வாசி… பகிர்.

வணக்கம்.

எவ்வளவோ படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்குமாய் விடயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி அவற்றைப் பிறருக்கும் பகிர்ந்துகொள்ள ஒர் வாய்ப்பாக இந்த பதிவை வழக்கம்போல பயன்படுத்திக்கொள்கிறேன்.

  • நிறைய புத்தகங்களைப் பார்க்கவும், படிக்கவும் நேரிட்டது.  தலைப்புகள், அட்டை வடிவமைப்புகள் கூட இப்போதெல்லாம் மிகவும் யோசித்து உருவாக்கப்படுகின்றன. இலக்கிய மொக்கைகள் என்று ஒரு புத்தகம் (!) தலைப்பிலும், அட்டையிலும் அதிர வைத்தது.
  • உலகப் பேருரைகள் (தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்) புத்தகம் 3-4 ஆண்டுகளாய் வீட்டில் கேட்பாரற்றுக் கிடப்பதாய் ஒரு எண்ணம். எப்படியும் இவ்வாண்டு இறுதிக்குள்ளாகத் துவங்கிவிட விருப்பம்.
  • நிறைய வார இதழ்களைப் படிக்க கொஞ்சம் அவகாசம் வாய்த்தது. இரண்டு சிறுகதைகளைப் படிக்க நேர்ந்தது. இரண்டுமே ஆனந்த விகடனில் வந்தவை. (அ.வெண்ணிலா எழுதிய பகிர்தல், கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய கலைத்து எழுதிய சித்திரம். )
  • விகடனில் எழுத்தாளர் இமையம் அவர்களின் பேட்டியையும் படிக்க நேர்ந்தது. மிகவும் மகிழ்ந்தேன். எழுத்தாளர்களை ஏன் கொண்டாட வேண்டும்? என்றும் படைப்புகள் மட்டுமே காலம் கடந்தும் எழுத்தாளனைப் பெருமைப்படுத்தும் என்றுமாக நிறைய கருத்துகளைப் பேட்டி வழியே கூறியிருந்தார். அவர் கூறிய ஒரு கருத்தின் வழியே மேலே குறிப்பிட்ட கீரனூர் ஜாகீர் ராஜாவின் சிறுகதையை முழுமையாக உணர முடிகிறது.
  • நான் (மட்டுமல்ல பலரும்) எதிர்பார்த்தபடியே விகடனில் வாலிக்கு கவிதாஞ்சலி என்று இளைய கவிஞர்கள் சிலர் எழுதியிருந்தனர். வைரமுத்து குட்டி கட்டுரை மட்டும் எழுதியிருக்கிறார். பா.விஜய், கபிலன் ஆகியோரது வரிகள் அவருக்கான புகழ்மாலையாகப் பட்டது. மற்றபடி ம.செ. ஓவியம்தான் உன்னதமான, உள்ளப்பூர்வமான அஞ்சலியாகப் பார்க்கிறேன்.
  • புதிய தலைமுறை இதழில் நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. பா. விஜய் எழுதிய தொடர் முடிந்து விட்டது போல. புத்தகமாக வெளிவந்தால், விலையையும், அப்போதைய சூழலையும் பொறுத்து வாங்க முயற்சிப்பதாக ஒரு எண்ணம். இதழில் வாசகர் கருத்துகளை வித்தியாசமாக அணுகுவதைப் போல பட்டது. நல்லாருக்கு!
  • புதிய தலைமுறையிலும், சிறுகதைக்கென்று ஒரு இடம் இருந்தால் நன்றாயிருக்கும் என தோன்றுகிறது. அட்டைப்படக் கட்டுரைக்காக முடிந்தமட்டும் தகவல்களை, விவாதங்களைச் சேகரிக்கிறார்கள். மிகச் சிறப்பான முயற்சி.
  • எழுத்தாளர் முகில் எழுதிய யூதர்கள் புத்தகத்தைப் படிக்கையில் ஏதோ அமானுஷ்ய உலகிற்குள் போய்விட்ட உணர்வு ஏற்படும். அந்த உணர்வைப் பெற மீண்டும் ஒருமுறை வாசிக்க விருப்பம். ஆனால் முற்றிலும் சுதந்திரமான சூழலில்தான் அதைத் தொடவேண்டும் என்று எண்ணிக் காத்திருக்கிறேன்.

சில கவிதை முயற்சிகளும், சிறுகதை முயற்சிகளும் நடந்து வருகின்றன. காசி ஆனந்தன் அவர்கள் எழுதியது போல

”நிறைவாகும் வரை
மறைவாக இரு ”

என்ற வாக்கியமே துணை. காத்திருங்கள்.

காத்திருப்பும், வாசிப்பும் எப்போதுமே சுகமானது!

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s