நமக்கான குறிப்புகள்!

புத்தகம் என்றொரு நண்பன் இல்லாவிட்டால் நம் வாழ்வின் அர்த்தமே முற்றிலும் போய்விடும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. நம் எனச் சொல்லி உங்களையும் எதற்காக சேர்த்திருக்கின்றேன் என்றால், உங்களுக்கு கட்டாயம் வாசிப்பின் மகத்துவம் தெரியும் என்பதால்.

நேரடியாகவே சொல்லி விடுகிறேன். புத்தகங்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம். பொருளாதார ரீதியில் எனக்கு பலம் இருந்தால் இந்நேரம் ஒரு பெரிய நூலகமே கட்டியிருப்பேன்! (மிகைப்படுத்தப்பட்ட கற்பனையைக் கேள்விப்பட்டிருக்கலாம். தற்போது வாசிக்கிறீர்கள்!!)

சமீபத்தில் திருச்சி நகருக்கு செல்ல நேர்ந்தது. அண்ணன் ஓஜஸ்-க்கும், எனக்கும் தெரிந்த ஒரு தோழர் எங்களுக்கு தெரியப்படுத்தினார் இப்படி. திருச்சியில் என்.பி.டி. (National Book Trust) நடத்தும் புத்தகக் கண்காட்சி அக்டோபர் முதல் வாரம் நடக்கிறது. ’கட்டாயம்’ வரவும்.

ஒருவழியாக இருவருக்குமே தோதான ஒரு நன்னாளில் கிளம்பி திருச்சி வந்தோம். பேருந்து நிலையத்திற்கு அருகேயே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்கிற ஒற்றைத் தகவலை நூல் பிடித்து, ஆட்டோக்காரர்களிடம் வழி கேட்டு ஒரு வழியாக அவ்விடத்தைச் சேர்ந்தேன். அப்போது மணி 10.40.

11 மணிக்கு ஆரம்பிக்குமாம் விற்பனை. ஓஜஸைக் காணோம் எனக்கேட்டால் இதோ வருகிறேன் எனச் சொன்னார். வழக்கம் போல என் தந்தையிடம் ஆலோசனை கேட்டேன். என்ன புத்தகம் வாங்கலாம்? அவரும் வழக்கம் போலவே சொன்னார். ‘உனக்குப் பிடித்ததை வாங்கு’. பிறகு நல்லபடியாக ஒரு நூலைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார்.

சிறப்பான ஓவியங்கள் முகப்பை அலங்கரித்தன. வாசகர் அரங்கம் தனியே இருந்தது. மொத்தம் 3 பெரிய கூடாரங்கள். 2 நூல்களின் விற்பனைக்கு. ஒன்று வாசகர்களுக்கு. நான் சற்று நேரம் பயணக் களைப்பு நீங்க ஓய்வெடுத்தேன். பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் நன்றாக சத்தமாக அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். சுற்றி ஆட்கள் அமர்ந்திருக்கிறார்களே என்கிற நாகரிகம் கொஞ்சமும் இன்றி பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூல்களைப் பற்றி ‘ஆகா-ஓகோ’ எனப் பேசினார். போதாக்குறைக்கு பிரபல பதிப்பகம் குறித்தும், சமீபத்தில் விருது பெற்ற ஒரு தமிழ் புத்தகம் பற்றியும் பேசிக் கொண்டே போனார். எனது எரிச்சலை வெளிக்காட்டாமல் அமைதியாக குறிப்பெடுத்தேன்! அருகே அமர்ந்திருந்த சிலர் என்னைக் கவனித்தபடியால் அமைதியாகவே இருந்தனர். இப்போது ஓஜஸிடமிருந்து அழைப்பு வந்தது. ‘வந்தாச்’ இப்போது மணி 10. 50.

சில நிமிடங்களில் இருவரும் விற்பனை அரங்கினுள் சென்றோம். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தன. பல்வேறு வகையான புத்தகங்களும் இருந்தாலும் மனம் எதையும் கவனியாது போனது. என்ன காரணம் என்று புரியவில்லை-தெரியவில்லை.

கண்ணதாசன் பதிப்பகம் கொஞ்சம் ஈர்த்தது. காரணம் அழகியல். கண்ணதாசன் அவர்களின் பல புத்தகங்கள் இருந்தன. (குறிப்பாக அர்த்தமுள்ள இந்துமதம், வன வாசம். ) அவை நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.

அடுத்து ஈர்த்தது விகடன் பதிப்பகம். பொன்னியின் செல்வனை முன்னிலைப்படுத்தியிருந்தனர். பரவசமூட்டிய பல்வேறு தொடர்களை நூல்வடிவில் காண முடிந்தது. தமிழருவி மணியன் எழுதிய ’ஊருக்கு நல்லது சொல்வேன்’ புத்தகத்தின் விலையைப் பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டோம். இன்னோர் சமயம் கண்டிப்பாக அப்புத்தகத்தை வாங்கிவிடுவேன்!

சிக்ஸ்த் சென்ஸ் என்றோர் பதிப்பகம் கோபிநாத் அவர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்களைத் தாங்கி நின்றது. இன்னும் பற்பல புத்தகங்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டேயிருந்தன.

இன்னொரு பதிப்பகத்தில் கவிஞர் அறிவுமதி எழுதிய ’மழைப்பேச்சு’ புத்தகத்தைக் காணமுடிந்த்து. கவிதைகளைப் போலவே அதன் வடிவமைப்பும் ஈர்த்தது. அதேபோன்ற வடிவமைப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் கவிதை நூலும் அருகேயே இருந்தது. ஆனால் நூல் பிரிக்கப்படாமலிருந்தது. எனவே உள்ளே பார்க்க வாய்ப்பில்லை. பின் அட்டையில் ஒரு துளி பருகினேன்.

பகலும் இரவும் வேண்டாமா?

சூரியனாய் இரு!

பிறப்பும் இறப்பும் வேண்டாமா?

வானமாய் இரு!

-இறைவனடி

இளையராஜா

வானதி பதிப்பகத்தில் கவர்ந்த அம்சமே அவற்றின் வடிவமைப்பும் விலையும்தான். அந்தகாலத்திய வடிவமைப்பில் நேர்த்தியான தாளில் சிறப்பாக விலைகுறைவாக நூல்கள் இருந்தன. கல்கியும், சாண்டில்யனும் உள்ளே எங்களை வரவேற்றனர்.

 தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய தமிழ் எழுத்தாளர்கள் அனைவரின் புத்தகங்களும் இருந்தன. ஆனாலும் நிறைய புத்தகங்கள் காணப்படவில்லை.  கிழக்கு பதிப்பக நூல்கள் பல விலையேறி இருந்தன. கொஞ்சம் வருத்தம்தான்!

 

எழுத்தாளர் பார்த்தசாரதி (ஆர்.பி.சாரதி) எழுதிய ‘பாபர் நாமா’ தான் பரவலாக விற்பனைக்கு வந்த புதிய நூல். இது மதிநிலையம் வெளியீடு! வைரமுத்து , சுஜாதா உள்ளிட்டவர்களின் புத்தகங்களுக்காக தனி அடுக்கே வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இருவரும் ஓரளவு முழுமையாகச் சுற்றி கண்காட்சியின் நிறைவில் வந்தபோது மணி 1.00-ஐ தாண்டியிருந்தது. அதன் பிறகு இருவருமாய் தேவையான புத்தகங்களையெல்லாம் வாங்கி அமர்கையில் இருவரும் தளர்ந்துவிட்டோம். தண்ணீர் எங்கள் நாவை நனைத்து பல மணிநேரங்களாகிவிட்டது. இருப்பினும் ஓரளவு நூல்கள் வாங்கிய திருப்தி ஏற்படுகையில் மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

இருவரும் வெளியே வந்து காவலரிடம் தண்ணீர் குறித்து கேட்டோம். அவரும் ஒரு டேங்கைக் காட்ட தற்காலிகமாக நீர் அருந்தி பலம் பெற்றேன்!

இக்கட்டுரை முழுமையில்லாமல் தோன்றினால் அதற்கு எனது பலவீனமான உடலும் ஒரு காரணம். என்.பி.டி அமைப்பாளர்களும் ஒரு ஸ்டால் அமைத்திருந்தனர். குழந்தைகளும் கூட ஆர்வமாய் புத்தகங்களைத் தேர்வு செய்தன. இருப்பினும் பெற்றோர்களின் விருப்பமே இறுதியில் வென்றது. ஒரு நபர் புத்தகங்களைத் திருடியதாக மாட்டிக் கொண்டார். அவர் போன்ற சிலர் வருத்தம் செய்கின்றனர். ஓரளவு கூட்டம் அங்கிருப்பதைக் கண்டபோது மனம் சற்று ஆறுதலடைந்தது. இன்னும் நிறைய எழுத ஆவல் இருப்பினும் ஒன்றே ஒன்றுதான் எழுத வேண்டும்.

புத்தகங்கள் இல்லையேல் என்னாகும் என் வாழ்வு?

அனைத்து நூல்களும் 10% விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

அக்டோபர் 5-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 14-ம் தேதி நிறைவு பெறுகிறது.

உங்களின் மேலான கருத்துகள் மட்டுமே இக்கட்டுரையின் எதிர்பார்ப்பு. புத்தகங்களின் மீதான உங்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். உங்களுக்கு ஒருவேளை இக்கட்டுரையால் புத்தகங்களின் மேல் பற்று அதிகமானால் அதைவிடப் பெரிது இப்போது எனக்கொன்றுமில்லை.

நன்றி:’

ஒரே ஒரு புகைப்படம் மட்டும் நான் எடுத்தது. மற்ற எல்லாமே அண்ணன் ஓஜஸ் அவர்களின் கைவண்ணம். நன்றிகள் கோடிகோடி! எதுவும் புதிதில்லை.

Advertisements

5 thoughts on “நமக்கான குறிப்புகள்!

 1. படங்களுடன் சிறப்பான கட்டுரை…

  வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  நேரம் கிடைத்தால்… மின்சாரம் இருந்தால்… என் தளம் வாங்க… நன்றி…

  1. நான் உங்களைவிட வேகம். உங்க கமெண்ட்கள்தான் எல்லா தளங்களிலும் இருக்கிறதே! முன்னமே பார்த்துவிட்டேன்!!
   வருகைக்கு நன்றி.
   பதிவுகளில் தவறு இருந்தால் குறிப்பிடுக.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s