பெரியார் பற்றி கல்கி சொன்னவை

பெரியார் குறித்த புரிதலுக்கான பல பதிவுகளில் இதுவும் ஒன்று. இன்னும் வரும்…. இதன் முன்னுரையை (பதிவின் காரணம்) படிக்க இங்கே சொடுக்கவும்.

முற்றுணர்ந்த பேராசிரியர்!

கல்கி

சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை , அரைமணி நேரத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால், பண்டிதர் சுராஜ்-உத்-தௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும், அவருடைய பேச்சில் அலுப்பு தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியின் பிரசங்கம் ஒன்றைமட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்துவிடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில், முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளிலும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்!

தாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள் தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய் பயனிலைகள், ஒருமை பன்மைகள், வேற்றுமை உருபுகள் முதலியவற்றைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை, மக்களின் மனத்தைக் கவரும் முறையில் அவர் சொல்லும் வித்தையை, அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ, சொல்ல வேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறு எவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்ற முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பிஏ., எம்ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. ”இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” – என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர்பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்த காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாசகங்களுள் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண் பணச்செலவு நேரும் என்பது.

“ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சராக நிற்பவர், இந்த 30,000 ‘கார்டாவது’ போட வேண்டும். சர்க்கார் தபால் இலாகாவுக்கு லாபம். இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய்விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். “நான் செத்துப்போகவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன்” என்று மறுபடியும் 30,000 கார்டு போட வேண்டும்.”

நாயக்கரின் இந்த வாதத்தில், அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது – ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 4,000 ஜனங்களும், ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை ‘கொல்’  என்று சிரித்து மகிழ்ந்தோம்.

1931-ல் ஆனந்தவிகடன் –ல் எழுதியது

Advertisements

2 thoughts on “பெரியார் பற்றி கல்கி சொன்னவை

  1. பெரியார் – கல்கி உறவு பற்றி நிரம்ப படித்துள்ளேன். எழுதினால் பல பதிவுகள் தேறும். ஒரு சோறு பதம் இங்கே : திருச்சியில கல்கிக்கு முதல் முதலில் சம்பளம் கொடுத்தவர், பெரியார். இருவரும் காங்கிரஸ் தொண்டர்கள். பெரியார், திருச்சி கிளையின் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தார், கல்கி அவர்களோ எட்டாம் வகுப்புக்கு பிறகு காங்கிரஸில் சேர்ந்து விட்டார் ! சாகும் வரை கல்கிக்கு பெரியாரை பிடிக்கும், பெரியாருக்கும் தான் 🙂

    விசித்திரமான உறவு தான், ஆனாலும் விரிசல் எதுவும் இல்லை

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s