முன் குறிப்புக்கு முந்தைய குறிப்பு:

இப்பதிவில் அறிவுக்கு வேலை வைக்கும் எவ்வித குறிப்பும் இல்லை. எனவே தவறுதலாக உள்ளே வந்தவர்கள் இப்போதே வெளியேறலாம். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் அப்படியேயும், தமிழ்+ஆங்கிலம் கலந்தும் தரப்பட்டுள்ளன.

முன் குறிப்பு:

பதிவின் பொருட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவுகளின் இணைப்பு கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் எழுதிய உணர்வும் இல்லை, அதிக பதிவுகள் எழுதிய நினைவும் இல்லை. அதிக கருத்துக்களை சரியாக எழுதியாக தோன்றவே இல்லை. ஆனாலும் எப்படியோ வந்துவிட்டது. எண்கள் வெறும் எண்கள் தான் என்றாலும் இலக்கம் (Digit) அதிகரிக்கையில் ஏதோ இனம் புரிந்த பயமும் அதிகரிக்கிறது.

சரி… உற்சாகத்துடனே கொஞ்சம் எழுதிவிடுகிறேன்….

என்னளவில் 30+ பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படி எழுதியிருப்பேன். என் அலைவரிசையில் மிகச்சரியாக இயங்கும் பேர்வழிகளுக்குதான் இதர 99 பதிவுகளும் பிடிக்கக்கூடும். எனக்கே நான் எழுதியதில் சில இடங்கள், சில பதிவுகளில் மாறுபாடான கருத்துக்கள் உண்டு.

நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் படித்துவிட்டு, இதெல்லாம் ‘எழுதும் இடத்தில்’ (myinks.wordpress.com) மட்டும் எழுது. இங்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதுதவிர இன்னும் சில பதிவுகளை பதிவிட வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களும் வந்தன. குறிப்பாக தன் விவரங்கள் பற்றிய பதிவுகளைத் (Personal) தவிர்க்கச் சொல்லியும் அறிவுரைகள் வந்தன.

நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை என்பதால், என் பதிவுகளில் எண்ணற்ற குறைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அதையும் மீறி சில பதிவுகளின்பால் எண்ணற்ற பாராட்டுகள் விழுந்தன.

எனக்கு பதிவுகளை எழுதுவதை விட அதற்குப் பொருத்தமான தலைப்பினைத் தேடுவதில் ’தாவு’ தீர்ந்து விடுகிறது. அதையும் மீறி சில பதிவுகளுக்கு தலைப்பு அமைந்துவிடுகிறது.

எனக்கு பிடித்த தலைப்புகளில், எனது பதிவுகளில் முதன்மையானது என்று சிலவற்றைச் சொல்லலாம்.

 • இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.
 • தவறவிடக் கூடாதவன்

இவையிரண்டும் நான் முழுக்கவே உணர்ந்து எழுதியவை. அதிக பாராட்டுகளையும் பெற்றவை.

தவறவிடக்கூடாதவனுக்கு, பாலா சாரின் கமெண்ட் கிடைத்தது என் பாக்கியம்!

இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல. பதிவைப் படித்துவிட்டு அழுததாக ஒரு நண்பர் கூறினார்.

என்னை நம்பி ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரை கூட ஒரு நண்பர் கொடுத்திருந்தார். இன்னொன்று விரைவில் ஆரம்பமாகும்.

தேவன் நூற்றாண்டு பதிவு சிறப்பாக இருந்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் எழுதியிருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

நிறைய பேரை நான் இமிடேட் செய்து எழுதியிருக்கிறேன். அவற்றையெல்லாம் அவரவர்களுக்கான என் tribute ஆக எடுத்துக்கொள்ளவும்! இமிடேட் செய்வது தவறென்றாலும், தவிர்க்க இயலவில்லை. பொறுத்தருள்க.

ஒரு பயணத்தில் ஒருவர் என்னிடம் கேட்டார்.

“புத்தகங்களைப் படிக்க உனக்கு யார் inspiration?”

நான் எப்போதும் சொல்லும் பதில் என் அப்பா தான். இப்போது பல தோழர்கள் உதவுகிறார்கள், அவர்களுக்கும் நன்றி. உங்கள் எல்லோருடைய ஆதரவினாலும்தான் என் வாசிப்பு வளர்கிறது. நன்றி.

மழையில் கரைந்த வரிகள் பதிவு இந்த சீசன் மட்டுமல்ல, ஒவ்வொரு மழை சீசனுக்கும் hit அடிக்கும் என நம்புகிறேன்.

நம் நாட்டில் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள முனைவோரின் எண்ணிக்கை சத்தமில்லாமல் உயர்ந்து வருவதாக எண்ணுகிறேன். என் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வாக்கியம் “தமிழ் மொழியின் சிறப்பு”

ட்விட்டர் மூலம் கிடைத்த சில தோழர்கள் மூலமாக நிறைய அறிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கும் நன்றி.

மற்றவர்களுடைய எழுத்துகளை வாசிக்கையில்தான் எனக்கான இடம் எதுவென புரிகிறது. இன்னும் வாசிப்பை ஆழமாக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கான முயற்சிகளில் உள்ளேன்.

கவிதை முயற்சிகளில் அதிகம் ஈடுபடவில்லை என்று சொன்னால் அது பொய். ஆனால் அதிகம் வெளிக்காட்டவும் இல்லை. நிறைய முயற்சிகளில் ஓரளவேனும் மனநிறைவைத் தரும் முயற்சிகளை மட்டுமே தர விருப்பம். இப்பதிவின் இறுதியிலும் ஒரு முயற்சி உள்ளது.

சிறுகதைகளில் ஓரளவு தேறியுள்ளதாக நம்புகிறேன். அடுத்தடுத்த கதைகளுக்கான detailing சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் ஓரளவு சீராகிவிடும். அவற்றின் பொருட்டு எனக்கு உதவிய அன்பர்களுக்கு எப்போதும் நன்றி.

உன் பதிவுகளினால், எழுத்துகளினால் நானும் எழுதுவதற்குத் தூண்டப்பட்டேன் என்றெல்லாம் சொன்னார் ஒரு தோழர். வீட்டிற்கு வந்து பெற்றோர் முன் பாராட்டிய தோழருக்கும் மீண்டுமொருமுறை  உள்ளத்து நெகிழ்ச்சியோடு நன்றி.

நிறைய நன்றி சொல்லிவிட்டேன். நிறைய மிச்சமிருக்கும்… இப்போதைக்கு போதும்.. இன்னும் நிறைய பதிவுகள் எழுதத்தானே போகிறேன். அப்போது மிச்சம் வைக்காமல் சொல்கிறேன்.

நீண்ட நாட்கள் கழித்து 20 நிமிடத்தில் எழுதிய பாடல். இதுவும் தழுவல்தான். திரைப்பாடல்தான். நீங்கள் கண்டுபிடிக்க ஒரு க்ளூ தரவா?

 • இது ’வழக்கம்போல*’ இளையராஜா அவர்களின் இசையில் பூத்த பாடல்!

இன்னொரு க்ளூ!

 •  இது ராஜா பாடிய பாடல் அல்ல

இந்த க்ளூ குடுக்குற வேலையெல்லாம் #RQ365 செய்யும் மாயம்!!

பாடல் இதோ!

அதிகாலை எழுந்தாலே
மனசெல்லாம் உற்சாகம்!
மழை பொழிந்த பாலை போல்
மனம் மாறுதோ?

மலைபோல வரும் வேலை
மடுவைப் போல் குறையாதா?
அலைபோல் தான் துன்பமெல்லாம்
அது உனக்கு புரியாதா?

எண்ணம் போல வாழ்க்கையடா!
ஏத்துக்கணும்.

தொட்டு விடும் தூரம்தானே
வெற்றியென்னும் எண்ணம் போதும்!
குட்டிக் குட்டிக் கனவுகள்தானே
வாழ்க்கையடா!

வலிகள் சொல்லும் கதைகள் எல்லாம்
வழியில் சொன்ன கதைகள் இல்லை
புரிந்து கொண்டால்  வாழ்க்கை முழுக்க
இன்பமடா!

கற்ற கல்வி யாவிலுமே
பெற்ற அறிவு உனதாகும்
மற்றதெல்லாம் துணை சேரத்தான்
கனவெல்லாம் நனவாகும்.

எப்போது இலக்கை அடையும் கனவு…..கனவு?

தென்றல் வந்து தீண்டும்போதும்
வண்டல் மனதை வருடும்போதும்
கலையாத உள்ளம்தானே
கரை சேரும்!

பறக்கிற பொழுதுகள் எல்லாம்
சிறகாகும் உன் மனதோடு
புது வெள்ளம் போல நீயும்
நடைபோடு

எழுதித்தான் தீர்த்தாலும்
பழுதின்றிப் போகாது
தழுவித்தான் தீர்த்தாலும்
அன்பென்றும் குறையாது

இப்போதும் உன்னைச் சேரும் அன்பு….அன்பு!

என் வரிகளின்றே முடிக்கிறேன்.

எழுதித்தான் தீர்த்தாலும்
பழுதின்றிப் போகாது!

எத்தனை பழுதிருப்பினும் பொறுத்து அருள்வது நும் கடன்.

என்றென்றும் மாறாத அன்புடன்,

தமிழ் (@iamthamizh)

பதிவை முழுக்க படித்தமைக்கு நன்றி.

உங்களுக்கான அன்புப் பரிசு இச்சிறு மின்நூல்: 

மூன்று சிறுகதைகள்

ராஜாவின் பாடல்களில் எனக்குப் பிடித்த 1000 பாடல்களைத் தொகுத்துக் கொண்டிருப்பதை அறிவீர்கள். இதோ நூறு பாடல்கள் இப்போது…. எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் 100/1000 : ரசனை! 

பதிவின் பொருட்டு சில இணைப்புகள்:

இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.

தவறவிடக் கூடாதவன்

தேவன் ’மகா’ தேவன்

மழை குறித்த கட்டுரைகள்

தமிழ் மொழியின் சிறப்பு

மகிழ்ச்சியின்  கவிதை

Advertisements

3 thoughts on “

 1. அன்பு தம்பிக்கு,ம்
  வாழ்த்துக்கள். மேலும் வேகமாக வளர்க. 100ராவது பதிவில் 11111++ பார்வைகள். சபாஷ். 🙂 தமிழ் மொழி, கவிதை, இசை, சிறுகதை, பாடல் எழுதுதல், வாசித்தல், வடிவமைப்பு, எழுதும் இடம், பாடல் பரிந்துரை… என எத்தனை எத்தனை பரிமாணங்கள். உண்மையில் நீ தான் தவறவிடக்கூடாதவன் ! என்னை நீ எவ்வளவு Inspire பண்ணுகிறாய் என்பது என்னால் சரியாக கணிக்கவே முடியவில்லை…. #அவ்வளவு
  \_O___/ 😉

  1. ஆகா!

   புதுப்பாதை நீயே போட்டுத் தந்தாய்
   ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?

   ஆதார சுருதி அந்த ஓஜஸென்பேன்!
   அதற்கேற்ற லயம் இந்த ’தமிழு’மென்பேன்!

   இன்னும் இன்னும் என்ன சொல்ல போகிறாய்?
   அது ’ம்’ அல்ல 100-ன் குறியீடு.

 2. 100வது பதிவுக்கு முதலில் வாழ்த்துகள். அன்பு பரிசிற்கு நன்றி. அதை தனியே வேறு ஒரு சாரளத்தில் திறக்கும்படி செய்யுங்கள். புக்மார்க் செய்திருக்கிறேன். பிறகு படிக்கிறேன்.

  இன்னும் நிறைய படித்து இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்!
  (மேலே ஒரு குறியீடு இருக்கிறதே (தலைப்பு) அது என்ன?)

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s