டெமுஜின் கதை-6

 

6-ஐந்து ஆண்டுகளில் திருமணம்

எல்லா சிறுமிகளையும் விட, ஒருத்தி மட்டும் உயரமாக இருந்தாள். இன்னும் சொல்லப் போனால், டெமுஜினை விட உயரமாக இருந்தாள்! அவள் முகம் வட்டமாக, அழகாக, சிரித்தவண்ணம் இருந்தது.  அவளே டெமுஜின் அருகில் வந்தாள்.

”உன் பெயர் என்ன?”

“நானே உன்னிடம் கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.”

“நான் போர்ட்டே.”

“நான் டெமுஜின்.”

“உன் வயதென்ன?”

”ஒன்பது.”

“அப்படியா? நீ என்னைவிடச் சிறியவன்.”

“எவ்வளவு சிறியவன்?”

“ஒரு வருடம். ஆமாம். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?”

“திருமணத்திற்குப் பெண் தேடி, மெர்கிட் இனக்குழுவில் பார்க்கச் செல்கிறோம்.”

“அடடா! உனக்குத் தெரியாதா? புத்திசாலி மக்கள் பெண் எடுக்க இங்குதான் வருவார்கள்.”

ஒரு நிமிடம் இருவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“சரி. நான் கிளம்புகிறேன்.” -போர்ட்டே.

நகர்ந்தபடியே திடீரெனத் திரும்பினாள் போர்ட்டே. “எங்கள் இனக்குழுவில் பெண்ணெடுக்க நீ நினைத்தால் என்னைத்தான் தேர்ந்தெடுப்பாய்”- என்றவாறே சிரித்துக்கொண்டே ஓடினாள்.

டெமுஜின் அவள் சென்ற வழியே விழி வைத்தான். இரவில் யெசுகெய் தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். எல்லாம் கொசுவின் செயல். போதாக்குறைக்கு குளிர் வேறு படுத்தி எடுத்தது. திடீரென யெசுகெய்யின் பார்வை டெமுஜின் பக்கம் சென்றது. அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான் டெமுஜின்.

“நீ இன்னும் தூங்கவில்லையா?”

“உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்”

“என்ன?”

“நான் எனக்கான பெண்ணை இங்கேயே தேர்ந்தெடுக்கப் போகிறேன்.”

“இங்கேயா? வேண்டாம். இவர்கள் அவ்வளவு வலிமையான இனக்குழுவினர் இல்லை.”

“பலரும் இங்கேதான் பென் எடுப்பார்களாமே?”

“வேண்டாம். நான் மெர்கிட் இனக்குழுவினருடன் உறவைப் புதுப்பிப்பதாக உன் அம்மாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.”

“இங்குள்ள பெண்களை ஒருமுறை பார்க்கிறேன்.”

“வேண்டாம். யாரையுமே நீ தேர்ந்தெடுக்காவிட்டால் அது அவர்களை அவமானப்படுத்தியது போலாகிவிடும்”

“எனக்கேற்ற பெண் இவர்களிடம் இல்லையென்றால் இவர்கள் வலிமையற்ற இனக்குழுவினர்தான்.”

டெமுஜினின் பதிலால் யெசுகெய் எழுந்து உட்கார்ந்தார். அவனை ஒருமுறை பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தார்.

மறுநாள்.

சிறுமிகள் வரிசையாக நின்றனர். ஒவ்வொரு சிறுமியும் ஒவ்வொரு விதத்தில். சிரிப்பு, வெட்கம், பயம் என பலவாறு பரவி இருந்தனர். கூட்டத்துள் போர்ட்டேவும் நின்றிருந்தாள். அவள் டெய்-செட்சென்னின் மகளும் கூட.

யெசுகெய் டெமுஜினிடம் சில அம்சங்களைக் கூறினார்.

அதாவது, பாதம் பெரிதாக இருக்கவேண்டும். கண் சிறியதாக இருக்கவேண்டும். முகம் தட்டையாக இருக்கவேண்டும். பெரிய கண்கள் ஆபத்தானவை, சிறிய பாதங்களும் அப்படியே. இதெல்லாமுமே மங்கோலியர் நம்பிக்கைகள்.

”உனக்கானவளைப் போய்த் தேர்ந்தெடு டெமுஜின்” என்று கூறிவிட்டு டெய்-செட்சென் அருகில் அமர்ந்தார் யெசுகெய்.

ஒவ்வொரு சிறுமியாக பார்த்துக்கொண்டே வந்தான் டெமுஜின். முதலில் பாதங்கள், பிறகு முகம். போர்ட்டேவின் அருகே டெமுஜின் போனபோது அவள் பரவசமானாள். ஆனால் டெமுஜின் அவளையும் கடந்து போனான். கடைசி பெண் வரைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பினான். போர்ட்டே அருகில் வந்து நின்றான்.

“நான் உன்னை என் துணையாகத் தேர்ந்தெடுக்கிறேன்”

“நான் அதற்குச் சம்மதிக்கிறேன்” – போர்ட்டே.

இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, யெசுகெய், டெய்-செட்சென்னுக்கும் மகிழ்ச்சிதான். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவினர்.

“உன் மகன் சரியானப் பெண்ணைத்தான் தேர்ந்தெடுத்துள்ளான். இது எங்கள் இனக்குழுவிற்கு கவுரவம் தரக்கூடிய விஷயம். நான் என் பெண்ணிற்கு வரதட்சணை (அந்த காலத்திலிருந்தே இருக்கிறது!!)யாக குளிர்காலத்திற்கான கறுப்பு நிற அங்கியைத் (Black Sable** Coat) தருகிறேன். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம்” –டெய்-செட்சென்.

“எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்யும்” என்று சொன்னபடி சிரித்தார் யெசுகெய்.

Sable- என்பது பனிப்பிரதேசங்களில் வாழும் கீரி வகை. குளிர் தாங்கிடும் அங்கிகள் தயாரிக்க பெரிதும் பயன்படும். விலை மதிப்பானவை. அதிலும் கறுப்பு அங்கிகள் அபூர்வமானவை.

Sable-  a small animal with thick warm fur, or the fur of this animal used for making clothes and artists’ brushes

-காலம் பதில் சொல்லும்!!

9 comments

  1. முன்னமே பார்த்தாயிற்று. மிக்க நன்றி. நேற்று மாலை இணைய இணைப்பு மோசமானதால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. பொறுத்தருள்க.

  1. உங்களைப் போன்ற மூத்தபதிவர்கள்தான் என்னைப்போன்றவர்களுக்கு வழிகாட்டி. தங்களின் எந்த பதிவையும் நான் தவறவிடவில்லை. உங்களின் முதல் சிறுகதை அபாரம்! இணைய இணைப்பின் தொல்லை, மின்சார தடங்கல்களைத் தாண்டி வருவது சிரமமென்பது தாங்கள் அறிந்ததே>

   1. ரொம்பவும் நிஜம்.

    நேற்று என் பதிவுகளைப் போடவே மிகவும் தாமதமாகிவிட்டது.

    எங்கள் ஊரில் மின்சாரம் தடங்கலில்லை.
    கணணி நின்றே போய்விட்டது.

    உங்கள் சிரமம் புரிகிறது.

    முதல் சிறுகதையை பாராட்டியதற்கு நன்றி.

 1. உங்களுடைய இந்த செங்கிஸ் கானை பற்றிய இந்த தொடர் மிகவும் நலம். என்னுடைய “செந்நிற கனவுகள்” பதிவை எழுத தூண்டியது Mangol எனும் திரைப்படம். பார்த்திருப்பிர்கள் என நினைக்கிறேன். இல்லையெனில் நிச்சயம் பார்க்கவும். ஒரு நல்ல படைப்பு.

  மற்றுமொரு முறை நன்றி நல்ல பதிவுகளை தருவதற்கு.

  1. மிக்க நன்றி. நான் இன்னும் அந்த திரைப்படத்தைக் காணவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் செங்கிஸ்கான் பற்றி சில தகவல்கள் பல்வேறு நூல்களிலிருந்து அறிந்துள்ளேன். அதேசமயம் ’மங்கோல்’ படத்தைக் காணாமல் டெமுஜினை அறிவது முழுமை பெறாது. மீண்டும் ஒருமுறை நன்றி

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s