என்னுடைய வெற்றிக்கு என் ’அண்ணன்’கள் பலரைக் காரணமாய்ச் சொல்லி பெருமைப்படுவதே என் வழக்கம். மாறாக இம்முறை தலைகீழ் மாற்றம்!

புதிய ரசனைகளுக்குள் என்னை ஆட்படுத்த முடியுமா? என்று முயன்றுகொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தன் சிறுகதைகள், சந்தோஷ் நாராயணன் இசை, மதன் கார்க்கி வரிகள் என இதுவரை அதிகம் தொடாத ரசனைகளுக்குள் மூழ்க முயல்கிறேன். அதிகமான வாசிப்புக்கு என்னிடம் கைவசம் புத்தகங்கள் இல்லை. இணையத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

அரைகுறையாக தொழில்நுட்பம் அறிந்த சிலரின் அதிகபிரசங்கித்தனத்தின் விளைவுகளை வழக்கம்போல சகித்துக் கொண்டே கடக்க வேண்டியதாய் இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன் ஒரு வன்முறைக் களத்தைப் பார்வையிட முடிந்தது. கொஞ்சம் கூட சிந்தனைக்கு வேலை கொடுக்கக் கூடாது என்கிற மனோபாவம் கொண்ட பட்டதாரி இளைஞர்களின் கைவரிசையின் காரணமாய் பல்லாயிரம் ரூபாய்கள் நட்டமடைந்த களத்தை வெறித்துப் பார்த்துவிட்டு திரும்புவதைத் தவிர வேறொன்றும் என்னால் ஆகவில்லை.

பழிக்குப் பழி என்கிற கருத்தின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு பழிக்குப் பழி நிகழ்வுகளை கேள்விப்பட நேர்ந்தது. இதில் எதற்கு நான் வருத்தப்படுவது என்பது எனக்கே விளங்கவில்லை. முன்னதைக் காட்டிலும் பின்னது இன்னும் கேவலமாய் இருக்கிறது.

தம்பி என்னை சில புகைப்படங்கள் எடுக்கப் பிரியப்பட்டான். போகிறபோக்கில் எடுத்த புகைப்படங்களை விட வலிய எடுத்த படங்கள் மோசமாயிருந்தன. அவன் ஒன்றே ஒன்றுதான் சொன்னான். இந்த முழு வாழ்வுக்கும் எனக்கு அந்த ஒற்றை வாக்கியம் போதுமானதாக இருக்கும்.

இயல்பாக இரு. இயல்பாக இருக்க முயற்சிக்காதே! அது மிகக் கேவலமாய் இருக்கிறது.

மிகச் சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. சில விதிமுறைகள் இருந்தன. அதை சிரிப்புடன் படித்துவிட்டு  அதன்படி செயல்படுத்தியபோது அருகிலிருந்த ஒரு நபர் ஒரு கேள்வி கேட்டார். மனதில் இருந்த புன்னகை மறைந்து போய்விட்டது. அந்த விதிமுறைகளை எழுதிய மதிப்பிற்குரியவருக்கு அநேக கோடி வணக்கங்களை மனதார சொல்லிக்  கொள்கிறேன். 

ஒரு கதை சொல்வார்கள்.

ஒரு ஆசிரியர் வகுப்பிலிருந்த மாணவர்களுக்கு திடீர் தேர்வு வைப்பார். இருபது வினாக்கள் பதினைந்து நிமிடங்கள் அவகாசம். முதலில் முடிப்பவருக்கு பரிசு என அறிவிப்பார். எல்லா மாணவர்களும் அவசர அவசரமாக எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு நிமிடத்தில் ஒரு மாணவன் வெற்றுத்தாளோடு  அவரிடம் சேருவான். அவனுக்கே பரிசும் கிடைக்கும்.

வேறொன்றுமில்லை. கடைசி வினாவில் மேற்கண்ட எந்த வினாவிற்கும் விடை அளிக்கத் தேவையிருக்காது என்றிருக்கும். இக்கதையின் கருத்தை விளக்க நான் எழுதவில்லை. மாறாக இதே போன்று கடைசி வாக்கியத்தில்  அந்த மின்னஞ்சலிலும் ஒரு ’ட்விஸ்ட்’ இருந்தது. எத்தனை பேரின் கண்களில் அது தெரிந்ததோ?

என்னைவிட வயதில் சில ஆண்டுகள் மூத்தவர் ஒருவர் என்னை மிக மரியாதையுடனே அழைக்கிறார். அணுகுகிறார். மனதிற்கு நெகிழ்ச்சி தருகிறது. இதே அளவு மரியாதையை பிறருக்கும் நான் தர வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலான நிகழ்வாகவே உணர்கிறேன். கால ஓட்டத்திற்குள் நானும் கொஞ்சம் மாறியாக வேண்டும் என்று தந்தை அடிக்கடி சொல்வார். அதற்கான தயாரிப்புகளில் உள்ளேன். பல்வேறு தலைப்புகளில் வாசிக்க ஆர்வமிருப்பினும் கொஞ்சம் தள்ளி வைக்கவே விருப்பம்.

என்னைப் பொறுத்தமட்டில் காலம் பொன் போன்றதல்ல.. உயிர் போன்றது! எனது வழக்கமான வேலைகளை இப்போதும் மும்முரமாய் செய்ய முடிகிறது. ஒன்றே ஒன்றைச் சொல்லி முடிக்க விருப்பம். (அது நாடகத்தனமாய் இருந்த போதிலும்)

தமிழ் இப்போ ஹாப்பி அண்ணாச்சி!

 

Advertisements

4 thoughts on “கடந்த சில நாட்கள்…!

 1. லைக் பண்ண கரணங்கள் பல இருப்பினும்… சில தடங்கல்கள் உள்ளன…. சரியான பாதையில் பயணம் செய்கிறாயா என்ற அச்சம் உள்ளது! #என்_கருத்தில்
  மகிழ்ச்சி தருவன எல்லாம் சரியாகாது

  1. // மகிழ்ச்சி தருவன எல்லாம் சரியாகாது
   மிகச் சரியே!
   அக்கறைக்கு நன்றி… நெடு நாட்களுக்குப் பிறகு உங்களுடைய மறுமொழியைப் பெற்ற பதிவினை எழுதியிருக்கிறேன் என்பதே போதும். பயப்பட வேண்டாம்.

   நான் ‘அதைச் செய்வதால்’ மகிழ்ச்சி தருகிறது என்று சொல்லவில்லை.

   நான் எனக்கான கற்றலிலேயேப் பயணப்படுகிறேன். சில தடங்கல்கள் எனக்கும் இருக்கு! அவ்வளவு சுலபத்தில் தவறான பாதையில் எக்காலத்திலும் நான் போய்விட மாட்டேன் என்பது(ம்) தங்களுக்குத் தெரிந்தே!

   உங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் என்றும் இருக்கும் என்றாலும் எச்சரிக்கையுடனே நான் எல்லாவற்றையும் கடக்க முயற்சிக்கிறேன்.

   நன்றி…

 2. வழக்கம்போல சஸ்பென்ஸ் வைத்தே எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போ ஹேப்பி அண்ணாச்சியாக மாறியிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். சுவர்+ சித்திரம் நீங்கள் அறிந்ததுதான். ஆரோக்கியத்திற்கு முதலிடம் என்று நானும் இந்த வருடம் முடிவெடுத்திருக்கிறேன்.
  உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்!

  1. பர்சனல் விஷயங்களை எழுதுவதைத் தவிர்க்கவே விருப்பம். மீறி எழுதுகையில் முடிந்தமட்டும் சஸ்பென்ஸ் வைத்து எழுதுவதே என்னளவில் உத்தமம்….

   வாழ்த்துகளுக்கு எப்போதும் நன்றி…

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s