அவன்….அவன் மட்டுமே!

அவன்….அவன் மட்டுமே!

கடலெனக் கொண்டால் அலைதான் அவன்
மடலெனக் கொண்டால் முதல் வரி அவன்
உடலெனக் கொண்டால் உயிர்தான் அவன்
 *
இரவெனக் கொண்டால் முழுமதி அவன்
பகலெனக் கொண்டால் ஆதவன் அவன்
அகலெனக் கொண்டால் ஒளிதான் அவன்
 *
மனதில் பெருகும் உறுதியே அவன்
தினமும் கேட்டிடும் இன்னிசை அவன்
சினத்தினைக் கொய்திடும் கூர்வாள் அவன்
*
பாலையில் பெய்யும் மழையே அவன்
சோலையில் பூத்த புதுமலர் அவன்
காலையில் கனவில் வருவது அவன்
*
தனிமையில் உணரும் தவிப்பே அவன்
உயரேத் தெரியும் விண்மீன் அவன்
உண்மையைச் சொன்னால் எல்லாம் அவன்

 

இந்த மாதிரி எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. மூன்று முறைகளுக்கு மேல் படித்தால் சலிப்படையும் அபாயமும் உண்டு. ஆனால் அடிக்கடி இப்படி எழுதிப் பார்த்தால் வார்த்தைப் பிரயோகங்கள் மனதிற்குள்ளேயே வட்டமிடும்.  முடிந்தமட்டும் எதுகையில் வார்த்தைகளை அமைத்தேன்.

’அவன்’ என்று ஒருவனை உருவகப்படுத்தி இயல்பினைச் சொல்வதாக எழுதியது. உயர்வு நவிற்சி அணியில் வருமென நினைக்கிறேன். நான்கு-நான்கு வார்த்தைகளுக்குள் ஒவ்வொரு வாக்கியமும் வரும்படி வலிய எழுதப்பட்டது. கொஞ்சம் நீட்டி, குறுக்கினால் இன்னும் சிறப்பாக எழுதப் பழகலாம்.

நீங்களும் முயன்றுபார்க்க ஏதுவானதாக இருக்கும். இரண்டாம் எழுத்து ஒன்றிவர வேண்டும். கடைசியில் அவன் எனுமாறு முடிய வேண்டும். 

பிடிக்கவில்லையென்றால் பாதகமில்லை. படித்ததே போதுமே!

Advertisements

3 comments

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s