அன்புள்ள அம்மாவுக்கு,

அன்புள்ள அம்மாவுக்கு,

கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.

கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.

தங்கள் அன்பு மகன் எழுதியது. தம்பிக்கான கடிதம் அனுப்பப்பட்டது. இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் உங்களுக்காக ஒரு கடிதம் எழுதுவது எனக்கான விருப்பம்.

உலகில் அம்மாக்களை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனையோ ஆண்டுகள் உங்கள் அருகிலேயே இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் உங்களைப் பிரிந்திருந்தால் மனம் வலிப்பதில்லை. என்னுடைய எண்ணம் யாவிலும் நீங்கள் வழி நடத்துவீர்கள் என்கிற எண்ணம் எனக்குண்டு.

வீண் வார்த்தை அலங்காரங்களால் உங்களைப் புகழ்வது மோசமான செயலாக நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் உன்னதமானவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை.

எனது பள்ளிக்காலத்தில் எனக்கு எப்போதெல்லாம், அன்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எப்போதெல்லாம் கண்டிக்க வேண்டுமோ, அப்போதெல்லாம் கண்டித்தீர்கள். ஆனால் உங்கள் கண்டிப்பு எல்லாம் கோடை மழை போல தான் என்பதை உணர்கையில் உங்கள் அன்பின் மகத்துவம் உணர்கிறேன்.

எனது முதல் தோல்வியின் பிடியிலிருந்து என்னை மீட்டெடுக்க எவ்வளவு முயன்றீர்கள் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் யாருக்கும் வாய்க்காத ஒரு தாய். இப்போதும் தோல்விகள் என்னை அழுத்துகிறபோதெல்லாம் உங்கள் நினைவுகள் என்னை காப்பாற்றுகின்றன.

சத்தியமாக சொல்கிறேன். நான் எவ்வளவோ கடைகளிலும், பிறர் வீடுகளிலும், மற்ற இடங்களிலும் தேனீர் அருந்தியிருக்கிறேன். உங்கள் தேனீர் மட்டும்தான் நினைவில் உள்ளது.

இன்னோர் சிறப்பான தேநீரும் நினைவை விட்டு அகலாது!

எல்லோருக்கும் தாய் எப்போதுமே சிறப்பான உறவுதான்.

நீங்கள் என் மேல் வேறு எவரும் கொள்ளாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் மேல் நம்பிக்கை இழப்பதற்கான சூழல் இதுவரை அமைந்ததே இல்லை. இனி அமையப் போவதும் இல்லை. ஏனென்றால் நீங்கள் என் அன்னை!

40 வயது நெருங்குகையில் உங்களுக்குள் ஏற்பட்ட ஆர்வம் என்னுள் இன்னும் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. ஆம். நீங்கள் உங்களிடமிருந்த புதிய பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தீர்கள்.

இன்னும் எத்தனை எத்தனையோ பரிமாணங்கள் உங்களுள் இருக்கக்கூடும். அவையெல்லாம் எப்போது வெளிப்படும் என்கிற எண்ணத்தில் ஆழ்ந்த உறுதியோடு நிற்கிறேன்.

நீங்கள் நிச்சயம் என்னை வழிநடத்தி செல்வீர்கள். என் நம்பிக்கை பொய்யாகப் போகாதுதானே!

தாய் என்கிற உறவினை உங்களிடமிருந்து நான் பெற்றேன். உணர்ந்தேன். உங்களைப் பற்றி அதிகம் எழுதினால்தான் என்றில்லை. எப்போதுமே என் பிரியத்திற்குரியவர் நீங்கள். உங்கள் பிரியத்தில் நானும் இருப்பேன் என எனக்குத் தெரியும் அம்மா.

என்றாவது ஒருநாள் என்னால் நீங்கள் பெருமைப்பட வேண்டும். அந்த நாளை நோக்கி என் பயணம் நாட்களை நகர்த்துகிறது. பயணத்தின் முடிவில் உங்களைச் சந்திக்கிறேன்.

அதிகம் எழுத வேண்டும். பலவற்றையும் பகிர வேண்டும். ஆனால் நீங்களும் எழுத விருப்பம் கொண்டால்..? என்ன செய்வது? நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் எனக்கு அடுத்த கடிதத்தில் எழுதவும்.

                                      உங்கள் கடிதம் காண விரும்பும் ,

                                              உங்கள் மகன்.

 

 

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s