டெமுஜின் கதை-7

//பொதுவாக வரலாற்றுத்தொடர்களை படிப்பதில் சிலருக்கு சலிப்பு ஏற்படக் கூடும். கதையின்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் மட்டும் தொடரலாம். முழுமையாக படிக்க எண்ணுபவர்கள் கதையைத் துவக்கத்திலிருந்து படிக்கத் துவங்கினால் சிறப்பு.//

7.யெசுகெய்யின் இறுதி

இதற்கு முன்:

“உன் மகன் சரியானப் பெண்ணைத்தான் தேர்ந்தெடுத்துள்ளான். இது எங்கள் இனக்குழுவிற்கு கவுரவம் தரக்கூடிய விஷயம். நான் என் பெண்ணிற்கு வரதட்சணை (அந்த காலத்திலிருந்தே இருக்கிறது!!)யாக குளிர்காலத்திற்கான கறுப்பு நிற அங்கியைத் (Black Sable Coat) தருகிறேன். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம்” –டெய்-செட்சென்.

“எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்யும்” என்று சொன்னபடி சிரித்தார் யெசுகெய்.

Sable- என்பது பனிப்பிரதேசங்களில் வாழும் கீரி வகை. குளிர் தாங்கிடும் அங்கிகள் தயாரிக்க பெரிதும் பயன்படும். விலை மதிப்பானவை. அதிலும் கறுப்பு அங்கிகள் அபூர்வமானவை.

Sable-  a small animal with thick warm fur, or the fur of this animal used for making clothes and artists’ brushes

இனி:

வேறு இனக்குழுவில் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டால், மணமகன் பெண் வீட்டாரோடு சில நாட்கள் தங்கி அவர்களுக்காக பணிபுரிய வேண்டும். இதை மணமகள் சேவை என்று கூறுவர். இதெல்லாமுமே ஒரு பழக்கவழக்கங்கள், நல்லுறவு இத்யாதி, இத்யாதி….-க்குதான்!

‘என் மகனுக்கு நாய்கள் என்றால் பயம். அவற்றைக் கட்டிவிடுங்கள்’ என்று சொன்னவாறு யெசுகெய் கிளம்பினார். போகிற வழியில் மழை பெய்யத் துவங்குவது போல் இருந்தது. சற்று நேரத்தில் இடி இடித்தது.

மங்கோலியர்களுக்கு இடி என்றால் பயம்.

இடி இடித்தால் அவர்களின் கடவுள்களில் ஒருவரான தெங்ரி கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். இதன் காரணமாய், யெசுகெய்யும் அவருடைய பணியாட்களும் ஒரு சிறு குகைக்குள் சென்று நின்றனர். தொடர்ந்து கனமழை பெய்தது. மாலைப் பொழுதும் இரவாக மாறிப்போனது. அதனால் தங்கள் பயணத்தை அவர்கள் மறுநாள் காலைதான் தொடங்க அவசியம் ஏற்பட்டது.

சில மணிநேரப் பயணத்தில் அவர்களுடைய குடியிருப்புகளை அடைய உள்ள அவர்கள் வழியில் அவர்களுடைய எதிரி இனக்குழுவாகிய டட்டார் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். எனவே யெசுகெய்யின் பணியாட்கள் அவர்களைத் தாக்க எத்தனித்தனர். ஆனால் யெசுகெய் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, டட்டார் இனக்குழுவைச் சேர்ந்த தலைவனும், யெசுகெய்யும் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் தங்களிடம் இருந்த குவளைகளில் பாலை (பெரும்பாலும் குதிரைப் பாலாக இருக்கக் கூடும்.) பரிமாறிக் கொண்டனர். யெசுகெய் குடித்த பாலில் விஷம் கலக்கப்பட்டு பின்னர் பயணத்தில் அவர் இறந்திருக்கக்கூடும். பலரும் ஏற்றுக் கொண்ட முடிவு இது.

அதேநேரத்தில் டெமுஜின், போர்ட்டேவிடம் பேசிக்கொண்டிருக்கிறான். தன் கையிலிருந்து ஒரு சிறு எலும்புத் துண்டை எடுக்கிறான். அதை அவளிடம் கழுத்தில் கட்டிக்கொள்ளுமாறும், அதைத் தேய்த்தபடி வேண்டினால், மனதில் நினைத்த காரியம் நடக்குமென்றும் கூறுகிறான். போர்ட்டே அதைத் தடவிப் பார்த்தாள்.

சற்று நேரத்தில் யெசுய்யின் பணியாள் மூலம் யெசுகெய் இறந்துவிட்ட தகவல் டெமுஜினுக்குத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக தனது இல்லத்திற்கு குதிரையில் திரும்புகிறான் டெமுஜின். போர்ட்டே அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

»

டெமுஜின் தன் இருப்பிடத்திற்கு வந்தபோது, யெசுகெய்யின் உடலில் உயிர் இல்லை. அவரது உடலருகே, முதல் மனைவி சோச்சிஜெல்லும், இரண்டாம் மனைவி ஹோலுனும் உறைந்து போன நிலையில் கிடந்தனர். அவரது உடலைக் கண்ட டெமுஜின் மண்டியிட்டான். ஆனால் அழவில்லை.

சாக்குத் துணி ஒன்றில் கட்டப்பட்ட்து யெசுகெய்யின் உயிரற்ற உடல். அதை ஆளில்லா குதிரை வண்டியில் கட்டி செல்ல வைத்தனர். வண்டி சற்றுதூரம் போயிருக்கும். சிறிதுநேரத்தில் யெசுகெய்யின் உடல் வண்டியிலிருந்து கீழே விழுந்தது. அதுதான் அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்ற கடவுள் தந்த/தீர்மானித்த இடம்.

பறை ஓசை எழுப்பி சில நாடோடிப் பாடல்களைப் பாடினார் தலைமை மந்திரவாதி. உடலை சிலமுறை சுற்றினார். சுற்றியுள்ளவர்கள் கொஞ்சம் கண்ணீர் சிந்தினர். அவ்வளவுதான். இறுதிச்சடங்கு முடிவுற்றது. அப்படியானால் உடல்?

பிணந்தின்னிக் கழுகுகள் உடலைச் சிதைக்கும். இம்மாதிரியான இறுதிச்சடங்குமுறைகள் மங்கோலியர்களின் சில இனக்குழுக்களில் நடைபெறும். இதற்கு Sky burial என்று பெயர்.

டெமுஜின் உள்பட யெசுகெய்யின் குடும்பத்தார் வீடு திரும்பும்போதுதான் அதுவரை அவர்கள் கண்டிராத ஒரு காட்சி அரங்கேறியது.

 -காத்திருப்பு சுகமானது!

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s