தோட்டியின் மகன் – சில கேள்விகள்

இப்பதிவு ஒரு தொடர்ச்சியான பதிவு:

முந்தின பதிவைப் படிக்க

தோட்டியின் மகன் நூலைப் படித்து முடிக்கையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஐயம் இதுதான்.

மலையாள மொழிபெயர்ப்பு என்பதால் ‘ழ’-வின் பயன்பாடு ஆங்காங்கே நூலில் இல்லாமல் இருந்தது. சற்றே விளக்கமாகச் சொல்வதானால், பழக்கம் என்கிற தமிழ் வார்த்தை ‘பளக்கம்’-ஆக மாறியிருந்தது. அதே நேரம் பழனி என்கிற பெயர் ‘பழனி’ யாகவே கையாளப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் ழ என்ற எழுத்தே கிடையாது என கேள்விப்பட்டிருக்கிறேன். (அல்லது)
நூல் முழுக்க எளிய மக்களின் வழக்கில் உரையாடல் இருப்பதால் அவ்வாறு மொழிபெயர்ப்பாளர் நடையைக் கையாண்டிருக்கிறாரா? எனவும் ஒரு ஐயம்.

அதன் பின்னர் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில், இந்நூல் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருந்ததன் காரணங்களில் அதன் தலைப்பும் ஒரு காரணம் என்று குறிப்பிடுகிறார். தோட்டி என்கிற சொல்லுக்கு பதிலாக தமிழில் வேறென்ன சொல் இருக்கிறது என்கிற ரீதியில் நடந்த விவாதங்களில் ஒன்றுதான் சென்ற பதிவின் இறுதியில் குறிப்பிட்ட உரையாடல். அது மொழிபெயர்ப்பாளருக்கும் (சுந்தர ராமசாமி) , அவரின் தோழர் ஒருவருக்குமான உரையாடல். படிக்கையிலேயே உணர்ந்திருக்க முடியும்.

அதே நூலில் மொழிபெயர்ப்பாளர் தோட்டி என்கிற சொல் அதற்கு முன் வேறெந்த தமிழ் நூலிலாவது தோட்டி என்கிற வார்த்தைப் பிரயோகம் இருக்குமா? எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.  அமரர். கல்கி  அவர்கள் எழுதிய அலை ஓசை (இரண்டாம் பாகம்)  நூலில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆக நூலின் மொழிபெயர்ப்புக்கு முன்பே தமிழ் நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இறுதியாக, மொழிபெயர்ப்பாளர் குறித்த ஒரு ஐயம். அதாவது (அவர் இறப்பதற்கு) சில ஆண்டுகள் முன்பு வரை சுரா என்கிறபடியே அவரை நான் படித்து வந்ததாக ஒரு நினைவு. அவர் இறப்பிற்கு பின்னர் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் அதே பெயரில் எழுதியும் பார்த்திருக்கிறேன். சமீபமாக சுந்தர ராமசாமி என்றே அழுத்தமாக அனைத்து தளங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

சில (அல்லது பல) ஆண்டுகளாகவே சுரா பதிப்பகம் என்கிற பெயரில் புத்தகங்களைக் காண இயலவில்லை. அப்படி ஒரு பதிப்பகம் இப்போதும் இயங்குகிறதா? பதிப்பாளர் மாறிவிட்டாரா? காலச்சுவடு என்ற பதிப்பகம் குறித்த தகவல்கள்தான் மிஞ்சுகின்றன.

ஏதேனும் குறிப்பிடத் தோன்றினால் மறுமொழி இடவும்.

Advertisements

One thought on “தோட்டியின் மகன் – சில கேள்விகள்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s