சில விருப்பங்கள்

வணக்கம்.

இதோ செப்டம்பர் துவங்கி சில நாட்களும் ஓடிவிட்டன. என்னளவில் செப்டம்பர் ஒரு இனிய மாதம். அது எவ்வளவு இனியது? எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்/தந்தது/ தரப்போகிறது? என எல்லாமே இனி வரப்போகும் பதிவுகளில் ஓரளவேனும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சில விருப்பங்கள் உள்ளன. சென்ற ஆண்டைப்போல அதையெல்லாம் நான் சொதப்பாமல் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் இருக்கிறது. இங்கே கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

பலவகைப்பட்ட புத்தகங்களை என் ஆற்றலுக்கு, அறிவுக்கு  உட்பட்டு உங்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பம். இதில் சிலவற்றை அழுத்தமாக தெரியப்படுத்துகிறேன்.

  1. அவை படிக்க ஏதுவான புத்தகங்கள்.
  2. தமிழ் /ஆங்கிலம் தவிர்த்த புத்தகங்கள் கிடையாது.
  3. அவையெல்லாம் நான் முழுக்க படித்ததாக உறுதி சொல்ல முடியாது.
  4. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகங்களாக இருக்கலாம்.
  5. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஆசிரியரின் புத்தகங்களாக இருக்கலாம்.
  6. அவை மின் வடிவிலோ, அச்சு வடிவிலோ என்னிடம் இருப்பவை.
  7. அவை இரவல் புத்தகமாகவும் இருக்கலாம்.
  8. * மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

குறைந்த அளவாக 30 புத்தகங்கள் அறிமுகம் செய்ய விருப்பம். அதிக அளவாக அவை ஐம்பதை (50) நெருங்கலாம். நெருங்காமலும் இருக்கலாம். எளிய அளவிலோ, அல்லது எனக்கு புரிந்த மட்டிலோ எழுதுவேன் என நம்புகிறேன். உங்கள் பொறுமையை முடிந்தளவு சோதிக்காமல் எழுத முயற்சிப்பேன்.

இதுதவிர சென்ற ஆண்டு தொடங்கிய ஒரு தொடரை இப்போதாவது எழுத முடியுமா? என சில தோழர்கள் விரும்பியதால் அதையும் தொடருவேன். இதுதவிர இன்னும் சுவையான ஒன்றிரண்டு பதிவுகளும் எழுதுவேன் என நம்புகிறேன்.

நம்பிக்கை…………. அதானே எல்லாம்!

உங்கள் ஆலோசனைகளையும் கூறலாம். ( இந்த பதிவு பற்றி அல்ல. இதற்கு பின் எழுதப்போவன பற்றி.)

நன்றி.

அன்பன்,

தமிழ் 

Advertisements

6 comments

  1. புத்தகங்களின் அறிமுகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நானும் சமீபத்தில் பல புத்தகங்கள் வாங்கினேன். ஆனால் அவற்றை பற்றிய விமரிசனங்கள் எழுதுவேனா என்று தெரியவில்லை.

    என்னுடைய ‘டாலர் நகரம்’ புத்தக விமரிசனம் பற்றிய கருத்துக்களை (உங்கள் இருவரின் ) அறிய ஆவல். முடிந்தபோது எழுதுங்கள்.

    1. டாலர் நகரம் புத்தகம் பற்றி இணையத்தில் பரவலாக பலரும் எழுதப் படித்திருக்கிறேன். உங்களுடையதும் கூட!
      நான் படிக்காத ஒரு புத்தகத்தின் மேல் விமர்சனமோ, கருத்தோ எழுத எனக்கு வராது.
      பொறுத்தருள்க.

      1. தமிழ்! தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களே!
        புத்தக விமரிசனம் எழுதுவது எனக்கு மிகவும் புதியது. என் விமரிசனத்தைப் பற்றித்தான் எழுதச் சொன்னேன். நிச்சயம் படிக்காத ஒரு புத்தகத்தைப் பற்றி யார்தான் எழுத முடியும்?

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s