புதிய பரிமாணம்!

ஆம். உண்மையிலேயே புதிய பரிணாமம்தான். எதிர்பார்க்கவேயில்லை. இப்படியெல்லாம் எனக்கு வாய்ப்பு வரும் என்ற எண்ணம் துளியும் இல்லை. நண்பர் குழுவால்தான் இதெல்லாமே சாத்தியமாயிற்று. என் இனிய தோழர்கள் எல்லோருக்கும் நன்றி.

விடயத்திற்குள் வந்துவிடுகிறேன்.

நண்பர் முஹ்ஸின் அவர்கள் என்னிடம் கிட்டத்தட்ட  சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன் வேர்ட்பிரஸ் தளத்தையும் தொடங்கினார். வெற்றிகரமாக நடத்திவருகிறார். பொதுவாக உறவுமுறைகள்-அன்பு-பொது-தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார் ஆங்கிலத்தில்.

அவர் கேரளத்து நண்பர். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதிய அவருக்கு திடீரென தமிழில் ஒரு பதிவு எழுதினால் என்ன? எனத் தோன்றியிருக்கக் கூடும். தமிழில் “தமிழால்” எழுதப் பிரியப்பட்டு அணுகினார்.

ஒரு மொழிபெயர்ப்பு. கிட்டத்தட்ட மொழிபெயர்ப்பு. அதாவது வார்த்தைகளைக் கோர்வையாய் கூறக் கூற நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அந்தக் கட்டுரையை படிக்கிற நபர்களுக்கு நான் மொழிபெயர்ப்பு மட்டும்தான் செய்துள்ளேன் என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன். ஏனென்றால் கட்டுரையின் பொருள் அப்படி!

நண்பரின் தளத்தில் வாசிக்க!

சில விருப்பங்கள்:

பொன்னியின் செல்வன் அனுபவங்கள் பாதியில் நிற்பது வெகு நாட்களாக உறுத்துகிறது. ஆனாலும் மனம் லயித்து எழுதினால்தான் இனிக்கும்! ஆகையால் வேறு விடயங்களில் கவனம் செலுத்தத் திட்டம். விரைவில் இனிய மாற்றங்கள் மீண்டும் அலங்கரிக்கும். பிற தளங்களிலும் (டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து!) கட்டுரைகள் எழுத ஆர்வம். எனக்கு வாய்ப்பு தர விருப்பம் கொள்கிற தோழர்கள் கீழே குறிப்பிடவும். தள நிர்வாகி உங்களைத் தொடர்பு கொள்வார்.

 

கட்டுரையின் தாக்கங்களை இங்கேயும் பதியலாம்!

அவ்ளோதான்!

Advertisements

5 comments

  1. புதிய பரிமாணம் பெற்று மகிழ்ந்தது உங்கள் தளத்தின் மாறுபட்ட வடிவமைப்பிலும் வெளிப்படுகிறது தமிழ்!

    உங்கள் புதிய செயல்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    உங்களது நண்பர்கள் தளத்திலும் சென்று வாசித்து வந்தேன். நல்லதொரு மொழியாக்கம்.

    இன்னுமொருமுறை வாசித்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

    புதிய வாய்ப்புகளுக்கு வாழ்த்துக்கள்!

  2. சொல்ல மறந்து விட்டேன். புது போஸ்டர் ‘தமிழ்’ நன்றாக வந்திருக்கிறது.
    பாராட்டுக்கள்!

    இதைபோல தயார் செய்ய மென்பொருள் மொழி தெரிந்திருக்க வேண்டுமோ?

    சும்மா தெரிந்து கொள்ளலாமே என்று!

    1. பேனர் தயார் செய்ய குறைந்தபட்ச அறிவு தேவை!
      MS-Paint-லும் பண்ணலாம்… Adobe Photoshop-லும் பண்ணலாம்…..ஆனால் இது Gimp எனும் இலவச மென்பொருள் மூலம் என் தம்பி தயார் செய்தது!! வாழ்த்துகளுக்கு நன்றி.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s