சிதறல்! -2

சிதறல் வகைப் பதிவுகள் ஓரளவு வரவேற்பைப் பெற்ற காரணத்தால் தொடரும் எண்ணம் இருக்கிறது என்பது இப்பதிவை பார்த்தவுடனே உங்களுக்கு தோன்றியிருக்கக் கூடும். முன்னொரு காலத்தில்(!) எப்போதோ, ஏதேதோ தோன்றி கண்ணில் கண்டவற்றையெல்லாம் ட்ராஃப்ட் (Draft) ஆக்கி வைத்துள்ளேன். அண்ணன் ஓஜஸ் அதைக் கேள்விப்பட்டு “என்ன ஒரு 300 பதிவு தேறுமோ?” என்றார். (என்னிடம் இப்போது உள்ள ட்ராஃப்ட்கள் 297!) அதனாலோ என்னவோ, கதம்ப வகையில் அவ்வப்போது தொடர்-பதிவுகளை எழுத விருப்பம்.

எப்போதோ ரசித்த கவிதை:

விளக்கு

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்.
விட்டில் பூச்சி அதனில் இறக்கும் வரை. 


சமீபத்தில் ரசித்த படம்!

எப்போதோ எழுதியது!


எந்த காரணம் என சரியாக நினைவில் இல்லை. ஆனால் இது வாத்தியார் @balaav அவர்களுக்கு பதிலாக ட்விட்டரில் ட்வீட்டியது. இப்போது படித்தாலும் இனிக்கிறது. (எனக்கு!)
தமிழ் மாணவர்களுக்கான அடிப்படை அறிவை ஹிந்தி மொழியில் வளர்ப்பதில் தவறே இல்லை.ஆங்கிலம் போன்றே ஹிந்தியும் ஒரு மொழிப் பாடமாக இருக்கலாம்.செந்தமிழை செழுந்தமிழாக்க ஹிந்தியும் தேவையே.ஆனால் முழுக்க ஹிந்தி வழி பாடம்தான் வேணாம்.
இந்தி கல்விமுறை பற்றிய கேள்விகளுக்கு இது ஒரு நல்ல பதிலாக இருக்கலாம். (இல்லாமலும் போகலாம்!!)

படித்ததில் பிடித்தது!


பிறர் படிப்பதற்காக எழுதுகிறோம் – படிக்கும்படியாகவும் எழுத வேண்டும்.

-சுஜாதா

இன்னும் எழுத ஆசை இருந்தாலும், இன்னோர் முறை சிறப்பாக எழுதுகிறேனே!

5 comments

  1. உங்கள் பின்னூட்டத்தில் இருந்து ஒன்றே ஒன்று. என்னுடைய எழுத்தைத் தவிர எல்லாமே பிடிக்கிறது என்கிறீர்கள். எனக்கொரு வாய்ப்பு வரும். அப்ப நானும் உங்க ப்ளாக்ல எழுதுவேன்!!

   2012/10/16 Thamizh G

   > மிக்க நன்றி. பெரிதாக எழுத ஆசை. இருந்தாலும் பவர்கட் தடுத்துவிட்டது. >

  1. சார்,
   உண்மையிலேயே நானும் உங்க ட்வீட்ட மறந்துட்டேன். பொறுத்தருள்க. என்னோட ரிப்ளை மட்டும் Draft ஆ இருக்கு. ஆனா பல மொழிகளைக் கற்றுக்கொள்வது எல்லா விதத்திலும் பயன்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
   உங்களை இங்கு வரவழைத்த அண்ணன் ஓஜஸ்-க்கு வழக்கம்போல நன்றி!!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s