சுழல்காற்று நினைவுகள்-3

தவறவிட்ட தருணங்களுக்காக வருத்தங்கள்.

மீண்டும் பொன்னியின் செல்வன் தொடரை ஆரம்பிப்பதாய் முடிவு. மகிழ்ச்சிதானே!

புதியவர்களுக்காக….
புதுவெள்ள நினைவுகள்
புதுவெள்ள நினைவுகள்-2
புது வெள்ள நினைவுகள்-3
சுழல் காற்று நினைவுகள்-1
சுழல்காற்று நினைவுகள்-2
சுழல்காற்று நினைவுகள் பற்றிய இரண்டாம் தொடரில் பொன்னியின் செல்வன் குறித்த அறிமுகத்தோடு நிறுத்தியிருந்தேன். இப்போது மேலும் தொடர்கிறேன்.

பொன்னியின் செல்வனை அருகில் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். அவனிடமிருந்த இளையபிராட்டி குந்தவைதேவியின் (கையாலேயே எழுதப்பட்ட) ஓலையைப் பார்த்து வந்தியத்தேவனை அணைத்துப் பாராட்டுகிறார். அவனோ, சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்கிறான். எல்லாமே பொன்னியின் செல்வனின் மாயம்தான்!

இதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வனுக்கு, சோழர் படையினர் ஏலேல சிங்கன் என்கிற இலங்கையின் தமிழ் மன்னனின் கதையை சரித்திர நடனக் கூத்தாக காண்பிக்கின்றனர்.கூத்து முடிந்தபின் பொன்னியின் செல்வர் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் இருவரையும் அழைத்து ஓலை குறித்து கேட்கிறார். அதிலிருந்து,

  • குந்தவை தேவி அவரை உடனே, பழையாறை அரண்மனைக்கு வரச் சொல்கிறார்.
  • ஆதித்த கரிகாலர் அவரை காஞ்சிக்கு வரச் சொல்கிறார்.
  • சோழ நாட்டு முதல்மந்திரி அநிருத்த பிரம்மராயர் அவரை இலங்கையிலேயே இருக்கச் சொல்கிறார்.

மூன்றும் மூன்றுவிதமாய் இருப்பது கண்டு பொன்னியின் செல்வர் திகைக்கிறார்.

இதனிடையே சில சம்பவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார் பொன்னியின் செல்வன். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சோழ ராஜ்ஜியத்தின் நிலையை எடுத்துரைக்கிறார்கள்.இறுதியாக பார்பேந்திரப் பல்லவனைச் சந்திக்க அருள்மொழிவர்மர் மற்ற வீர்ர்கள் துணையின்றி, இவர்கள் இருவரை மட்டும் அழைத்துச் செல்கின்றார்.

வழியில் இலங்கையின் புத்த சிலைகளையும், தமிழகத்தின் சிவன் சிலைகளையும் ஒப்பிட்டு, அதைப்போல் பெரிதாய் சிவன் சிலைகள் சோழ நாட்டில் எழுப்ப விருப்பம் சொல்கிறார். அங்கு அவருக்கு ரகசியச் செய்தி கிடைக்கிறது. மூவரும் அநுராதபுரம் விரைகின்றனர்.

அநுராதபுரத்தின் சிறப்புகளை கல்கி அள்ளித் தெளிக்கிறார் வந்தியத்தேவன் எண்ண அலைகளின் மூலமாய். அநுராதபுரத்தில்  முவரும் இருட்டும்வரை காத்திருக்கின்றனர். அங்கே திருவிழா களைகட்டியிருந்தது ஆழ்வார்க்கடியானுக்கும், வந்தியத்தேவனுக்கும் வியப்பை அளிக்கிறது. வழக்கமாக போர்க்காலங்களில் மக்கள் இப்படியெல்லாம் இருப்பார்களா? என எண்ணி அருள்மொழிவர்மரை வியக்கின்றனர்.

அநுராதபுரத்தில் இடிந்த புத்த மடாலயங்களின் சீரமைப்புப் பணிகள் பொன்னியின் செல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் நடக்கிறதென்பதை அறிந்து வந்தியத்தேவன் மேலும் வியக்கிறான்.

அப்போது வந்தியத்தேவனுக்கு விந்தையான திட்டம் தோன்றுகிறது.

அப்படி என்ன திட்டம் தோன்றியது…?

அத்தனை சுவாரசியமான திட்டம் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது மட்டுமல்லாமல் ஏன் இப்படியும் நடந்தால் நன்றாகத்தான் இருக்குமே என எண்ணவைக்கும் யோசனை. அதை புத்தகத்திலே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றாக இருட்டியபின் அனுராதபுரத்துள் மூவரும் நுழைகிறார்கள். அங்கே சில மாயங்கள் நடக்கின்றன. பழையகாலத்து அரண்மனை ஒன்றின் முகப்பை அடைகிறார்கள்.

அங்கே மகாசேனர் என்கிற சிங்கள மன்னர் பற்றியும், புத்தர் சிலைகள், தாகபா, பெரஹராத் திருவிழா…. இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்களை கல்கி அடுக்குகிறார். பொன்னியின் செல்வனைப் படித்தால் பல்வேறு தகவல்களுக்கான அடிப்படைத் தகவல்கள் கிடைக்குமென்றும் எண்ண முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக சில மாயாஜாலங்கள் நிகழ்கின்றன. சுழல்காற்று பாகத்தில் 35-ம் அத்தியாயம் படித்து அவற்றை தெரிந்துகொள்ளுங்கள். பலமுறை படித்தவர்கள் இந்த அத்தியாயத்தின் தன்மையை புரிந்துகொள்வர் என நினைக்கிறேன்.

அத்தியாயம் 35-இலங்கைச் சிங்காதனம்.  அதன் இறுதி வாக்கியங்கள் யாவும் பிரமிப்பூட்டும்படி இருந்தது என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. அது ஊமைராணியாரின் அறிமுகம்!

 

-நினைவுகள் அழியாது

3 thoughts on “சுழல்காற்று நினைவுகள்-3

  1. நல்லதொரு நினைவு தமிழ்! உங்கள் பதிவு மறுபடியும் பொன்னியின் செல்வன் முழுமையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    சுருக்கமாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுகிறீர்கள்!

    பாராட்டுக்கள்!

    1. பாராட்டுகளுக்கு நன்றிங்மா! கதையை எழுதாமல் அனுபவங்கள் மட்டுமே எழுதுமாறு கருத்துகள் கிடைத்தன. சுவாரசியம் அதனால்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s