தாமதமான நன்றி…

வலை உலகில்,  வலைப்பதிவுகள் எழுதுகிற எல்லோருக்கும் ஓராண்டு அனுபவங்களை எழுதலாமே! என்று ஆசையிருக்கும். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு அனுபவங்கள் கிடைக்காமல் போனாலும், அனுபவங்கள் எனக்கு கிடைத்தாலே போதும் என்கிற அளவில் விருப்பப்பட்டேன். அதன்படி நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளன.

தலைப்பு கொஞ்சம் “ஒரு மாதிரியாக” போய்விட்டது. இருப்பினும் பரவாயில்லை. தாமதம் பெரும்பாலும் எல்லா விதத்திலும் மோசமானதுதான். அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.

சில பதிவுகளின் சுவாரசியங்களை பகிர விருப்பம்.

 •  நவீன தத்துவங்கள் பதிவு ஒரே நாளில் 5 நிமிடத்தில் திட்டமிடப்பட்டு உடனடியாக எழுதி வெளியிட்டேன். சிறந்த 10 தமிழ்ப் பதிவுகளில் ஒரு நாள் இடம் பெற்று வியப்பில் ஆழ்த்தியது.
 • சீனாவின் இன்னொரு முகம் பதிவு வெளியிட்ட நாளே 50 பேர் பார்வையிட்டனர். இதே பதிவின் பொருட்டு கூகுள் + தளத்தில் சில நண்பர்கள் கிடைத்தார்கள். எழுத்தாளர் மருதன் அவர்களுக்கு நன்றி.
 • தவறவிடக்கூடாதவன் பல நாட்கள் திட்டமிடப்பட்டு அண்ணனிடம் எதுவும் இரகசியங்கள் சொல்லாமல் வெளியிட்ட பதிவு. அதில் மதிப்பிற்குரிய பாலா சாரின் பின்னூட்டம் கிடைத்ததும் மனதார மகிழ்ந்தேன்.
 • மழையில் கரைந்த வரிகள், மழையில் குழைந்த வரிகள் பதிவுகள் இன்றளவும் கூகுள் தேடலில் கிடைக்கின்றன. அதிக தேடல்கள் செய்யப்பட்ட பதிவுகளுள் இவை முன்னணியில் இருப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை!
 • டெமுஜின் கதை வித்தியாசமான பல அனுபவங்களைத் தந்த பதிவு. இன்றளவும் ஒரு சிலர் என்னை ’டெமுஜின்’ என்றே அழைக்கிறார்கள்.
 • ஆடித்திருநாள் பதிவில்தான் ரஞ்சனி அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இதைப்பற்றி அவரே பலமுறை எழுதிவிட்டார், அந்த பதிவை ட்விட்டரில் விளையாட்டாக பதிவு செய்கையில் அண்ணன் ஓஜஸ்தான் அதைப் பதிவாக்கச் சொன்னார். மிக்க நன்றி.
 • கூகுள் பிளஸ்ஸில் எனது சின்னச்சின்ன பதிவுகளையும் பாராட்டி ஊக்கப்படுத்திய நட்பு வட்டங்களுக்கு (Friends circle!!) நன்றி. எனது ஆனந்தக் கவிதை அப்படி ஒரு சூழலில் உருவானதுதான். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
 • அரசியல் பதிவுகள் நான் எழுதவில்லை என்று சொன்னால் அது பொய். தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய பதிவுகளில் கொஞ்சம் அரசியல் சார்பு இருக்கும்.
 • நகைச்சுவையாக பதிவுகள் எழுதியதாக நினைவில்லை. எனக்கு அத்தனை “ஹாஸ்யமாக” எழுத வராது. தேவனின் எழுத்துக்களை அவ்வப்போது படித்து இன்புறுவதோடு சரி. (இந்த ஆண்டு எழுத்தாளர் தேவனுக்கு நூற்றாண்டு.)
 • நண்பர் முஹ்ஸின் என்னை நம்பி ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையைக் கொடுத்தார். அவருக்கும் நன்றி.

இனி நன்றி:

அன்பிற்கினிய

 • அண்ணன் ஓஜஸ்
 • பாலா சார்
 • ரஞ்சனி அம்மா
 • திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
 • மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத எனது தோழர்கள் அனைவருக்கும்!நன்றி

தனிப்பட்ட முறையில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி அறிந்த நண்பர்களாக இருக்கிறார்கள் வெளிப்படையாக எழுதுவதில் சில மனக்குழப்பங்கள் வேறு.

இறுதியாக:

கேள்வியும் பதிலும் கதையின் முடிவை இன்னும் கொஞ்சம் அழுத்தமான சொற்களால் எழுதியிருக்க வேண்டும். அதன் பொருட்டு சில வருத்தங்கள் இருக்கலாம். அக்கதை ஒரு வருடத்திற்கு முன்பிருந்த வாசிப்பு நிலையிலிருந்து எழுதப்பட்டது. அடுத்த சிறுகதை ஆரம்பமாகிவிட்டது. அது அனைவரையும் கவரும்படியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

அண்ணன் ஓஜஸ் மலைக்கள்ளன் நூலைத் தந்துள்ளார். இன்றுதான் (08-04-12) துவங்கியுள்ளேன். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. அவர் சொன்னதைப்போல அத்தனை வேகமாக படிக்க இயலாது. அதில் ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அதுபோக எனது உடல்நிலையை கொஞ்சம் மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மற்றுமோர் ஆச்சர்யமான செய்தி இன்று கிடைத்தது. அது இப்போதைக்கு சஸ்பென்ஸ்! பரவசத்திற்கு மட்டும் தயாராய் இருங்கள்.

இசைப்பா குறித்து எழுத விருப்பம்தான் இருந்தாலும் அதற்கு இதைக் களமாக்க விருப்பமில்லை.

இனிய புத்தகங்களின் வாசிப்பில் என்னைக் கொஞ்சம் கூர்மையாக்கிக் கொள்ள முனைகிறேன். அது ஒருவேளை எனது எழுத்துக்களில் எதிரொலித்தால் மிகையாக இருப்பின் பொறுத்தருள்வது உங்கள் கடன்.

தளத்தின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்ய விருப்பம். குறிப்பாக என்னைப் பற்றிய அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் “தெளிவாக” எழுத விருப்பம்!

வலி மிகுந்த பல தருணங்களில் முகம் தெரிந்த/தெரியாத பலரின் சொற்களினால், வாழ்த்துகளினால் மகிழ்ச்சியுற்றேன்.

உன்னுடைய பதிவுகளைப் படித்துதான் எனக்கும் எழுத ஆசை வந்தது என சிலர் சொல்லியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி இன்னும் சொல்ல எண்ணம் நூறிருக்கு!

அதைக் கேட்க கொஞ்சம் நாளிருக்கு!!

இப்போதைக்கு இது போதும்!

உங்கள் உயிர் போன்ற நேரத்தை அதிகமான வாக்கியங்களால் வீணடிக்க மனமின்றி இத்தோடு நன்றி பாராட்டல் நிறைவு பெறுகிறது. அன்பார்ந்த தோழர்கள் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனதாகக் கருதினால் தயைகூர்ந்து பொறுத்தருள்க. என் இதயத்தின் இறுதிநொடி வரை நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. எப்போதும் யாரையும் மறக்க விருப்பமில்லை.

 

அடுத்தடுத்து பதிவுகள் வருமென நம்பிக்கையுடன்,

தமிழ்.

 

Advertisements

2 thoughts on “தாமதமான நன்றி…

 1. நன்றி…

  /// வலி மிகுந்த பல தருணங்களில் முகம் தெரிந்த/தெரியாத பலரின் சொற்களினால், வாழ்த்துகளினால் மகிழ்ச்சியுற்றேன். ///

  100% உண்மை… அந்த மன ஆறுதலை வார்த்தைகளால் சொல்ல முடியாது… உணர முடியும்… நமக்குள்ளேயே நாம் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ளும் மகிழ்ச்சி…

  வியப்பான செய்தியை ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறோம்…

  தொடர வாழ்த்துக்கள்…

 2. என்ன என்னமோ பதில் சொல்ல வேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது ! இங்கு வந்த ஒவ்வொரு பதிவையும், படித்து, சில முறை விமர்சித்த வாசகன் என்னும் பெருமையும், மகிழ்ச்சியும் போதும் ! இத நன்றி எல்லாம் சொல்லி முடிக்க முடியாது

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s