வலியும் – வழியும்!

மிகுந்த மகிழ்ச்சியோடு வணக்கம்.

தொடர்ந்து சிறப்பான வரவேற்பு எனது தளத்திற்கு கிடைத்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் நான் தகுதியானவனா? என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. நான் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக எழுதிவிடவில்லை. அதேசமயம் என்னால் நிச்சயமாக சிறப்பாக எழுதமுடியும் என்பதில் ஐயமில்லை.

சமீபமாக அதிக பதிவுகளை எழுதிவருவதுபோல் தோன்றுகிறது. அதிகம் எழுதினாலும், ஆழமாக எழுதுவதில்லை. எனக்கான வழிகாட்டிகள் யாவரும் (பெரும்பாலும்!) குறைவாகவே எழுதுகிறார்கள். இது போன்றவற்றை தவிர்க்க சமீபத்தில் கிடைத்த தொடர்விடுமுறைகளை பயன்படுத்த திட்டமிட்டேன்.

விதி என்னை மட்டும் விட்டிடுமா என்ன?

திடீர் (மற்றும் தொடர்!!) பயணமாக மண்ணும்,மல்லியும் மணக்கும்(!!) மதுரை நகருக்கு செல்ல வேண்டியதாயிற்று. தென் தமிழகத்தின் அறியப்படாத இரண்டு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல நேர்ந்தது. அதைப்பற்றி விரிவாக ஒரு பயணக் கட்டுரையாக எழுதுகிறேன்.

சொர்க்கம் என்பது புவியில். இதை உண்மையிலேயே உணரமுடிந்தது. காரணம் 3 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒருரகமாய்…… தவிர சமீபத்தில் வாங்கிய புத்தகங்களும் நல்ல தோழனாய் விளங்கின.

எழுத்தாளர் பாஷ்யம் அய்யங்கார் அவர்கள் எழுதிய சில குறுநாவல்களைப் முழுமையாய் படிக்கநேர்ந்தது. அட! அவரின் இன்னோர் பெயர் சாண்டில்யன்!

அதைப் பற்றி கொஞ்சமாய் இங்கே!

நான் படித்த 4 குறுநாவல்களுமே வரலாற்றுரீதியானவை. குறிப்பாக ராஜபுத்திரர்கள் பற்றியது 3. பாண்டியர் குறித்து ஒன்று. கல்கி அவர்களை பொன்னியின் செல்வனில் இருந்து படிக்கிறேன். சாண்டில்யன் அவர்களை குறுநாவல்கள், சிறுகதைகளிலிருந்து படிக்கத் தொடங்கினேன். முதலாவது- உதயபானு

ராஜபுத்திர படைத்தளபதியான உதயபானு, முகலாயர் தளபதியை போரில் வெல்கிறான். தோற்ற தளபதி, அவர்களின் பகைநாட்டிற்கு சென்றுவிடுகிறான். இதனிடையே உதயபானுவின் காதல்/அன்பு காரணமாய் அந்த பகைநாடு செல்கிறான். இதனிடையே நடக்கும் நிகழ்வுகளை வரலாற்றுப்பூர்வமாக, கற்பனையோடும் சொல்லியிருக்கிறார். படித்துப்பாருங்கள்!

அடுத்தது  இளையராணி!

இதுவும் அதேபோன்ற, கொஞ்சம் ஆக்‌ஷன், காதல் கலந்த சுவாரசியமான நாவல்தான். சஸ்பென்ஸ் கலைக்க விருப்பமில்லை!!

இன்னொன்று ராணா ஹமீர்.

நூறு விழுக்காடு சரித்திர தகவல்களால் சூழப்பட்ட வித்தியாசமான ’குறு’குறுநாவல். மேவார் மன்னனாக ராணா ஹமீர் அரியணை ஏறுவது பற்றிய கதை. இன்னும் சில சிறுகதைகளும் உள்ளன.

இன்னொன்று நிலமங்கை.

பாண்டிய நாட்டு கதை. கொஞ்சம் விவரிப்புகள் அதிகம்.

எல்லா புத்தகங்களைப் பற்றியும் விரிவாக, சுவையாக எழுத ஆசை. இருந்தாலும் பரவாயில்லை. வேண்டாம்!

ஏற்கனவே பல்வேறு தொடர்கள் போய்க் கொண்டிருக்கின்றன. புதிதாக தோள்கொடுக்க தோழர் ஒருவர் சம்மதம் சொல்லியுள்ளார். ஒரு தோழர் இளையராஜா பற்றி தொடர் எழுத சொன்னார்!! இன்னொருவர் நாவல்களுக்கு நன்றி சொன்னார். இப்போதும் என்னை எங்கே பார்த்தாலும், டெமுஜின் என்றோ, கோவர்த்தனன் என்றோ அழைக்கும் தோழர்களுக்கான கைம்மாறு என்னவென்றே தெரியவில்லை. பொன்னியின் செல்வன் வேறு வெகு நாட்களாக தொடப்படாமல் இருக்கிறது.

பதிவுகளின் எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது. 3 பதிவுகள் 50-வது இடத்திற்கு வெயிட்டிங். பொதுவாக இப்படி எண்கள் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. நீங்கள் படிப்பதே போதும்!

பார்க்கலாம்….. என்னென்ன நடக்குமென!

இனிமேல் பிறந்தநாள் கொண்டாடும் எனது நண்பர்குழுவினர்களுக்கு புத்தகம் பரிசளிக்க (முடிந்தமட்டும்!!) திட்டம்! முதற்கட்டமாக நிலமங்கை, ராணா ஹமீர் ….

அடுத்ததாக மகாத்மா காந்தி கொலைவழக்கு படித்தேன்! அதுவும் இன்னும் சில பயண சுவாரசியங்களும் இருக்கு.

இன்னும் பேச நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இது போதும். என்னிலிருந்து நான் என்னையே மீட்க வேண்டும். அதுவரைக்கும் இந்த பாடல் வரிகள்தான்!

உனை நீ தாழ்வாய் பார்க்காதே!

அட! நீயே உன்னிடம் தோற்காதே!

எதுவும் முடியும் என்று நினை!

நீ எழுந்து நடக்கும் ஏவுகணை!!

 

உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி,

தமிழ்

4 comments

 1. உங்களிடமிருந்து நீங்கள் வெளி வந்தே இதை எழுதினாற்போல இருக்கிறது.

  என்னுடைய பிறந்த நாள் அடுத்த வருடம் தான். அதுவரை உங்கள் புத்தகம் கொடுக்கும் எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  நானும் உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பதாக எண்ணம்!

  By the way, இந்த இணைப்பைப் படியுங்கள் டெமுஜின் பற்றியதுதான்.
  ஏற்கனவே படித்திருக்கிறீர்களா தெரியவில்லை.

  http://wp.me/p2ufhG-1o Being Balaji என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.

  1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
   பலமான குழப்பத்தில் இருக்கிறேன். இந்த பதிவிலேயே குழப்பங்கள் நிறைய உள்ளது.
   கொஞ்சம் அதிகமான வாசிப்பு தேவைப்படுகிறது.
   முடிகிற பட்சத்தில் அஞ்சலிலாவது புத்தகம் அனுப்புகிறேன்! நன்றி மீண்டும்.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s