நட்புவட்டம்!

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள்  வாழ்த்துகள்.

தமிழர் திருநாள் என சொன்னால் என்  தந்தைக்கு கொஞ்சமேனும் மகிழ்ச்சி இருக்கும்.

உள்ளே புகுமுன்.

முன்னமே சொன்னதுதான். கதைகள் பிறந்த கதை என்கிற பெயரில் கிட்டத்தட்ட முன்னுரை எழுதியாகிவிட்டது. எப்பாடுபட்டாவது ஒற்றை சிறுகதையாவது வாழ்நாளுக்குள் எழுத வேண்டும் என்று வெறி பிடிக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட பத்து கதைகள் வரை யோசித்து மூன்று கதைகளைத் தொடங்கி முற்று பெற வைக்க இயலாமல் தவித்த காலமெல்லாம் உண்டு. போதுமடா பொழப்பு! என நினைத்து ஒதுங்கையில் ஆட்கொண்ட எண்ணங்களுக்கு கற்பனை கலந்து கதையாக மாற்றி இருக்கிறேன்.

ஆம். முன்னமே சொல்லிவிட்டேன். இது முழுக்க முழுக்க கதை ஆசிரியரின் கற்பனையே அன்றி எந்த உண்மை சம்பவமும் அல்ல. இதையும் மீறி இதில் குறிப்பிட்ட நிகழ்வுகள் உங்கள் வாழ்விலும் ஏற்பட்டிருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளவும்.

சமர்ப்பணம்:

என்னை தோழனாக நினைக்கிறவர்களுக்கும், நான் வழிகாட்டியாக நினைப்பவர்களுக்கும்.

போதும். நிறைய எழுத வேண்டும். எல்லாவற்றையும் இப்போதே எழுத மனம் ஒப்புக் கொள்ளவில்லை. கதையைப் படிக்கலாம். சிலருக்கு சுவாரசியக் குறைவாக இருந்தால் தயங்காமல் குறிப்பிடவும். ஒரு வளரும் செடிக்கு நீங்கள் போடும் இயற்கை உரம் போல எண்ணுவேன் அதை.

****************************************************************************************

ப்போதுதான் பெருகத் தொடங்கியிருந்தது. வேறொன்றுமில்லை பயம்தான். எதன்மீது பயம் என்று சரியாகத் தோன்றவில்லை. காரணம் இதுதான். அப்போது நான் மற்ற மாணவர்களோடு கணித வகுப்பில் நுழைந்தேன். பயம் கணிதப் பாடத்தின் மீதா? இல்லை ஆசிரியர் மீதா என்று சரியான புரிதல் கூட இல்லாமல் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அப்போதுதான் அருகில் இருந்தவனை கவனித்தேன்.

அவனுடைய கையானது முரட்டுத்தனமாக காகிதத்தின் மேல் சுழன்றது. அவனது கண்களும், காதுகளும் ஆசிரியரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சரியாகச் சொல்வதானால், பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தன. இவ்வளவு உன்னிப்பாக அவனையே நான் கவனித்துக் கொண்டிருந்தபடியால் எவ்வளவு பயமிருந்தாலும் கணிதத்தின் மீது கவனம் செல்லவே இல்லை.

ஏதேதோ செய்து, எப்படிஎப்படியெல்லாமுமோ படித்தும் கணிதப் பாடத்தில் தடுமாறிக் கொண்டே இருந்த எனக்கு அவ்வப்போது கைகொடுத்து உயர்த்திவிட்ட ஆசிரியர்கள் உண்டு. எல்லா நேரங்களிலும் அவர்களை எதிர்பார்ப்பது அறிவாகாது. இது புத்திக்கு இப்போது வரை உறைக்கவில்லை. விடுங்கள்…

சில நாட்கள் தள்ளி கல்லூரியிலிருந்த வங்கிக்கு செல்ல நேர்ந்தது. போன் அடித்தது. எடுத்தேன்.

“வணக்கம். யார் பேசறது?”

“நான் வாணி பேசறேன். நீங்க *** தானே?”

“ஆமாம். நீங்க….?”

“நான் வாணி. ஞாபகமில்லியா?”

“இல்லியே!”

“அட! காலேஜ் முதல்நாள் கூட பார்த்தோமே?”

“சுத்தமா ஞாபகமில்லீங்களே!”

“உன் கூட ஒண்ணா படிச்சவள அதுக்குள்ளவா ,மறந்திடுவ?”

எனக்கோ ’திடுக்’ என்றது. காரணம் இதுதான்.

”சுத்தமான பொய். நீங்க யார்னு முதல்ல சொல்லுங்க?”

“எப்படி பொய்ங்கிறீங்க?”

“நான் படிச்சது முழுக்கவே பாய்ஸ் (Boys) படிச்ச ஸ்கூல். உண்மையிலேயே நீங்க யார்….. ”

“…….”

“ஹலோ….”

கால் கட்டாகிவிட்டது. (call)

கொஞ்ச நேரத்திலேயே அது வகுப்பில் படிக்கும் சக மாணவி என்று தெரிந்துவிட்டது. என் சந்தேகம் இப்படி போனது. ”எப்படி என் நம்பர் லீக் ஆகியிருக்கும்?” அதற்கு முன்பு வரை வேறெந்த பெண்ணும் (அதாவது உடன் படிப்பவர்கள்) என் போனுக்கு கூப்பிட்டதேயில்லை. ஆக, இது சக நண்பன் யாரோ ஒருவனின் விளையாட்டுகளில் ஒன்றாயிருக்கக் கூடும்.

இன்னும் கொஞ்ச நாள் தள்ளி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட (கணித வகுப்பில் உடன் இருந்த) நபரை தனியே சந்திக்க நேர்ந்தது. உரையாடல் தொடங்கியது.

நானே ஆரம்பித்தேன்.

“பேரு என்ன?”

“ம்ம்……”

“உங்க பேரு என்ன?” (இயல்பிலே மரியாதை கொஞ்சம் அதிகம்!)

“கிருஷ்ணா. உன் பேரு?”

சொன்னேன். மேலும் உரையாடல் தொடர்ந்தது.

“நானும் வந்த நாள்ல இருந்து பாக்குறேன். யார் கூடவும் பேசுறதே இல்லியே?”

“யார் கூடவும் பேசணும்-னு அவசியம் வந்ததே இல்லியே!”

பதிலைக் கேட்டவுடன் சற்றே தடுமாறினேன். மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். அவசியம்னு ஒண்ணு வேணுமா?

“எல்லார் கூடவும் சாதாரணமாவே பேசலாமே. இல்லாட்டி, குறைந்தபட்சம் என்கிட்டயாவது பேசலாமே?”

கிருஷ்ணா புன்னகைத்தபடி பார்த்தானா? இல்லை பார்த்தபடி புன்னகைத்தானா? என்று நினைவில்லை. அவனே என்னிடம் கேட்டான்.

“எந்த ஊர்?”

சொன்னேன். கொஞ்ச நேரம் உரையாடல் நீடித்தது. எப்படியோ புது நண்பன் கிடைத்துவிட்டான். மனம் துள்ளியது.

நண்பர்கள் கிடைப்பது சுலபம். வித்தியாசமான கிடைப்பது சுலபமல்ல. கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருக்கும். ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர் பல்வேறு சூழல்களில்.

இன்னொரு தோழி (ஆமாம் தோழி!) கிடைத்தார் ஒரு பயணத்தில். நான் அன்று மதியம் உண்ணவில்லை. அவரும் உண்டிருக்க வாய்ப்பில்லை. சூழ்நிலை அப்படியிருந்தது. அவர் என் உடன்படிப்பவர் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பெயர் நினைவில் இல்லை. கொஞ்சநேரம் மூளைக்குள்ளேயே தேடிப் பார்த்தேன். பெயர் நினைவுக்கு வந்தது. ஆம். அவள் பெயர் சந்தனா. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் அமர்ந்திருந்தேன். அவள் என் எதிரே அமர்ந்திருந்தாள். வண்டி புறப்பட எப்படியும் பத்து-பதினைந்து நிமிடங்கள் இருக்கும். அவள் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தது. வயிற்றை நிரப்ப எண்ணி வாய்க்குள் விழுங்கிக் கொண்டிருந்தாள். சடாரென்று என்னை கவனித்தாள். உடனே என்னைக் கூப்பிட்டாள். அவளைப் பார்த்தேன்.

அவளே தொடர்ந்தாள்.

“சாப்பிட்டாச்சா?”

“இல்லியே!”

“இந்தா. பிஸ்கட்டயாவது சாப்பிடு” என சொல்லி இரு பிஸ்கட்களைத் தந்தாள். எவ்வளவோ மறுத்தும் விடவில்லை. இறுதியில் நான் உண்டு முடிக்கிற போது, பேருந்தில் கூட்டம் நிரம்பி விட்டது. நான் கைம்மாறு செய்வதற்கான வாய்ப்பு கை நழுவியது.

ஆம். அவளுக்குத் தெரியாது. என்னிடமும் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருக்கிறது என்பது. என்றாவது ஒருநாள் சந்தனாவிற்கு மதிய உணவு கொடுக்க விருப்பம். பார்க்கலாம் என்ன நடக்கிறதென.

நண்பர்களை விரும்பலாம். விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் புறக்கணிக்க முடியாது.

என் விருப்பமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்றாவது ஒருநாள் நான் செல்லும் சாலையில், ஏதாவது ஒரு இல்லத்தின் வாசலில் யாராவது ஒரு நண்பர் என்னைக் கண்டு புன்னகைத்தால் போதும். என்னைப் பார்த்து புன்னகைக்கும் நபர் கிருஷ்ணாவாகவோ, சந்தனாவாகவோ இருக்க வேண்டியிருக்காது.

நீங்களாகக் கூட இருக்கலாம்!

Advertisements

2 thoughts on “நட்புவட்டம்!

  1. கற்பனை என்னும் காரணத்தால் மட்டுமே இது சிறுகதை வைகையில் சேரும். உணர்வுகளின், சம்பவங்களின் சரவெடி கதம்பம் இப்பதிவு. எப்பொழுதும் போல நல்ல நடை + வேகம் + கன்டென்ட் + +++++++ வாழ்த்துகள்.

    நாற்சந்தி நண்பன் ஓஜஸ்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s