கதைகள் பிறந்த கதை!

பிரபல எழுத்தாளர் ஒருவரின் பேத்தி ஒருவர், சிறுவயதிலேயே சிறுகதைகள் எழுதியிருப்பதாகப் படித்தவுடனே, உள்ளம் சிலிர்த்தபடி ஒரு நோட் (எப்படியும் 40-50 பக்கம் இருக்கும்!) எடுத்துக் கொண்டு கதை எழுதப் போகிறேன் என்று சொல்லி அமர்ந்தேன். இதற்கு முன் நான் அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாமலிருந்ததால் என் அம்மாவும் ஆதரித்தார்.

திடீரென்று எழுத உட்கார்ந்தால் என்ன எழுத வரும்? கி.ரா (கரிசல் கதைகளின் மன்னர்தான்!) அவர்களின் சிறுகதை ஒன்றின் நூல் பிடித்து கொஞ்சம் கற்பனை தட்டி எழுதினேன். முதல் காட்சி பேருந்து நிலையத்தில் துவங்கும். அதைப் படித்த என் தம்பி

ஏண்டா! பஸ் ஸ்டாண்ட்ல இப்படியும் நடக்குமா? என்கிற ரீதியில் ஒரு கேள்வி கேட்டான். சில தினங்களில் அதை அனுபவப் பூர்வமாய்ப் பார்த்த பின் ஒப்புகொண்டான். இதைப் போல அப்புறம் எந்த ’காப்பி’ யும் அடித்ததில்லை.

ஒன்பதாம் வகுப்பில் அடிக்கடி வகுப்பில் பேசுகிறேன் என்ற பொய்க் குற்றச்சாட்டினால் (ஆம். அது உண்மையிலேயே பொய்தான்!) ஆல்பர்ட் வாத்தியாரால் வெளியேற்றப்பட்டேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை! கையில் சில தாள்களை எடுத்து ஒரு கதை எழுதினேன்.

திருமால் என்று பெயர் சூட்டி எழுதிய அந்த கதை குறுநாவல் அளவிற்கு திட்டமிடப்பட்டு இரண்டு அத்தியாயங்கள் ஒரே நாளில் சில மணிநேரங்களில் எழுதினேன். உடன் இருந்த நண்பன் பாராட்டினான். அந்த மகிழ்ச்சியில், இன்னோரு நெருங்கிய நண்பனிடத்தும், தம்பியிடத்தும் காட்டினேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ………. சிரியோ சிரியென்று சிரித்து தள்ளிவிட்டார்கள். அதற்கான காரணம் சொன்ன பின்னும் கூட என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதை நான் புதுமை என்று நினைத்தேன்! இன்றும் கூட திருமால் என்கிற பெயரைச் சொன்னால் இருவரும் அதே அளவு சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதன் பின்னால் கதைகளின் தாகம் பெருமளவு நின்றுவிட்டது. இந்த வருடத்தில் கோடை விடுமுறையில் ரஸ்கின் பாண்ட் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்த் கணத்தில் கடந்து போய்விட்ட நினைவுகள் மீண்டும் வந்தன. Narration பாணி எழுத்துகளில் ஆர்வம் வந்தது. இடையே மார்ச் இறுதியில் பொன்னியின் செல்வன் பாதிப்பில் சில கதைகள் எழுத முயற்சிகள் நடந்தது. ஒரே ஒரு கதை மட்டும் பரவாயில்லை எனத் தோன்றியுள்ளது. ஏதாவது ஒரு சம்பவம் என்னை எழுதத் தூண்டாதா? என்கிற எண்ணம் வலுப் பெற்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பன் பாவெல் ஒரு யோசனையைப் பகிர்ந்தார். பொறி தட்டி ஆயுதபூஜை விடுமுறையில் துவங்கி தீபாவளி விடுமுறையில் முடித்தேன்.

கிட்டத்தட்ட சிறுகதை என்கிற முயற்சியில் முழுமையாக நான் எழுதி முடித்த ஒரே கதை அதுதான். அதன் கையெழுத்துப் பிரதியை தம்பியிடம் காட்டினால் அதெல்லாம் தேறாது என்கிற ரீதியிலே சொன்னான். எனக்கு இன்னும் நம்பிக்கை போய்விடவில்லை. அண்ணன் ஓஜஸிடம் சொன்னால் (கதையைக் காட்டவே இல்லை!!) தைரியமாக வெளியிடு. தவறென்றாலும் பரவாயில்லை என்றார். அதுதான் சரி என்று எனக்கும் பட்டது. இன்னுமொரு முறை அதை மறுபடியும் படித்தேன். எனக்கு முன்பிருந்த நம்பிக்கை கொஞ்சம் மறைந்தது. ஏதோ மற்றுமொரு பதிவு என்கிற அளவிலேயே எனக்குப் பட்டது.

உங்களைப் போன்ற வாசிப்பாளர்களிடம் என் முதல் படைப்பை வெளியிட ஆசைப்பட்ட தருணத்தில் அந்த கையெழுத்துப் பிரதி தொலைந்துவிட்டது. இனி ஒரு வேளை பொங்கல் விடுமுறைக்கு முன் அப்பிரதி கைக்கு சேர்ந்தால் நல்லது. இல்லையேல் நானாகவே மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி எழுதி பொங்கல் கழித்து தை மாதத்திலேயே இன்னோர் நாளில் வெளியிடத் திட்டம்.

ஏன் அப்போது வெளியிடுவேன் என்றால் அதற்குள் இன்னொரு சிறுகதைகூட தோன்றலாம் அல்லவா!

மாக்ஸிம் கார்க்கி எழுதிய ’தாய்’ நாவலைப் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக படித்து முடித்தபின் பதிவாக நூலைப் பற்றி எழுதி விடுகிறேனே!

முன்னர் நான் எழுதிய அடுத்த ஆண்டிற்கான தோழர்கள் பட்டியலில் இந்த நாவல் இல்லவே இல்லை. ஆனால் புத்தாண்டு சமயத்தில் , அதாவது அடுத்த ஆண்டு துவங்கிய சில மணிநேரங்களில் முடித்து விடுவேன். ஒரு விருப்பம்தான். இந்த வருடம் அதைவிட சிறப்பாக தொடங்கி விடுமா, என்ன?

ரஞ்சனி அம்மா அவர்களின் தளம் இரண்டாம் ஆண்டில் உள்ளது. வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். இணைய இணைப்பின் சிக்கல்களாலும் தனிப்பட்ட சில காரணங்களாலும் யாரையும் எளிதாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. பொறுத்தருள்க.

கேட்க மறந்துவிட்டேன். நீங்கள் எந்த புத்தகத்தை அடுத்த வருடத்தில் முதலில் முடிப்பதாய் உத்தேசம்?

 

4 comments

 1. நா கூட இந்த பதிவு தான் அந்த கதை என்று நினைத்து விட்டேன் 🙂
  //கேட்க மறந்துவிட்டேன். நீங்கள் எந்த புத்தகத்தை அடுத்த வருடத்தில் முதலில் முடிப்பதாய் உத்தேசம்?// நீர் கேட்டாலும் சொல்ல முடியாது, அதெல்லாம் உள்துறை ரகசியம் 😉

 2. பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய கட்டுரைத் தொகுப்பான வழித்தடங்கள் வாசிக்கலாமென்று இருக்கிறேன். அதற்கடுத்து வாசித்துக் கொண்டிருக்கும் ஜோ.டி.குருஸின் கொற்கை நாவலை வாசிக்கணும். விரைவில் உங்கள் கதையை வெளியிடுங்கள்.

 3. எந்தப் புத்தகம் படிப்பது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை, தமிழ்!
  கதைகள் பிறந்த கதையே ஒரு சிறுகதையை தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பது போலத் தெரிகிறது.

  http://wp.me/p244Wx-qD படியுங்கள், ப்ளீஸ்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s