புத்தகங்கள் -2014

வணக்கம்.

booksகொஞ்சம் முன்னதாகவே இப்பதிவை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனாலும் பரவாயில்லை. எதிர்பாராத ஒரு சிறு இடையூறின் காரணமாய் பதிவுகள் எழுத இயலவில்லை. கடந்த ஆண்டு பட்டியல் மட்டும் இட்டுவைத்தேன். அதில் சில புத்தகங்களைப் படிக்க இயலவில்லை. ஆனால் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. புதிய புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும் தாராளமாய் கிட்டின. இனி இந்த ஆண்டுக்கு..

1. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
(
And Quiet Flows the Don)

எழுதியது: மிகெய்ல் சோலோகோவ் (mikhail sholokhov)
தமிழில்: அ.லெ.நடராஜன்

புத்தகத்தை வாங்கிய சில தினங்களிலேயே இந்நூல் குறித்து எழுதியிருந்தேன். மொத்தம் 3 பாகங்கள். 570 பக்கங்கள். இப்போதைய நிலவரப்படி, நான் முதல் பாகத்தை முடித்து வைத்திருக்கிறேன். இரண்டாம் பாகத்தைத் தொட்டு வைத்திருக்கிறேன். துவக்கத்தில் வாசிக்க (எனக்குக்) கடினமாக இருந்தது. போகப் போக வேகமாகவே கதை நகர்ந்து வருகிறது. நான் தொடர்ச்சியாகப் படிக்கிற ரஷ்ய நாவல்களில் இது மூன்றாவது.

2. மன்னர் லியோபோல்டின் தனிமைப்புலம்பல், இருளில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு
    (King Leopold’s Soliloquy, To the person sitting in darkness)

ழுதியது: மார்க் ட்வெய்ன் (Mark Twain)
தமிழில்:  இலக்குவன், வான் முகிலன்

மார்க் ட்வெய்ன் குறித்து ஏற்கனவே எளிய அறிமுகம் எனக்கு இருந்தது. ஆனால் இப்போது இன்னும் நெருக்கமாக அறிமுகமாகி, ஒரு நூலை எடுத்துள்ளேன். கிண்டில் உதவியில்  The Adventures of Tom Sawyer கிடைத்துள்ளது. அதையும் இயன்றால் படிப்பேன்.

3. சந்திரிகையின் கதை

எழுதியது: மகாகவி பாரதியார் 

கவிதைகளைக் கடந்த மகாகவிஞரின் உரைநடைப் படைப்பு. முற்றுபெறாத இந்த கதையைப் படிப்பதற்குள் சென்றமுறை   எனக்கு வந்த இடையூறுகள் அதிகம். எனவே இந்த ஆண்டும்!

4. பார்த்திபன் கனவு

எழுதியது: கல்கி

மூன்றாண்டுகளாய்த் தொடர்ந்து கல்கியின் படைப்புகளைப் படித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாய் இம்முறை பார்த்திபன் கனவு. இத்தோடு கல்கி எழுதிய சில சிறுகதைகள் அல்லது குறுநாவல்களையும் இயன்றால் படிக்கத் திட்டம்.

5. அயர்லாந்து: அரசியல் வரலாறு

எழுதியது: என்.ராமகிருஷ்ணன்

இதுவும் பாதியில் நின்ற புத்தகம். 800 ஆண்டுகால வரலாற்றை கிட்டத்தட்ட 150 பக்கங்களுள் சுருக்கமாக சொல்லும் புத்தகம்.

6. பாரதி: சில பார்வைகள்

எழுதியது: தொ.மு.சி. ரகுநாதன்

மின் புத்தகத்தை ஏற்கனவே பகிர்ந்திருந்தேன். என்னிடம் அச்சுப்பிரதியே உள்ளதால் படிக்க ஏதுவானது!

7.சிறியதே அழகு (Small is Beautiful)

எழுதியது: இ.எஃப். ஷுமாஸர் (E.F. Schumacher)
தமிழில்: எம். யூசப் ராஜா

உலகின் சிறந்த 100 புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நூலான Small is Beautiful நூலின் தமிழ் வடிவம். படித்துவிட்டு மீதம் எழுதுகிறேன்!

9. ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுதியது: சுஜாதா

அறிமுகம் தேவையில்லாத சுஜாதாவின் நூல்களில் ஒன்று. கடந்த ஆண்டு படிக்க இயலவில்லை. இந்த ஆண்டு கட்டாயம்!

8. அறிவியல் வரலாறு

எழுதியது: ஆர்தர் எஸ் கிரிகர் (Arthur s Gregor)

ஏற்கனவே ”எழுதும் இட”த்தில் இந்நூலைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சமீப ஆண்டுகளில் என் அப்பா எனக்கு நேரடியாக பரிந்துரைத்த நூல் இது. சில பக்கங்களைப் படித்திருக்கிறேன். சுவையான அறிவியல் வரலாறு சமரசமில்லாத தமிழில் நேர்த்தியாக உள்ளது.

9. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hitman)

எழுதியது: ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins)
தமிழில்: முருகவேள்

இதுவும் உலக அளவில் புகழ்பெற்ற நூல்தான். முன்னுரையைக் கொஞ்சம் படித்தேன். ம்ம்ம்… முழுதும் படித்துவிட்டு மீதம் சொல்கிறேன். இதன் ஆங்கில வடிவம் மின்னூலாகக் கிடைக்கலாம். ஒரு படத்தில் நாயகன் ஒருவர் இப்புத்தகத்தைப் படித்தபடி படம் நெடுக வருவதாய் ஒரு தகவல் படித்தேன்! இதன் தொடர்ச்சியாக உள்ள இன்னொரு நூலும் இருக்கிறது. இது முடிந்தவுடன் அது!

10. தற்கால இந்தியச் சிறுகதைகள் தொகுதி:மூன்று

18 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு அடங்கிய நூல். சில கதைகளைப் படித்துவிட்டேன். விலைதான் மிகவும் குறைவாகத் தோன்றியது. 300-ஐ நெருங்கும் பக்கங்கள். பழைய பதிப்புதான்! சாகித்ய அகாதமி வெளியீடு!

11. சுவாமியும் நண்பர்களும் (Swamy and Friends)

எழுதியது: ஆர்.கே.நாராயண் (R K  Narayan)
தமிழில்: சுப்ரா

பலருக்கும் அறிமுகமான நூல்தான். மால்குடியில் சுவாமியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை! 

12. சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

எழுதியது: சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hasan Manto)
தமிழில்: உதயசங்கர்

ஒரே ஒரு மண்ட்டோ சிறுகதை படித்திருக்கிறேன். பிற்பாடு இந்த சிறுகதைத் தொகுதியைப் பார்த்தவுடன் வாங்கத் தூண்டியது. படித்துவிட்டுதான் மேற்கொண்டு எழுத உத்தேசம்.

இதுதவிர,

கிடைத்தால் படிக்க உத்தேசமானவை.

இரா.முருகனின் அரசூர் வம்சம் நூலை படிக்க விருப்பம். இயன்றால் நம்பர் 40 ரெட்டைத் தெரு -வும், விஸ்வரூபம் -மும் படிக்க விருப்பம். என்னளவில் இதற்கெல்லாம் காலமும், சூழலும் சாத்தியப்பட வேண்டும்.

 (எஸ்தர் சிறுகதை உபயத்தில்) வண்ணநிலவன் எழுதிய சில (குறிப்பாக  ‘கடல்புரத்தில்’, ‘கம்பாநதி’  )நூல்களை படிக்கவும் ஒரு எண்ணம். நேரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்!

ஜெயமோகன் எழுதிய புறப்பாடு முதல் பாகத்தை இணையத்திலேயே படித்தேன். இரண்டாம் பாகத்தை உடனே படிக்க இயலவில்லை. இப்போது முழுமையான புத்தகமாக வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இருந்தாலும், இணையத்திலேயே புறப்பாடு -II -ஐயும் படிக்க விருப்பம். கூடவே பத்தாண்டுத் திட்டமாக ’வெண்முரசு’ நாவலை எழுதிவருகிறார். அதையும் முடிந்தமட்டும் தொடர்ந்து படிக்க எண்ணம்.

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி விருது பெற்ற சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பை முன்னமே வாங்கி வைத்திருந்தேன். வீட்டில் காணோம்! கிடைத்தால் அதுவும் விருப்பப் பட்டியலில் இணையும்.

பட்டியலில் சொல்லாத ’மற்றவை’யும் இதில் அடங்கும்

அடுத்ததாக, கடந்த ஆண்டுக் கதை!

2013 பலரைப் போலவே எனக்கும் இதுவரை இல்லாத நிறைய புது அனுபவங்களையே தந்துள்ளது. 2014 அதைத் தக்கவைத்து முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதுபோக சுவாரசியங்களை இங்கே இடுவதை விட, “எழுதும் இட”த்தில் எழுதிவிடுவது நல்லது என நினைக்கிறேன். புதிதாக சிலர் மின்னஞ்சல் வழியே தொடர்கிறார்கள்.கடந்தாண்டு 11,000+ பார்வைகள் வந்துள்ளன என அறிகிறேன். எல்லோருக்கும்…. 

நன்றி சொல்ல வேண்டும்…. நல்ல நாளிலே!

பதிவைப் படித்தவர்கள் தங்களின் விருப்பமான நூல்கள், ரசித்த (பிற) நூல்களைக் குறிப்பிட்டால் மிக்க நலம்.

Advertisements

5 thoughts on “புத்தகங்கள் -2014

 1. நிறைய புத்தகங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி. இந்தப் புத்தகங்கள் எல்லாமே இணையத்தில் கிடைக்கின்றனவா?
  கி. ராஜநாராயணனின் புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா? நான் இப்போது இவருடைய கோபல்ல கிராமம் படித்துக் கொண்டிருக்கிறேன். இதை வெறும் கதைபுத்தகம் என்று சொல்ல முடியாது. எத்தனை நிகழ்வுகள்! கதைக்குள், கதைக்குள் ஒரு கதை! ஆனால் குழப்பமே இல்லாமல் தெளிவான நடை. படிக்கப்படிக்க ஒரு மகிழ்ச்சி, படித்து முடித்துவிடுவோமோ என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டே……………இருக்கிறேன்!
  இதன் தொடர்ச்சி கோபல்ல மக்கள். படிக்க வேண்டும்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  1. நேரடியான ஆங்கில புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
   தமிழ் புத்தகங்களில் அறிய வேண்டியவற்றைக் குறிப்பிட்டால், (பதிப்பாளர், விலை உள்ளிட்ட)கூடுதல் விபரங்களைத் தருகிறேன். பல நூல்கள் என்னிடம் அச்சுப்பிரதியாக உள்ளது.

  2. கி.ரா வின் சில சிறுகதைகள் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நூலை இரண்டாண்டுகளுக்கு முன்பே வாங்க விருப்பப்பட்டேன். தவறிவிட்டது.
   நீங்கள் படித்துவிட்டு அறிமுகப் பதிவை உங்கள் தளத்தில் எழுதுங்கள்.
   நன்றி.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s