சிதறல்-3

வணக்கம்.

பதிவுகளை இங்கு தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். முன்னர் இதுபோல சிதறல் வகைப் பதிவுகளை எழுதி வந்தேன். இப்போதும் அதே…அதே! இனியும் இது போன்ற பதிவுகளைத் தொடரலாமா? என்பது உங்கள் கருத்துகளில்தான் உள்ளது. எப்போதும் என் நன்றி உங்களுக்கு உரியதாகும். இன்னும் இன்னும் தோழர்களின் பதிவுகளைப் படித்து, படித்து ஏதேனும் பிடித்திருந்தால் பகிரவும் விருப்பம்.

  • நான் சில தனிப்பட்ட காரனங்களுக்காக தோழர்கள்/வழிகாட்டிகள் சிலருக்கு மின்னஞ்சல் மூலம் உதவி கேட்டிருந்தேன். அனைவருமே உதவியமைக்கு நன்றி. மார்ச் மாதம் அதைப் பற்றி கட்டாயம் எழுதிவிடுவேன்.
  • மாதம்தோறும் குறிப்பிடும்படியாக புத்தகங்கள் படிப்பதாக இவ்வருடம் ஒரு விருப்பம். அதன்படி மாக்ஸிம் கார்க்கி எழுதிய ’தாய்’ நாவலை சென்ற மாதம் படித்து முடித்தேன். நடுஇரவு 12-00 மணியளவில் முடித்தது எனக்கே ஆச்சர்யமான விடயம்தான்! அதுபற்றி தனியே ஒரே பதிவில் எழுதி விடுகிறேன்.
  • நிறைய தொடர்களை ஒரு வேகத்தில் தொடங்கிவிட்டேன். அதன் காரணமாய் நிறைய பேர் அடுத்தடுத்த அத்தியாயங்களை எதிர்பார்த்து எப்போது வெளிடுவதாய் உத்தேசம் என்கிற மாதிரி கேட்டனர். இதுவரை மூன்று (அல்லது 4) தொடர்களை நிறுத்தியுள்ளதாக நம்புகிறேன். தற்போது அதிகம் எழுதுவதை விட படிக்கவே ஆசை. அதுதான் காரணம்.

படித்ததிலிருந்து:

மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பாசம்

’தாய்’ நாவலில் இருந்து

ஒரு கவிதை:

அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்,
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்!’

-பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் 152-ம் பாடலின் ஒரு பகுதி.

அர்ச்சுனன் திரௌபதிக்கு சொன்ன மேக வர்ணனை

(சமீபத்தில்) எழுதியதில் பிடித்தது:

புளியோதரையைக் கண்டுபிடித்தவன் என்றென்றைக்கும் நன்றிக்குரியவன்!!

  • வெகு மாதங்களுக்கு முன் நூலகத்தில் இருந்து எழுத்தாளர் மருதன் எழுதிய மால்கம் எக்ஸ் என்கிற புத்தகம் படித்தேன். அதன் பின்னணியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. அதையெல்லாம் இன்னோர் பதிவில் சொல்கிறென். இப்போது அதில் எனக்குப் பிடித்த ஒரு துளி மட்டும் இங்கே உங்கள் வாசிப்புக்கு.

நண்பர்களைத் தேர்வு செய்வதில் தவறு செய்யலாம். ஆனால் எதிரியைப் பற்றி மட்டும் தவறாகக் கணித்துவிடக் கூடாது. ஒவ்வொரு முறை நீங்கள் தவறாகக் கணிக்கும்போதும்,புதுப் புது எதிரிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

நீங்களும் நிறைய வாசியுங்கள். நிறைய பகிருங்கள்.

  • அண்ணன் ஓஜஸ் கடந்த ஒன்றரை மாதங்களாக (’நாற்சந்தி’யில்) பதிவே எழுதவில்லை. இனியாவது எழுதிவிடுவார் என நம்புகிறேன். பாலா சார் இன்னும் கொஞ்சம் அமைதியாக இருந்தால் என் பதிவுகளின் எண்ணிக்கையைத் தாண்டி விடுவார் போல! போன மாதம் மட்டும் 5 பதிவுகள் எழுதியிருந்தார். நன்றி சார்.
Advertisements

2 thoughts on “சிதறல்-3

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s