பாடல் சொன்ன கதை…!

இன்றைய நாளுக்கு செண்டிமெண்டாக பதிவெழுத வேண்டும் என்று முன்னரே தீர்மானித்து வைத்தேன். என்ன எழுதுவது என்பது எனக்கே தெரியாதுதான். ஆனால், எழுதியாக வேண்டும். ஏதேனும் ஒரு சூழல் என்னை எழுதப் பணிக்கும் என்கிற நம்பிக்கையோடு, பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பாடல் கேட்ட மாத்திரத்தில் முன்னொரு நாளில் நடந்த ஒரு நிகழ்வு பளிச்சென மனதை ஆக்கிரமித்தது.

அன்று சில பொருட்கள் வாங்க வேண்டி, என் தாத்தாவின் மிதிவண்டியை எடுத்தேன். காற்று இல்லை. காற்றடிக்க வேண்டி, வழக்கமான கடை ஒன்றில் நிறுத்தினேன். அவர் எனக்கு ரொம்ப அறிமுகமானவர். குடும்ப நண்பரும் கூட. வயது எப்படியும் 80-ஐத் தொடும்.  என்னைக் காட்டி அருகில் இருந்தவரிடம் சொன்னார். இவன் இன்னாருடைய மகன், இவன் மற்ற பையன்கள் மாதிரியெல்லாம் ஊர் சுற்றி நான் இதுவரைக் கண்டதேயில்லை. இவன் அப்பாவும் இப்படியேதான். இப்படியாக சில நிமிடங்கள் என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் சிறப்பாக சொல்லிக் கொண்டே போனார். இரண்டு ரெண்டு ரூபாய் நாணயங்களை நீட்டினேன். ”காசு கூட சரியா கொண்டு வரான் பாத்தியா! ” என்று முடித்து வைத்த அவரின் உரையாடல் கொடுத்த பூரிப்பில் சைக்கிளை சற்று அழுத்தமாக, உற்சாகமாக அழுத்தி முன்னேறினேன்.

சட்டென ஒரு வண்டி என்னை முந்த/மோத எத்தனித்து, உடனடியாக நிறுத்தப்பட்டது/ மெதுவாக்கப்பட்டது.  பார்த்தால், 30+ வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வண்டியில் இருந்தார். பின்னால் ஒரு 8-9 வயது மதிக்கத்தக்க சிறுமி அமர்ந்திருந்தாள். அச்சிறுமியின் தந்தைதான் என எளிதில் கணிக்க முடிந்தது.

பொதுவாக நீங்களும் கூட இதை உணர்ந்திருக்க முடியும் 90% ஆண்கள் குடும்பத்தோடு இருசக்கர வண்டியில் பயணிக்கையில், முடிந்தமட்டும் கட்டுப்பாட்டோடு, மெதுவாக ஓட்டுகிறார்கள். பல்வேறு இடங்களில் இதை நானும் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து காவலர்கள் கூட சிலசமயங்களில் இதுமாதிரி குடும்பஸ்தர்களை நிறுத்தி விசாரிப்பதுமில்லை.

20+ இளைஞர்கள் (சமயங்களில் 15+ இளைஞர்கள்) தான் சாலைகளில் புயலாய்ப் பறக்கிறார்கள். அப்படி என்ன அவசரமான வேலையாகப் போகிறார்களோ. தெரியாது. என்னிடம் ஒரு ’மகள்’ சொன்ன தகவல் இது. அவர் 14-15 வயதிருக்கையிலும் கூட அவர் தந்தை மெதுவாகவே வண்டி ஓட்டுவாராம். அவர் மகளுக்கு வேகமாகச் சென்றால் வாந்தி எடுக்கும் அபாயம் உண்டாம்…

இதுபோல நிறைய சொல்லலாம். இறுதியாக என்னால் ஒன்றை அழுத்தமாகச் சொல்ல முடியும். மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்களா? என எனக்குத் தெரியாது. ஆனால், அப்பாக்களைப் பெற்ற மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்தாம்!

குறிப்பு 1: தலைப்பின் காரணம் ஒரு பாட்டுதான். அது தங்க மீன்கள் அல்ல. அபியும் நானும்.

“ஒரே ஒரு அய்யாவுக்கு
ஒரே ஒரு பொண்ணு
அவ பொண்ணு இல்ல
பொண்ணு இல்ல
கடவுளோட கண்ணு!!”

குறிப்பு 2: இதில் உள்ள செண்டிமெண்ட் என்னவென்றால், கடந்த வருடம் இதே போன்ற ஒரு சூழலில்தான் நவீன தத்துவங்கள் பதிவை எழுதி, இன்றுவரை கூகுளின் தேடலில் முன்னணியில் இருக்கு! (என்ன காரணம் என்று ஒரு விசாரணைக் குழுவே தேடும் அளவு பிரசித்தி பெற்ற பதிவு!!)

குறிப்பு 3: மகன்களைப் பெற்ற அப்பாக்களைப் பற்றி இன்னும் இன்னும் அழகாக, உணர்ச்சிகரமாக என்னால் எழுத முடியும். அதற்கான காரணங்கள் வலுவாக என்னிடத்தில் உள்ளன. அது ஏன் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புகிறேன்.

குறிப்பு 4: வழக்கமாக இளையராஜா பாடல் பற்றி எழுத நினைப்பேன். ஒன்றல்ல 4 ராஜா பாடல்கள் வந்து மனதை வசீகரித்தாலும், எதிலும் பளிச்சென நிகழ்வுகள் பிடிபடவில்லை. ஆனாலும் ஜானகியின் குரலில் ஊர்கோல மேகங்களையும், கஸ்தூரிக் கலைமான்களையும் அழைக்கும் அந்த பாடல் இன்றைய ஸ்பெஷல்!!

அவ்ளோதான்!

Advertisements

4 thoughts on “பாடல் சொன்ன கதை…!

 1. பதிவின் ஒவ்வொரு வரிகளும் ரசித்து படித்தேன் 🙂 நன்றி
  பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களும் பாக்கியவான்களே !
  இதில் ஆண் என்ன பெண் என்ன !?

  1. இதில் என்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதியிருக்கிறேன்.
   பெண்பிள்ளைகளை பின்னே வைத்து ஓட்டுகிற அப்பாக்கள் வழக்கத்தைவிட வேகம் குறைத்துச் செல்வதாக உண்ர்ந்திருக்கிறேன்.
   இது தவறாகக் கூட இருக்கலாம்…

   #குறிப்பு-5
   இந்த பதிவு அவ்வளவு சீரியஸானது அல்ல!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s