வாசிப்பிலிருந்து…

சிதறல் வகை பதிவுகளை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று பல கருத்துகள் வந்தபடியால், நீண்ட இடைவெளிக்குப் பின் சிதறல் வகைப்பதிவுகள் இங்கே.

 • மாதம் ஒரு புத்தகம் படிக்க எண்ணியிருந்தேன். தாய், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மலைக்கள்ளன் ஆகியன மட்டும்தான் படித்து முடித்துள்ளேன். இவைதவிர சிறு புத்தகங்கள் தனி. சில புத்தகங்கள் தொடங்கியபடி நிற்கின்றன. எப்படியும், ஜூன் – ஜூலையில் நிலைமை கைக்குள் வந்துவிடும்!
 • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) சிறுநூல் வரிசை என்கிற பெயரில் குட்டிகுட்டி நூல்களை குவித்து வைத்திருந்தனர். அதில் 5-6 நூல்களை வாங்கினேன். அதிகபட்சமாக 32 பக்கங்கள் கொண்ட நூல் 20 ரூபாய். இல்லையேல் 10 ரூபாய். இந்த ரகத்தில் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பொருத்தமான தலைப்புகளில் நல்ல நூல்கள் அதிகம் வெளியிட்டால் பிரயோசனம்.
 • என் யோசனை புகழ்பெற்ற 2-3 சிறுகதைகளை 20 ரூபாய்-க்கு 30 பக்க அளவில் தரலாம். அதை விடுத்து சில நூல்களில் வெறும் அட்டைதான் இருப்பது போலான உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிறைய முல்லா கதைகள் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு துளி:

முல்லா வீதியில் சென்றுகொண்டிருந்தார். அவரது கண்கள் குடித்துச் சிவந்திருந்தன. பாக்கெட்டில் ஒரு சிகரெட் பெட்டி இருந்தது.

எதிரே வந்த நண்பர் கேட்கிறார்.

“முல்லா நீங்கள் குடித்திருக்கிறீர்களா?”

“இல்லை.”

“சிகரெட் குடிப்பீர்களா?”

“இல்லை.”

“வேறேதும் தீய பழக்கங்கள் இருக்கிறதா?”

“ஆம். அவ்வப்போது சின்னச்சின்ன பொய்கள் சொல்வேன்”

கடைசியாக கவிதை:

உன்னை என்னுள் இட்டு,

விண்ணின் ஆழந்தொட்டு,

கண்ணின் துளியைவிட்டு

மழையானேன்…!

******************

மௌனங்கள் தாண்டுவேன்.
காற்றலைகள் தீண்டுவேன்.
உனக்குள்ளும் தூண்டுவேன்…!
#உன்னால் நானும்
மேற்படி உள்ள இரண்டு கவிதைகளும் எழுதியது நானேதான். சிலர் ரசித்துப் பாராட்டியதால் இங்கே மாதிரிக்கு இரண்டு மட்டும். இது பிடிக்காதவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்.
இன்னும் ஏதாவது படிக்க விருப்பம் கொண்டால் 
https://myinks.wordpress.com – எனது புதிய(!) குறும்பதிவுகளுக்கான களம். 
நன்றி. இன்னொரு சிறந்த பதிவில் உரையாடலாம்!
Advertisements

3 thoughts on “வாசிப்பிலிருந்து…

 1. இதைபோன்ற பதிவுகள் உங்கள் free-style எழுத்துத் திறமையை காட்டுகின்றன தமிழ்!
  இது போல நிறைய எழுதுங்கள்!
  வாழ்த்துகள்!

  1. வோ.சோமு,

   எதற்காக எனக்கு அனுப்ப நினைக்கிறீர்கள்? என புரியவில்லை. ஒரு வேளை எனது வாசிப்புக்கு பரிந்துரைக்க விரும்பினால், கட்டுரையின் இணைப்பைத் தரவும்.

   நன்றி.
   தமிழ்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s