அடுத்த ஆண்டிற்கான தோழர்கள்!

திடீரென்றுஎடுத்தமுடிவு! ஒருவிருப்பம்!

இதோ இந்த வருடத்திற்கான இறுதிநாட்களில் பொழுதுகள் கழிகின்றன. அடுத்தது என்ன? என்கிற கேள்வி எழுந்தது. வழக்கமான பணிகள் தொடர்ந்தாலும், புதிதாக என்ன செய்யலாம் என்று ஒரு விருப்பம். அடுத்த வருடம் முழுமைக்குமாய் ஓய்வு நேரங்களிலோ, இதர நேரங்களிலோ என்னென்ன புத்தகங்களைப் படிக்கலாம்? என்று (தோராயமான) பட்டியல் போட்டால் என்ன என்று தோன்றியது….. அப்படியே இங்கே…..

கண்டிப்பாக முடிக்க நினைப்பவை:

 • சிவகாமியின் சபதம் (கல்கி)
 • வீரம் விளைந்தது (நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி)
 • பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் (பழ.நெடுமாறன்)
 • உண்மைக்கு திரை ஏது? (இளையராஜா)
 • டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி (டெட்சுகோ குரோயாநாகி)
 • அயர்லாந்து அரசியல் வரலாறு (என்.ராமகிருஷ்ணன்)
 • தமிழர் தலைவர் (சாமி. சிதம்பரனார்)
 • உலகப் பேருரைகள் (பொன். சின்னத்தம்பி முருகேசன்)
 • வாஷிங்டனில் திருமணம் (சாவி)
 • குந்தவிக்கு, மான்விழிக்கு கடிதங்கள் (செ.கணேசலிங்கன்)
 • குமரனுக்குக் கடிதங்கள் அறிவுக் கடிதங்கள் (செ.கணேசலிங்கன்)

நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில்/ வாய்ப்பு கிடைத்தால்!! :

 • ஏழாவது அறிவு –இரண்டாம் பாகம் (வெ.இறையன்பு)
 • கண்டுபிடி கண்ணே! (ராஜேந்திர குமார்)
 • யுவான் சுவாங்கின் இந்திய பயணம் – முதல் தொகுதி
 • ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (தேவன்)
 • ஆ! (சுஜாதா)
 • பார்த்திபன் கனவு (கல்கி)
 • சி ஐ டி சந்துரு (தேவன்)
 • என் இனிய இயந்திரா (சுஜாதா)
 • சபாபதி (பம்மல் சம்பந்தம் முதலியார்)
 • பூர்ண சந்திரோதயம் (வடுவூர் துரைசாமி அய்யங்கார்)
 • பாபர் நாமா (ஆர்.பி. சாரதி)

மற்றபடி இந்த பட்டியலில் இல்லாத நல்ல நூல்களும் படித்து விடுவேன். இந்த வருடம் கல்கியின் நூல்களை முடிந்தமட்டும் படிக்க விருப்பம். அதே சமயம் அரசியல்-வரலாற்று நூல்களுக்கு முன்னுரிமை தரவும் விருப்பம். இந்த பட்டியல் தோராயமாக இருப்பதால்தான் சிறியதாக உள்ளது. ஆங்கில நூல்கள், தொழில்நுட்ப நூல்கள் சிலவற்றையும் கணக்கில் காட்டவில்லை. பட்டியலில் இல்லாத நூல்களைப் பற்றி கண்டிப்பாக படித்தவுடன் பதிவாக எழுதி விடுகிறேன்.

ஏதேனும் புத்தகங்களைப் பரிந்துரைக்க விருப்பம் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள். மின் புத்தகங்களின் லிங்க் இருப்பின் தரலாம். நேரில் என்னை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிற(!!) தோழர்கள் பட்டியலில் உள்ள புத்தகங்கள் தேவைப்படுமாயின் எப்போதும் என்னை அணுகலாம்!!

புத்தகங்களை தந்து வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உதவிய

 • என் தந்தைக்கும்,
 • வழக்கம்போல் அண்ணன் ஓஜஸிற்கும்

இதயத்தில் இருந்து நன்றிகள்!!

உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளும், பரிந்துரைகளும் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பயன்படும். ஏனென்றால் புத்தகங்கள் நம் எல்லோருக்குமான நண்பன் தானே!

கருத்துகளை எதிர்நோக்கி,

தமிழ்

Advertisements

One thought on “அடுத்த ஆண்டிற்கான தோழர்கள்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s