வீடு

சுவாரசியம் என்பதும், அசுவாரசியம் என்பதும் நம் புரிதலில் இருக்கிறது. நம் ரசனையில் இருக்கிறது.

நான் உடல்நலம் குன்றி இருந்த தருணங்களில் இருந்து மீண்டு சில நாட்கள் ஓய்வும் எடுக்க நேர்ந்தது. அதுசமயம் நேரங்களை நகர்த்த சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று வீடு.

இன்றைக்கு சரியாக (அதாவது இந்த வருடம்) 25 வருடங்களுக்கு முன் பாலுமகேந்திரா அவர்கள் இயக்கத்தில்* வந்த திரைப்படம்தான் வீடு (1988).

அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் எல்லாமே அவர்தான். தயாரிப்பும் அவராகத்தான் இருக்க வேண்டும். வேறு பெயர் (கலாதாஸ்) திரையில் வருகிறது.

படத்தின் கதை தலைப்பிலிருந்து துவங்குகிறது. வீடு. அதுதான் கதையே! கதை பாலு மகேந்திரா அவர்களின் மனைவி அகிலா மகேந்திரா எழுதியிருக்கிறார். 1980-1990 களில் நடுத்தர வர்க்கம் அல்லது எளிய மக்கள் சொந்த வீடு கட்ட என்னென்ன இன்னல்கள் இருக்கின்றன என்பதாக மேலோட்டமாகச் சொல்லிவிடலாம்.

பாடலாசிரியர் யுகபாரதியின் ஒரு கவிதை குறிப்பிடுவதுபோல ‘வாடகை வீட்டில் வசிக்கலாம் ஆனால் வாழ முடியாது’ என்கிற கவிதை வரி எத்தனை உண்மை என்பது வாடகை வீட்டுக்காரர்களுக்குத்தான் தெரியும். இன்றைய சூழலிலும், அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகும் கூட நிலை அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. சில நரகக்குழிகள் வாடகை வீடுகளாக இருந்ததை நேரில் கண்டவன் நான்.

வாடகை அதிகமானதால் வேறுவீடு பார்க்க முடிவு செய்கின்றனர். அதாவது ஒரு வயதான தாத்தா (சொக்கலிங்க பாகவதர்), அவரின் இரு பேத்திகள் (பானு சந்தர், இந்து) இவ்வளவுதான் குடும்பம்.

தாத்தாவின் ஓய்வூதியம், மூத்த பேத்தியின் சொற்பமான சம்பளத்தினைக் கொண்டு இயங்கும் இக்குடும்பம் இன்னொரு வாடகை வீட்டைத் தேடுகிறது. பானு சந்தரின் காதலனும் சேர்ந்து உதவுகிறான். ஆனால் வாடகை எதிர்பார்த்ததை விட அதிகம் என்ற சூழலில் அவர்களுக்கென்று சொந்த நிலம் இருப்பதை அறிகிறார்கள். அங்கே எப்படி வீடு கட்ட முனைகிறார்கள்? சாதாரணமான எந்தவித பொருளாதார பலமும் இல்லாத குடும்பத்தினரின் சொந்த வீட்டு ஏக்கங்களையும், அதன் பொருட்டு அவர்களின் தியாகங்களையும் கண் முன் நிறுத்துகிறது படம். முடிந்தால் படத்தை நீங்களும் பாருங்கள்.

இதில் குறிப்பிட வேண்டியதாக நான் நினைக்கிறவை இவைதான்:

  • 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாடல்களே இல்லை. இன்றைய காலத்தில் 8-10 பாடல்கள் படங்களில் வருகின்றன.
  • படத்தின் மொத்த நீளம் 117 நிமிடங்கள் (01.47). இப்போது 2-30 மணிநேரத்துக்கு படம் எடுக்கிறார்கள்.

அத்தனை வருடங்களுக்கு முன் பாடல்கள் இல்லாமல், எந்தவிதமான வணிக சமரசங்களுக்கும் இடம்கொடுக்காமல் யதார்த்தமான ஒரு கதையை எடுத்திருப்பதை பிரமிப்பான யோசனையாகவும் பார்க்கலாம் அல்லது துணிவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

யதார்த்தம் என்கிற வார்த்தைக்கான பொருள் (எனக்கு) படத்தில் கிடைக்கிறது. எடுத்துக்கொண்ட கருப்பொருளை எந்த இடத்திலும் தவறவிடாத திரைக்கதையும், வசனமும் பட்த்தின் பெரும்பலம்.

பெரும்பாலான பாலுமகேந்திரா படங்களைப் போலவே இதற்கும் இசை இளையராஜா அவர்கள்தான். How to Name it? ஆல்பத்தில் கேட்ட இசைபோல தோன்றுகிறது. இருந்தாலும் பல இடங்களில் இசையாலும் (Do Anything ), மௌனத்தாலும் வசீகரிக்கிறார். இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ? என்றும் தோன்றியது.

சமகால தமிழ் சினிமாக்களில் வழக்கு எண் 18/9 திரைப்படமும், மதுபானக்கடை திரைப்படமும் இதோடு சேர்த்துப்பார்க்கலாம் என்றாலும் நிறைய வேறுபாடுகள் (வணிக சமரசங்கள், பாடல்கள்) இருப்பினும் ஒற்றுமை கொஞ்சம் ( படத்தின் நீளம், மக்களின்/சமூகத்தின் அன்றாட வாழ்வோடு பொருந்திப் போகிற கதைக்களம், etc) இருக்கத்தான் செய்கிறது.

நீங்களும் படத்தைப் பாருங்கள். உங்களுக்குள்ளும் கருத்துக்கள், ஏக்கங்கள் எழலாம். படத்தை முன்னமே பார்த்திருந்தால் உங்கள் எண்ணங்களை இங்கே பதியலாம். வித்தியாசமான சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் தைரியமாகப் பார்க்கலாம்.

 Youtube-ல் வீடு: 

இவை முழுக்க, முழுக்க எனது கருத்துகளே. மாற்றுக்கருத்துகள் எப்போதும் போல வரவேற்கப்படுகின்றன. நன்றி.

கடைசிக் குறிப்பு: இதுதான் எனது முதல் திரைப்படம் சார்ந்த பதிவு. இனி எழுதுவது என்பதையும் அத்தனை உறுதியாகச் சொல்ல இயலாது.

Advertisements

4 thoughts on “வீடு

  1. வாழ்த்துகள்…..
    ஒரு வீடு இரு வாசல் – 1990 Indian film directed by K. Balachander
    படம் முடிந்தால் பாருங்கள்..இரண்டு வேறுப்பட்ட கதைகள் உள்ளடக்கியது…

  2. இரு பேத்திகள் – பானு சந்தர் (இது ஒரு ஆண் நடிகர் இல்லையோ?) ஓ வசந்த ராஜா என்று பாடுவாரே அவர் என்று நினைக்கிறேன். பானுப்ரியா வா?
    ஒருமுறை தொலைக்காட்சியில் இந்தப் படம் வந்தது. எனக்கும் நடிகைகள் யார் என்று நினைவில் இல்லை. ரொம்ப ரசித்ததாகச் சொல்ல முடியாது. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன், இன்னொருமுறை பார்க்கலாமோ என்ற தோன்றுகிறது.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s