இரு புத்தகங்கள்

புத்தகங்கள் படிக்க எல்லோருக்கும்(!) பெரும்பாலும் பிடிக்கும். ஏனென்றால் வாசிப்பு என்பது அளக்கவியலா இன்பம் தரக்கூடியதுதானே! இதையெல்லாம் கடந்து சில புத்தகங்கள் ஒருமுறை வாசிப்பதற்குள்ளாக தாவு தீர்ந்துவிடும். வெகு சில புத்தகங்கள் மட்டுமே ஒருமுறை எனும் வரையறையை உடைத்து மறுமுறையும் வாசிக்க ஏதுவாக இருக்கும். அது எல்லா புத்த்கங்களுக்கும் அமையாது. அதன் பின்னணியில் சூழ்நிலையும் ஒரு காரணி… அதையெல்லாம் விடுங்கள். இங்கே நான் பகிர்வது சில புத்தகங்களைப் பற்றி…

சர்வம் ஸ்டாலின் மயம் எனும் பெயருடைய அப்புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன் என் வாசிப்புக்கு வந்தது. அதை எழுதியவர் எழுத்தாளர் மருதன் அவர்கள். ஸ்டாலின் என்றால் ஜோசப் ஸ்டாலின். யார் அவர் என்பதற்கு எளிய க்ளூ சோவியத் ரஷ்யா என்று கொடுக்க இயலும். இதற்கு மேலும் தெரியாதவர்கள் தொடர்வது நலமல்ல.

ரஷ்யா குறித்து அறிவதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. பல புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில்தான் கிடைக்குமென நினைக்கிறேன். மீர் பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம், ராதுகா பதிப்பகம் என்றெல்லாம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்..

ஓ! நேரடியாக புத்தகத்தைப் பற்றி கொஞ்சமேனும் எழுதிடறேன். நீங்கள் ஸ்டாலின் பற்றி அறிய வேண்டுமானால் இப்புத்தகம் ஓரளவு துணைபுரியும். ரஷ்யப்புரட்சிக்கு முன்-பின் என்கிற கால கட்டத்தையும் அறிய உதவும் எளிய பிரதியாக இருக்கும். ஒரே ஒரு குழப்பம் இப்போதுவரை நீடிக்கிறது. அதாவது ஸ்டாலின் எப்படிப்பட்டவர் என்கிற இத்தனை முறை படித்தும் எனக்கு ஓரளவில் விளங்கவில்லை. குறிப்பாக மாஸ்கோ படுகொலைகளின் பின்னணி!

இந்த புத்தகத்தை நான் 4 முறையாவது படித்திருப்பேன். கடைசி முறைதான் முழுமையாகப் படித்தேன். இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு வேறொரு புத்தகம் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த புத்தகம் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி-யால் எழுதப்பட்டது. முதல்முறை ஆசிரியர் பெயரை சரியாக வாசிப்பதற்குள்ளாகவே  பலருக்கு மூச்சு வாங்கிவிட்டது. இவரும் ரஷ்யாக்காரர்தான். இவர் எழுதிய How the steel was tampered? எனும் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்தான் வீரம் விளைந்தது எனும் நூல்.

எஸ்.இராமகிருஷ்ணன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட இந்த புத்தகம் சென்ற மே மாதம் எனது கோவைப் பயணத்தில் அப்பா வாங்கிக் கொடுத்த புத்தகம். புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இருந்தே ’பாவெல்’ வசீகரிக்கத் தொடங்கிவிட்டதால் உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினேன்.

படித்து முடிப்பதில் தாமதமானது… ஒன்றரை பாகம் முடிந்த (மொத்தம் இரண்டு பாகம்) நிலையில் தொடர்ந்து படிக்க இயலாத நிலையில் கடந்த மே மாதம்தான் மீண்டும் படித்து முடித்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் அதிகமான காலம் அந்த புத்த்கத்தைப் படித்தேன். அது எல்லோருக்கும் வசீகரமூட்டும் நடையில் எழுதப்பட்டதல்ல. உண்மையான வரலாற்றை (ஏறத்தாழ) அப்படியே எழுதியிருப்பதாகப் படித்தேன். அதாவது கதாசிரியரின் வாழ்வில் 14 வயது முதல் 31 வயது வரை நடந்த நிகழ்வுகளைத்தான் எழுதியுள்ளார்.

இதில் குறிப்பிடவேண்டிய விடயங்கள் என்னவென்றால், ஆசிரியர் தன்னுடைய 32-ம் வயதில் காலமாகிவிட்டார். 17 வயதில் போருக்குச் செல்கிற ஆசிரியர் 20 வயதில்  காயம் ஏற்பட்டு அல்லலுறுகிறார். அதன் பின் ஏறத்தாழ 12 ஆண்டுகள் அதன் பாதிப்பு தொடர்கிறது. அதனினும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் பணிகள் பற்றியும், புரட்சிக்கு சற்று முந்தைய ரஷ்யா குறித்தும், புரட்சிக்குப் (1917) பிந்தைய ரஷ்யா குறித்தும் (கம்யூனிஸ கட்டுமானம்) அறிய முடிகிறது. குறிப்பாக லெனின் மரணம் குறித்த தகவல்கள் 4 பக்கங்களுக்கு உள்ளன. மொத்த புத்தகம் (2 பாகங்கள்) 624 பக்கங்கள்.

இதில் சில வார்த்தைகளின் பொருள் எனக்கு சர்வம் ஸ்டாலின் மயம் நூல் மூலமே விளங்கிற்று. அவற்றை இங்கே சொல்கிறேன். இவ்வார்த்தைகளின் பொருள் அறிய கூகுளை நாடுக!

Boshevik – போல்ஷ்விக் அல்லது போல்ஷெவிக்

Pravda – ப்ராவ்தா

Brdzola – ப்ராட்ஸோலா

Menshevik – மென்ஷெவிக்

Cheka – செக்கா (அ) செகா

இதில் எனக்கு போல்ஷ்விக் என்கிற பெயர் மனதிற்கு சற்று நெருக்கமான பெயர். அதன் அர்த்தம் என்ன என ஏராளமானோர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் என் அலைபேசியின் பெயராக அந்தப் பெயர்தான் இருக்கும். நான் சொன்ன பிறகு என் அக்காள்  ஒருவர் அதே பெயரை தன்னுடைய அலைபேசிக்கும் சூட்டிவிட்டார்! மகிழ்ச்சிதான்.

இதைத் தாண்டி இந்த நூலில் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் வருவார்கள். அதையெல்லாம் பொறுமையாகப் படித்துக் கடந்தால் மனம் தெளிவுற ஒரு வரலாற்றைப் படித்த திருப்தி உங்களுக்குக் கிடைக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஒஸ்திரோவ்ஸ்க்கி குறித்தும், இந்த நூல் குறித்தும் இன்னும் எழுத விருப்பம்.. அதெல்லாம் இன்னொரு பதிவில் கண்டிப்பாக!

How the Steel Was Tempered?Nikoloi Ostroveysky.

Part-1 : http://www.cpa.org.au/resources/cpa-presents/how-the-steel-was-tempered-book-1.pdf …

Part-2 : http://www.cpa.org.au/resources/cpa-presents/how-the-steel-was-tempered-book-2.pdf …

******************************

 •    சர்வம் ஸ்டாலின் மயம்
  மருதன்
  கிழக்கு பதிப்பகம்

******************************

 • வீரம் விளைந்தது
  நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி 
  தமிழில் – எஸ்.இராமகிருஷ்ணன்
  கார்முகில் பதிப்பகம்
  ரூ. 250

*******************************

நன்றி:

ஆங்கில மின் புத்தகங்கள் இணைப்பு உதவி: அண்ணன் ஓஜஸ் 

3 comments

  1. https://thamizhg.wordpress.com/2013/09/04/89/ -பதிவில் எழுதியபடி என்னால் இயன்றபடி, நான் படித்த/படிக்கிற (படிக்காத 🙂 ) புத்தகங்களையும் அறிமுகப்படுத்த எண்ணம்.

   என்னளவில், நான் படித்த பெரும்பாலான நூல்கள் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படுமா? என்று தெரியாது.

   குறிப்பாக வீரம் விளைந்தது நூலைப் படிக்க ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அது எல்லோருக்குமான புத்தகம் அல்ல.

   முடிந்தமட்டும், பரவலாகப் படிக்கத்தக்க நூல்களை அறிமுகம் செய்வேன்.

   பலகோடி நன்றி தேவையில்லை!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s