சில பகிர்வுகள்…

ஒவ்வொரு நாளும் கடந்துகொண்டேதான் இருக்கின்றன. புதிது புதிதான மாற்றங்களை எதிர்நோக்கியபடி தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதோ இந்த தளம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. இரண்டாம் ஆண்டில் இன்னும் சிறப்பாக இயங்கித் தீரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. சரி ஓராண்டில் சிறப்பாக இயங்கியிருக்கிறேனா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.

எதையெல்லாம் எழுத வேண்டும், பகிர வேண்டும் என்றெண்ணி இத்தளத்தைத் துவக்கினேனோ, அதில் ஒரு பகுதி கூட இன்னும் செய்யவே இல்லை. சில தனிப்பட்ட கருத்துகளை / பொதுக்கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதத் திட்டமிட்டிருந்தேன். இன்னும் துவங்கவில்லை. அதே சமயம் பெரியார் குறித்து எழுத ஆசைப்பட்டேன். எழுத ஆரம்பித்துவிட்டேன். நிறைய தொடர்களாய் எழுத ஆசைப்பட்டு சற்றே அதிக எண்ணிக்கையில் துவங்கிவிட்டேன். அதையெல்லாம் இன்றே சரிசெய்துவிடுவது உத்தமம்.

பொன்னியின் செல்வன்:

பலரும் பாராட்டிய எனது தொடர்களுள் முதன்மையானது இதுதான். எந்த மாதிரி எழுதுவது? என்கிற குழப்பம் சூழ்ந்து பிறகு எழுதி, அதன்பிறகு போதுமான காலம் கிடைக்காமல் பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட இத்தொடர் முழுமையாக நிறுத்த விருப்பம். இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை. அன்புத்தோழர் அண்ணன் ஓஜஸ் சொன்னதன் பொருட்டு இத்தொடரை ஆரம்பித்தேன். அவர் பெறாத இன்பத்தை என்னை பெறவைக்க முயன்ற அவருக்கு என் நன்றி. இத்தொடர் மீண்டும் பொன்னியின் செல்வனைப் படிக்கத் தூண்டுகிறது என கருத்துகள் வந்தன. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இதே காரணத்தின் பொருட்டு அறிமுகமாகி இப்போதும் வழிநடத்துகிற ரஞ்சனி அம்மா அவர்களுக்கும் நன்றி.

டெமுஜின் கதை

இனியும் தொடர்ந்து இதை எழுத விருப்பம். அதற்கு முன்னதாக சில விளக்கங்கள் வேண்டியதாய் இருக்கிறது. மங்கோல் திரைப்படத்தையும், செங்கிஸ்கான் தொடர்பான ஆவணப்படம் ஒன்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் விபரங்களை விரைவில் முழுமையாகத் தருகிறேன்.

தந்தையோடு…

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை சரியான புரிதலோடு அனைவருக்கும் தெரியப்படுத்த எண்ணி துவங்கியது. இதன் காரணமாய் இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வரும்.

கோவர்த்தனன்:

மிக விருப்பங்கொண்டு துவங்கிய ஒரு முயற்சி. சிறப்பாக எழுத வேண்டும் என்பதாலும், அனுபவம் பெற இன்னும் கொஞ்சம் வாசிப்பு தேவைப்படுகிறது. இதன் பொருட்டு தொடர்ச்சியாக சில சிறுகதைகள் எழுதவும் விருப்பம். இந்த கதையின் பொருட்டு ஒரு பாடலையும் நானே எழுதினேன். தழுவல்தான் என்றாலும் என்னளவில் ஒரு இனிய, புதிய முயற்சி. இந்நாவலுக்கு அதிகபட்சமான பயிற்சியும், முயற்சியும் தேவைப்படுவதால் இப்போதைக்கு தொடர்வதாயும் இல்லை. அதன் பொருட்டு கைவிடுவதாயும் இல்லை. உங்களுக்காக அந்த பாடல் மட்டும் இங்கே. வரிகளைக் கொண்டு பாடலின் சூழலை உணர முடியும் என நம்புகிறேன். இப்பாடலின் மூலப் பாடலை கண்டுபிடித்தால் உங்களுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுகள்.

ஏ மணப்பெண்ணே! உன் வாழ்வில் இன்று பூக்காலம்.

நெஞ்சில் இன்பம் தீ போல் பரவட்டுமே!

ஓ மணப்பெண்ணே! உன் வாழ்வில் இன்று தேன்காலம்.

நெஞ்சில் இன்பம் தீ போல் பரவட்டுமே!

வாராயோ! வாராயோ! என்னோடு சேர்ந்து நீ ஆட!

வாராயோ! வாராயோ! என்னோடு சேர்ந்து நீ பாட!

*******

இரு மனம் இணையும் ஒன்றாய்! எல்லாம் நன்றாய்!

இதுபோல் என்றும் நீங்கள் வாழ்வீர்கள்.

அன்றில் பறவை உண்டு. ரெண்டும் ஒன்று

இதுபோல் என்றும் நீங்கள் வாழ்வீர்கள்.

ராத்திரி கத்தும் ஓநாய்க் கூட்டம் இன்றைக்கென்று காணோம்!

இந்த இரவு விடியாதென்றும் நீளும் நீளும் நீளும் நீளும்!

அவனும் பாதி அவளும் பாதி கானம் பாடும் வானம்பாடி

அவனும் அவளும் சேர்ந்தால் போதும் வானம் முழுதும் விண்மீன் கூட்டம்.

வாராயோ! வாராயோ! என்னோடு சேர்ந்து நீ ஆட!

வாராயோ! வாராயோ! என்னோடு நீ பாட!

****************

           வானம் வாழ்த்திப் பாடும்! முகில் சூழ்ந்தே ஆடும்!

எல்லாம் வல்லானே இங்குண்டு!

பறவைகள் அசைந்தே பாடும்! இசைந்தே ஆடும்!

காற்றும்  ஒலித்திடும் இனிய சங்கீதம்!

ராத்திரி கத்தும் ஓநாய்க் கூட்டம் இன்றைக்கென்று காணோம்!

இந்த இரவு விடியாதென்றும் நீளும் நீளும் நீளும் நீளும்!

அவனும் பாதி அவளும் பாதி கானம் பாடும் வானம்பாடி

அவனும் அவளும் சேர்ந்தால் போதும் வானம் முழுதும் விண்மீன் கூட்டம்.

ராத்திரி கத்தும் ஓநாய்க் கூட்டம் இன்றைக்கென்று காணோம்!

இந்த இரவு விடியாதென்றும் நீளும் நீளும் நீளும் நீளும்!

அவனும் பாதி அவளும் பாதி கானம் பாடும் வானம்பாடி

அவனும் அவளும் சேர்ந்தால் போதும் வானம் முழுதும் விண்மீன் கூட்டம்.

ராத்திரி கத்தும் ஓநாய்க் கூட்டம் இன்றைக்கென்று காணோம்!

இந்த இரவு விடியாதென்றும் நீளும் நீளும் நீளும் நீளும்!

அவனும் பாதி அவளும் பாதி கானம் பாடும் வானம்பாடி

அவனும் அவளும் சேர்ந்தால் போதும் வானம் முழுதும் விண்மீன் கூட்டம்.

இது தவிர இன்னும் சில தொடர்கள் இருந்தால்(!) பொறுத்தருள்க.

நன்றி இன்னும் நிறைவாகச் சொல்லவில்லை. உடல்நலம் ஒத்துழைக்காமல் போனதன் காரணமாய் சற்று ஒதுங்கி நிற்கவேண்டியதாய் போயிற்று. நாளை எனது சிறுகதை ஒன்றும் இங்கு வந்துவிடும் என்று நம்புகிறேன். அதன் பிறகு நன்றி பாராட்டும் படலம் தொடரும்.

ஓராண்டு கடந்தாயிற்று என்பதன் முதிர்ச்சி கொஞ்சமேனும் இருக்கக் கருதியும், பதிவின் வீரியம் கருதியும் இங்கே முடிக்கிறேன். தவறுகள், கருத்துகளைச் சொல்லலாம்.

Advertisements

2 thoughts on “சில பகிர்வுகள்…

  1. ஓராண்டு நிறைவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். நமது முதல் அறிமுகத்தையும் நினைவு கூர்ந்ததற்கு சிறப்பு நன்றி!

    மேலும் மேலும் நிறைய எழுதி, எழுத்துலகில் உங்களுக்கென்று ஒரு சிறப்பான இடம் பிடிக்க வாழ்த்துகள்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s