தவறவிடக் கூடாதவன்!

ஒரு மனிதரைப் பற்றி இந்நாளில் கூறினால் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணியே இப்பதிவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிற பதிவு இது. எனக்கே, எனக்காக விரும்பி எடுத்த ஓய்வு… நிறைய படிக்க நேரம் கிடைத்தது.

இதே நாள் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம். வலை உலகில் பலரும் அவரைப் பற்றி எழுதி விடுவார்கள் என்பதால், இன்னொரு உன்னதமான உள்ளத்தின் வாழ்வியல் குறித்த சில குறிப்புகள்…

இப்பதிவில் எதிர்பாராத விதமாய் ஆங்கில வார்த்தைகளைக் கலக்க நேரிட்டுள்ளமைக்கு வருந்துகிறேன்.

இவ்வளவு தூரம் செயற்கையாக வசனங்களினால் அவருக்கு அறிமுகம் தேவையே இல்லை. அந்த மனிதர் நமக்கெல்லாம் கொஞ்சமேனும் அறிமுகமானவர்தாம்.

’ஓஜஸ்’ எனுமாறு நம்மால் அழைக்கப்படக்கூடிய அந்த மனிதனைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் சொல்ல ஆசை!

அண்ணன் ஓஜஸ் வேர்ட்பிரஸ் தளத்தில் ’நாற்சந்தி’ –யைத் தொடங்கி இன்றோடு ஒரு வருடம் முடிகிறது….. அட! இது முடிவல்ல! இரண்டாம் வருடத்தின் தொடக்கம்!

முந்தைய இரண்டு வாக்கியங்களில் பளிச்சிடும் பாசிட்டிவ் எனர்ஜிதான் ஒஜஸ்! எல்லா விடயங்களும் அவரால் முடியாதுதான்! முயன்று பார்ப்பதில் தவறில்லையே? என்றுதான் ஓஜஸ் சொல்லுவார்.

என்னையே உதாரணமாகக் கொண்டால், நிறைய சொல்ல முடியும்.

கடந்த சில ஆண்டுகளில் நான் பெற்ற பாராட்டுகளுக்கும், வெற்றிகளுக்கும் பின்னால் ஓஜஸும் இருக்கிறார். வெறுமனே எழுத வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. காரணம். ஓஜஸ் ஒன்றும் அனைவருக்கும் தெரிந்த நபர் அல்ல. அவர் இன்னும் நிறைவாகவில்லை….அதனால்தான் அவர் மறைவாக இருக்கிறார்.

புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், அதை மற்றவர்களுக்கு சொல்வதிலும் அவர் ஒரு கில்லாடி!

“நண்பா, நீ ட்விட்டருக்கு வரலாமே! நானும் இருக்கிறேன்….பாலா சாரும் இருக்கிறார்….. ……” சொன்னார். சொன்னவுடன் சில தினங்களில் இணைந்தேன். இப்போதும் ஓஜஸ் பெருமையாக குறிப்பிடும் விடயம், அவரின் முதல் Follower நான் தான்!

கிரெடிட் என்பார்கள்.

“Give the credit to the place where it belongs to !”

இந்த வாக்கியத்தை அண்ணனுக்குச் சொன்னவர் எழுத்தாளர் என்.சொக்கன் (இதுவும் கிரெடிட்!). அதை அடிக்கடி நினைவுறுத்துவதும் அவரது வாடிக்கை.

மற்றவர்களை வெகுசாதாரணமாகப் புகழ்வதிலும் ஓஜஸ்….ஓஜஸ்தான்! எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல்!! எந்த அளவிற்கு பாராட்டுவாரோ, அதே அளவு திட்டிவிடுவார்…!

“Are you a crack?”

“Idiot!”

“நீங்க ஒரு ஜீனியஸ் தல!”

“தமிழ்டா!”

இன்னும் நிறைய சொல்லலாம். கொஞ்சமாவது Personal இருக்கட்டுமே!

பரிந்துரைப்பதிலும் அண்ணனை மிஞ்ச முடியாது. சில விடயங்களை அவர் பரிந்துரைத்த பின்னர்தான் பரவலாக மற்றவர்கள் அறிய முடியும். இதற்கும் உதாரணம் உண்டு.

பிரபலமான திரைப்படப் பாடல்களை வந்தவுடனே கேட்டுவிட்டு எனக்கும் பரிந்துரைப்பார்.

தளங்களையும் கூட பரிந்துரைப்பார். Flipkart, Bluestacks இப்படி நிறைய சொல்லலாம்.

புத்தங்கங்களில், முன்னர் கல்கி பிரியராக இருந்தார். இப்போது பரவலாக வாசிக்கிறார். இருந்தாலும் கல்கி…கல்கிதான் என்பார். ”அடியேன்… கல்கிதாசன்” என்றுகூட சொல்லியிருப்பார்!!

மின்புத்தகங்கள் குறைந்தது 10 GB தேறும் என்று நினைக்கிறேன். கல்கியின் படைப்புகள் சில ஆடியோ வடிவிலும் அவரிடம் உள்ளது.

அண்ணன் சிவகாமியின் சபதம் படிக்கிறபோது அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அத்தனை பெரிய புத்தகத்தை சுலபமாக வாசித்து கொண்டிருப்பார் எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ, அப்போதெல்லாம்!

அண்ணன் அதிகமாக தமிழ் எழுத்துகளில் முன்னர் பிழைகள் செய்வார். இப்போது குறைந்துவிட்டது. ஆனால் அண்ணனின் ஆங்கிலப் புலமை சிறப்பானது என்பது சிலருக்குதான் தெரியும். அவரின் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டால் ஏன் மனிதர் தமிழில் மட்டும் எழுதுகிறார் என்று தோன்றும்.

அவர் பல்வேறு தளங்களை நடத்தி வருவது பலருக்கு தெரியாது. சில தினங்களுக்கு முன் புகைப்படங்களுக்காக தளம் துவங்கினார். சென்ற மாதம் இசைப்பா என்றொரு தளத்தையும் அவரும், நானும் இணைந்து துவங்கினோம். ஆங்கிலத்தில் (எனக்குத் தெரிந்து) 2 தளங்கள் நடத்துகிறார்.

நான் எழுவதிலும் கூட நிறைய ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். நான் பதிவெழுத ஆசைப்பட்டது @balaav அவர்களின் பதிவுகளைப் படித்துதான். அவரை எனக்கு அறிமுகம் செய்ததும் அண்ணன்தான்.

பாலா சாருக்கு நான் அறிமுகமாகும் முன் அவர் எனக்கு அறிமுகமாகிவிட்டார். இப்போதும் எங்கு பார்த்தாலும் சிறு புன்னகையாவது சிந்துவார். அதுபோதும்!!

எனக்கு பிறந்தநாளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் துவங்கியதும் அண்ணன்தான். அவரின் கொள்கைகள் வேறு. எனது கொள்கைகள் வேறு. இருப்பினும் எனக்கு பெரியார் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். அதுதான் ஓஜஸ்! அப்போது என் தந்தை ஒரு விடயம் சொன்னார். அதை நான் உயிர் பிரியும் வரை மறக்கக் கூடாது. பதிலுக்கு நானும் அவர் பிறந்த தினத்தில் புத்தகம் பரிசளித்தேன்.

நான் எழுதத் துவங்குவதற்கு முன்னரே என்னை எழுத்தாளராக்கி அழகு பார்த்தவர் ஓஜஸ். எல்லோர்க்கும் இக்குணம் அமையாது.

ஓஜஸ் அண்ணனுக்கு எத்தனை நன்றி வேண்டுமானாலும் சொல்லலாம். அத்தனை உதவிகள் செய்துள்ளார். இன்னும் செய்வார்.

ஒரு வருடத்திற்கு 83 பதிவுகள் எழுதி உள்ளார். முதிர்ச்சி அடைவதற்கான அசாத்திய பொறுமையின் வெளிப்பாடு அது. எண்களின் மேல் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை.

யாருக்காகவும் எனக்குத் தெரிந்து தன் கொள்கைகளை அவர் மாற்றியதாகத் தெரியவில்லை. நானெல்லாம் அந்த அளவில் சிறுபிள்ளை! சில பெண்கள் சொன்னதற்காக, நீண்ட வருடங்களுக்குப் பிறகு சில முக்கியமான கொள்கைகளை மாற்றியுள்ளேன்!!!

மிக சாதாரணமாக சிரித்தபடியே பொய் சொல்வார். அதையெல்லாம் உண்மையென நம்புகிறவர்களும் உண்டு. Chat செய்கையில் அவரின் போக்கு மாறுபட்டால் அமைதியாக வெளியேறுவதைத் தவிர வேறு வாய்ப்புகளே தரமாட்டார்.

தமிழின் சிறந்த வலைதளங்களுள் நாற்சந்தியைக் கொண்டுவரும் ஆற்றல் அவருக்கு எப்போதுமே உண்டு. அதை அவர் செய்து முடிக்கையில்தான் இப்பதிவின் சொற்களுக்கு அர்த்தம் உலகிற்குப் புரியும்.

நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறபோதெல்லாம் குறைவாகவே எழுத முடிகிறது. நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுதஎழுத மேலோங்குகிறது. அடுத்தடுத்த பதிவுகள் உங்களின் சிந்தனையைத் தூண்டிடும் வகையில் அமையும் என்றே நினைக்கிறேன். அண்ணன் ஓஜஸும் அதில் பங்களிப்பார் என்று நம்புகிறேன்!

இந்த பதிவின் பொருட்டு பெரும் விவாதமே எனக்கும் அண்ணனுக்கும் நடந்தது. தன்னையே தாழ்த்திக் கொண்டார் அவர்.

அவர் என்னால் மட்டுமல்ல, எல்லோராலும் தவறவிடக்கூடாத தோழன்!

நண்பா, உன் வாழ்வியல் கண்டிப்பாக யாருக்கேனும் தூண்டுதலாக இருக்கும். யாருக்கும் இல்லையென்றாலும் எனக்கு இருக்கும்!

அண்ணனின் தளங்கள்:

http://phojas.wordpress.com

http://naarchanthi.wordpress.com/

http://oojass.wordpress.com

http://cnerd.wordpress.com/

http://isaipaa.wordpress.com/

Advertisements

9 thoughts on “தவறவிடக் கூடாதவன்!

 1. சில தகவல்கள் இடம் பெறாமல் போய்விட்டன.

  அண்ணன் அவர்களின் நாற்சந்தி பதிவில் இன்றும் தமிழ் எண்களைப் பயன்படுத்துகிறார். இதுவும் எத்தனை பெரிய விடயம்!
  அதுதான் ஓஜஸ்!

  துவங்கிய தேதியிலிருந்து, இன்றுவரை தன்னுடைய Theme கூட மாற்றாமல் வைத்துள்ளார். எந்தவிதத்திலும் அதன் அழகு குறையாமல் பார்த்துகொள்கிறார்.

  இன்னும் நிறைய எழுதலாம். அது அவரின் personal பக்கங்களைத் தீண்டுவதுபோல் அமையும்.

  இனி அவரைப் போலவே, என்னை மாற்ற முயற்சித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி செலுத்த விருப்பம்.

 2. எதுவும் சொல்வதற்கு இல்லை, நன்றி தமிழ் தம்பி! நான் இத்தனை பாராட்டுக்கு தகுதி இல்லாதவன் ! என்னை வளர்க்கும் இந்த தமிழ் சமூகமும், கல்கி, பாரதி போன்றோர் செய்யும் விந்தை 😀

 3. என் மாணவர்கள் குறித்த பெருமை எனக்கு என்றுமே அதிகம். அவர்கள் என் மாணவர்கள் என்பதால் அல்ல. என்னிடம் அவர்கள் கற்றதால் எனக்கு ஏற்பட்ட/ஏற்படுகிற உவகையின் வெளிப்பாடுதான் அந்தப் பெருமை. அந்த உவகை இன்றைக்கு இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. ‘நீ எங்கியோ போயிருக்கலாம். வாத்தியாராகி என்ன சாதிச்ச ?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் ஒரு சிறிய புன்னைகையுடன் அதைக்கடந்து செல்வதற்கு இந்த உவகைதான் காரணம். அன்பன் தமிழுக்கும் ஓஜசுக்கும் மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.

  1. மிக்க நன்றி சார்.
   எப்போதுமே என் ஆசிரியர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு.
   நான் உங்கள் மாணவன் என்பதில் உங்களுக்கு ஏற்படும் பெருமையை விட , நீங்கள் என் ஆசிரியர் என்பதில் நான் கொள்ளும் கர்வம் பெரிது!

   உங்கள் உவகைக்கு நானும் ஒரு காரணம் என்றால் போதுமே! வேறொன்றும் வேண்டாம்.
   நன்றி உள்ளத்திலிருந்து…….உங்களுக்காக!

 4. ‘தவற விடக்கூடாத’ (வன்) ஓஜஸ் பற்றி நிறைய விடயங்கள் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவர் எனக்கும் அறிமுகம் ஆனவர் என்பதில் பெருமை அடைகிறேன்.
  ஓராண்டு நிறைவு செய்யும் ‘நாற்சந்தி’ க்கு வாழ்த்துக்கள்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s