செங்கோடனும், செம்பாவும்!

தலைப்பைப் படித்தவுடன் சிலருக்குப் புரியாமல் போயிருக்கலாம், சிலருக்கு அடடா! இதைத்தானே எதிர்பார்த்து வந்தேன் என்றும் நினைக்கலாம். ஒருவகையில் இது பொன்னியின் செல்வன் தொடருக்கு எனது பரிகாரம்!

”பொய்மான் கரடு” என்கிற பேரில் கல்கி அவர்கள் ஒரு (குறு)நாவல் எழுதியுள்ளார். அதைப் பற்றிதான் இப்பதிவு.

ஒரு கதாநாயகன், அவனது முறைப்பெண் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் வந்துவிட்டன. இதிலெல்லாம் ஏற்படாத ஒரு நிறைவு இந்நாவலைப் படித்தால் ஏற்படுகிறது.

கதை என்கிற ஒன்றை எடுத்தால் அதற்கு பின்புலம் (Background!) ஒன்று இருக்க வேண்டும். அதுதான் பொய்மான் கரடு. இதையும் முன்னுரையாக கல்கி சொல்லிவிடுகிறார்.

செங்கோடன் என்றொரு வாலிபன் – நாயகன். அவனுக்கு முறைப்பெண் செம்பளவல்லி. இப்படி கதை நெடுக குறிப்பதற்கு பதில் ஒரு சுருக்கமான பெயர் அமைத்துவிடுகிறார். அதுதான் செம்பா!

செம்பாவிற்கு செங்கோடன் மேல் விருப்பம். முறை வேறு. ஆனால் செங்கோடனோ விருப்பமின்றி இருக்கிறான். அவன் விரும்புகிற சமயத்தில் அதாவது செம்பா அவன் மனதை மாற்றுகிற சமயத்தில் கதையை வேறு கோணத்தில் திருப்புகிறார். புதுப்புது கதாபாத்திரங்கள் கதை முழுதும் வருகிறார்கள். குறிப்பாக செங்கோடன் என்கிற பாத்திரப் படைப்பு சற்றே வித்தியாசமானது. அதை ஏன் அப்படி அமைத்திருக்கிறார் என்பதை கிளைமாக்ஸில் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், கதையின் துவக்கமே திகிலாகத் (!) துவங்குகிறது. கல்கி அவர்களுக்கு கார் ஓட்டுனர் ஒருவர் சேலம் ஜில்லாவில் (ஆம். கதை சேலம் வட்டாரத்தில் நடக்கிறது.) நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துரைப்பது போல துவங்குகிறது.

கதையின் காலம் சுதந்திரத்திற்கு சற்றே முந்தியது (என நினைக்கிறேன்!). பொதுவாக கல்கி அவர்களின் வரலாற்று நாவல்களை மட்டும் (திரும்பத் திரும்ப!!) படித்துப் பழக்கப்பட்டவர்கள் இதை இன்னும் ஒருமுறை புதிதாகப் படிக்கலாம். கட்டாயம் புதிய மாற்று அனுபவம்தான்!

115 பக்கங்களே கொண்ட குறுநாவல்தான். முழுமையாகப் படித்துவிட்டு கீழே வைக்கும்படி கதை போகிறது. ஆனால் ஆரம்பத்தில் சில குறிப்புகள் மட்டும் வேகத்தடைகளாய் உள்ளதாய் எண்ணுகிறேன்!

இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கலாம்தான் பாவம் நாவலைப் இனி படிக்கப் போகிறவர்கள்….! அவர்கள் நலன் கருதி இந்த குறு நாவலின் சிறு அறிமுகத்தை முடிக்க விருப்பம்!!

கதை பிறந்த கதையும், அமர இலக்கியம் என்பதற்கான விளக்கமும் செம! ஆனால் நாவலின் இறுதிக் கட்டம் வெகு வேகமாக முடிவு பெறுகிறது. நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் விரைவாக கதையை மின்னல் வேகத்தில் நகர்த்துகின்றன.  இதுதவிர நூலின் துவக்கத்தில் கல்கி குறிப்பிடுகிறார்.

“….…..சில நண்பர்கள், “நீர் கதை எழுதுவது எப்படி?” என்று கேட்பதுண்டு.  ”நான் கதையே எழுதுவதில்லையே, என் கையில் பிடித்த பவுண்டன் (Fountain) பேனா அல்லவோ எழுதுகிறது?” என்று சமாளிப்பேன்.

அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. ”நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்? சிலசமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால் கடப்பாரையைப் பிடித்துக் கொண்டு எழுதுவதைப் போலத் தோன்றுகிறதே” என்பார்கள்.

அதுதான் கல்கி!

நானே இந்நாவலை மின் நூலாகத்தான் படித்தேன். நீங்களும் படிக்க பாதுகாக்க, மதுரைத் திட்டம் தளத்தில் சென்று தரவிறக்கலாம். பற்பல தமிழ் நூல்களும் அங்கு இலவசமாக கிடைக்கின்றன.

Advertisements

3 thoughts on “செங்கோடனும், செம்பாவும்!

 1. மிக சிறந்த பதிவு மற்றும் புத்தக பரிந்துரை. இப்படி தான் மதிப்புரை எழுத வேணும். கதையை சொல்லமால், கோடிட்டு காட்டி , ஆர்வத்தை தூண்ட வேண்டும்!!!

  என் கணக்கில் இது தான் உன் ஐம்பதாவது பதிவு, இதுவரை மிக சிறந்து பதிவும் கூட 🙂

  //ஒரு கதாநாயகன், அவனது முறைப்பெண் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் வந்துவிட்டன. இதிலெல்லாம் ஏற்படாத ஒரு நிறைவு இந்நாவலைப் படித்தால் ஏற்படுகிறது.// முற்றும் சரி, இது தான் கல்கி அவர்களின் எழுத்தோவிய சிறப்பு.

  உனக்காக மட்டுமே இதனை (விரைவில்) திரும்பி படிக்கிறேன் !!! (இதற்கு மேல் இந்த பதிவின் வெற்றி வேறு எதுவம் இல்லை)

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ் 😉

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s