உலகை இயக்கும் ஆயுதம்

அன்பு – உலகை இயக்கும் ஆயுதம். இன்னும் இன்னும் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அத்தனையும் சொல்லலாம். அன்பு அத்தனை சுத்தமானது. அந்த அன்பு ஏன் அத்தனை சுத்தமாக இருக்கிறதென்றால் நமக்கெல்லாம் அது நம் தாயிடம் இருந்து வந்தது.  ஆம் தானே. தாய்மை என்கிற உணர்வு அவ்வளவு அன்பானது.

தந்தையை அறிவுக்கு ஒப்பிடுவார்கள் (பொதுவாக!!). தாய்க்கு தானே அன்பு. நம்முடைய மனித சமூகத்தில் பெரும்பாலும் அன்பு-கருணை வடிவாக தாயானவள் பார்க்கப்பட்டாலும், சமீபத்தில் தென் தமிழகத்தில் ஒரு தாய் தன் மகளையே தீவைத்து(மண்ணெண்னை ஊற்றி!) உயிரோடு எரித்ததைப் படித்து அதிர்ந்தேன். நீங்களும் கூட படித்திருக்கலாம். ஆக மனித அன்பு அத்தனை சுத்தமில்லை. அதாவது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மட்டுமே.

விலங்குகளின் அன்பு அலாதியானது. பல்வேறு தருணங்களில் நாமே உணர்ந்திருக்கலாம். எப்போதோ யாஹூ தளத்தில் பார்த்து சேர்த்து வைத்த சில படங்கள் உங்களின் பார்வைக்கும். பார்க்கும் உங்களுக்குள்ளும் இதே அன்பு பிறக்குமேயானால் எனக்கு வேறேன்ன வேண்டும்?

தாயின் தழுவல்!

அன்னை அரவணைக்கிறாள்!

அன்னையின் ஆறுதல்!

 

தாயே போற்றி!

 

அரவணைப்பு!

அன்பு அலாதியானது!

 

அன்பு அமைதியானதும் கூட!

அன்பு ‘உயரமானது’!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

அன்னை-சுமைதாங்கி!

அன்னை என் காவல்!

 

அன்பு பல்வேறு பரிணாமங்கள் கொண்டது. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், உலகின் பொதுமொழிகள் என்று சிரிப்பையும், அழுகையையும் சொல்வார்கள். இவ்விரண்டுமே அன்பாலும் சாத்தியமாகும்.  ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்று ஒரு திரைப்பாடல் கூட உண்டு. அன்பால் காடும், வீடும் அழகாகும். காடும், வீடும் அழகாகிற பட்சத்தில் நாட்டுக்கென்ன குறைச்சல்? நாடும் அழகாகிடும். அன்றே சொன்னார் அண்ணா!

வீடு எப்படியோ, நாடும் அப்படிதான் இருக்கும்!

வாருங்கள். நாட்டையும் அழகாக்குவோம்*.

வேர்ட்பிரஸ்பூர்வமான எச்சரிக்கை:

* இதுதான் சாக்கு என்று நாட்டைப் பற்றி ’கமெண்டு’கிறேன் பேர்வழி என்று இவ்விடம் அரசியல் பேச எத்தனிக்க வேண்டாம்.

நன்றி: அண்ணன் ஓஜஸ்**

**-கடைசியாக வெளியிட்ட சில பதிவுகளில் ஏதோ குறை இருப்பதாய் தோன்றியது. என்னவாயிருக்கும் என யோசித்தால் அண்ணன் ஓஜஸை குறிப்பிடவே இல்லை. அய்யகோ! என்னடா ’தமிழு’க்கு வந்த சோதனை!!

***- அவ்ளோதான்! அடுத்த பதிவு டெமுஜின் கதை-7 (அப்பாடா!!)

Advertisements

7 comments

  1. தம்பி தமிழ்,

    நல்ல தொகுப்பு, படங்களுடன் உள்ள வாசகங்கள் அருமை.

    மக்களே தெரிஞ்சுக்கோங்க நாற்சந்தியும் தமிழும் அரசியல் பேசா!

    ஆனா இது மட்டும் கொஞ்சம் ஓவர், எனக்கு எதற்கு நன்றி!

    நாற்சந்தியிலிருந்து,
    ஓஜஸ் 🙂

    1. அதான் சொன்னேனே! முந்திய பதிவுகளில் ஏதோ குறைவது போல் தோன்றுகிறது-னு!! அதுக்குதான் நன்றி!! நன்றி உனக்கு சொல்ல காரணம் கேட்டால் ஒரு வலைத்தளமே எழுதலாம்.
      அவ்வளவு காரணங்கள் இருக்கு.
      அரசியலை இப்போ எடுத்தா, விரிவா பதில் சொல்ல முடியாது… விரைவில் நீ கேட்ட ஒரு அரசியல் கட்டுரை தயார் ஆன பிறகு பேசலாம்!!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s