கோவர்த்தனன் -2

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

கோவர்த்தனன் -1 

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் முந்திய நாளைப் போல இருப்பதில்லை. ஒவ்வோர் நாளும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மனம் தான் உணர மறுக்கிறது. நமக்கு தோதான நிகழ்வுகள் மட்டுமே விரும்பக்கூடிய மாற்றங்களாக இருக்கின்றன.

இப்போது கூட நகரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இது எத்தனை பேருக்கு இன்பம் தந்திருக்கக்கூடும்? வீடே இல்லாத எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் எல்லோருமே மழையை ஆராதிப்பார்களா? சில இயற்கை ஆர்வலர்களுக்கும், வெயிலால் பகலில் பாதிப்படைந்தவர்களும் புளகாங்கிதம் அடையக் கூடும். ஆனாலும் புவியில் உயிர் செழிக்க மழை அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மூர்த்தியின் மனதுள் ஏதோ பெரும் பாரம் இருப்பதை தெரிந்து கொண்டான் செழியன். அதை எப்பாடுபட்டாவது அறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கில் ஒரு துரும்பைக் கூட கிள்ள முடியாது. அவர் பெண்ணுக்கும் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புள்ளியில் தொடங்கினால் ஏதேனும் துப்பு கிடைக்கும். இவருக்கு குற்றவாளி யார் என தெரிந்திருக்கும் பட்சத்தில் வெகு சுலபமாய் தண்டனை பெற்றுத் தர முடியுமே? அவர் உண்மையிலேயே மறுப்பதானால் வேறு பிரச்சினைகள் இருக்குமா? அப்படியானால் சொந்தப் பிரச்சினை அல்லது வேறு ஏதாவது பெரிய இடத்து விவகாரமாய்தான் இருக்கக் கூடும்.

ஆக மொத்தத்தில் வழக்கை விட சிக்கலாய்ப் போனது செழியனின் மனம்.

மறுநாள்.

முன்தினம் பெய்த மழை தற்போது சற்றே நீண்ட தூறலாயும், சாரலாயும் விட்டுவிட்டு பெய்து மண்ணை ஈரம் செய்துகொண்டே இருந்தது. இருந்தாலும் நகரின் அன்றாட அலுவல் பாதிப்பில்லாமல் சுழன்றது.

மீண்டும் மூர்த்தி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை அதிகாரியின் அறையில் செழியனும். வேல்ராசும் உடனிருந்தனர்.

“வணக்கம் சார்” – மூர்த்தி.

இதன் தொடர்ச்சியாக அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். உடனே குறுக்கிட்ட மூர்த்தி.

“சார். ஒரு நிமிசம். மன்னிச்சுக்கங்க. இப்ப நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்னால சரியான பதிலை சொல்ல முடியாது”

“இங்க பாருங்க சார்! எங்க கடமையை சரியா, முறையா செய்ய நாங்க ஆசைப்படுறோம். உங்க பொண்ணுதானே இறந்தது. அப்ப நீங்கதான் விசாரணைக்கு ஒத்துழைக்கணும்.”

இப்போது மூர்த்தி கோபமடைந்து,

“ஆமா சார். அதத்தான் நானும் சொல்றேன். இறந்தது என் பொண்ணுதான். அவ பொணத்தக் கூட இன்னும் என் மனைவி பாக்கல. உடனடியா என்னோட பொண்ணு உடம்ப ஒப்படைங்க. அப்புறமா நான் விசாரணைக்கு வரேன். இத நான் வராமலே சொல்லிருக்கலாம். அது முறையா இருக்காதுனுதான் இங்க வந்து சொன்னேன். அதுபோக உங்ககிட்ட நேரடியா சொன்னா நல்ல பலன் கிடைக்குமேனு உத்தேசிச்சுதான் சொல்றேன்…….  ”

உடனே செழியனும், வேல்ராசும் விசாரணை அதிகாரியின் அருகே சென்று ஏதோ சொல்கின்றனர். இருவர் சொன்னதையும் கேட்டுவிட்டு அதிகாரி மூர்த்தியிடம் விரைவாக வழக்கை முடிக்க ஆவன செய்வதாக சொல்கிறார். மூர்த்தி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். சிறிது நேரத்தில் செழியனும் மூர்த்தியின் பின்னே வந்தான்.

செழியன் தன் பின் வருவதைப் பார்த்த மூர்த்தி, அருகிலிருந்த மர நிழலில் காத்திருந்தார். அருகே செழியன் வந்ததும்,

”தம்பி. உங்க விசாரணையெல்லாம் நாளைக்கு வச்சுக்கிடுங்க. இப்ப எதுவும் வேணாம்.”

”சார். ஒரு அரை மணிநேரம் ஒதுக்க முடியுமா?”

ஏன்?

என் வீட்டுக்கு நீங்க வர முடியுமா?

முடியாது தம்பி. ஏன் வரணும்?

ஒண்ணுமில்ல சார். உங்க கூட பேசும்போது இந்த யூனிஃபார்ம் உறுத்தலா தோணுது. அதான் வேற ட்ரெஸ் மாத்திட்டு….

இருவரும் கண்களாலேயே வார்த்தைகளை இப்போது பரிமாறிக்கொள்கின்றனர். அதில் கொஞ்சம் நாமும் யூகிக்கலாம். அதாகப்பட்டது, நேற்று இரவு போல ஒரு நடை போகலாம் என்பது மட்டும் புரிந்தது.

அதென்ன! அடிக்கடி இப்படி ஒரு நடை போகிறார்களே? என எண்ணுபவர்களுக்காக, செழியன் நல்ல உடல்வாகு கொண்டவன். அதன் பின்ணணியில் செழியனின் 7 ஆண்டு நடையும் உள்ளது. அதாவது தினமும் 3 கிலோமீட்டராவது, ஜாகிங் செய்வான். மூர்த்தியோ, தன் முதுமையை வெல்ல தினமும் ’நடையாய் நட’ப்பவர். அதனாலேதான், இருவருக்கும் நடப்பதில் பிரியம்.

இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் சொல்லிவிடுவது சிறப்பு. செழியனும், மூர்த்தியும் முன்னமே நண்பர்கள். தினமும் நடைபயில அதிகாலையிலே நகரைச் சுற்றித் திரிந்த தருணங்களில்…………….. அப்படியே நீங்களே புரிந்து கொள்ளவும்!

விட்டுவிட்டு ஈரம் செய்த மழை இப்போது இல்லை. ஆனாலும் மழையின் தடம் நகரம் முழுதும் இருந்தது.

இப்போது உரையாடல்.

“சொல்லுங்க தம்பி.”

“ஒரே விஷயம்தான் சார். நேற்று பேசிய விதத்தை வச்சே நான் யூகிச்சுட்டேன். உங்களுக்கு கொலையாளி யார்னு தெரியும்தானே?”

“ஆமாம். ஆனா உறுதியா தெரியாது!”

“என்கிட்ட சொல்லுங்க சார். எப்படியாவது தண்டனை வாங்கித் தரேன்.”

“தம்பி. அதைவிட்டு வேற ஏதாவது கேளுங்க நான் சொல்றேன். நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல அவகாசம் வேணும். ”

”சரிங்க சார். நீங்க அவகாசம் எடுத்துக்கிடுங்க. ஆனா உங்களுக்கு யார் மேல சந்தேகம்னு நெனக்கிறீங்களோ தயங்காம என்கிட்ட மட்டுமாவது சொல்லிடுங்க. நான் ரகசியமாவே விசாரிக்கிறேன். இப்ப நீங்க போங்க சார்.”

”அப்புறம் தம்பி, என் பொண்ணு…..”

“கவலைப்படாதீங்க சார். இன்னைக்கு ராத்திரிக்குள்ள வீட்டுக்கே கொண்டுவரச் சொல்லீருக்கோம். ஃபார்மாலிட்டீஸ் முடியட்டும். நானே வீட்டுக்கு வரேன் சார்.”

இப்போது அந்த நகரம் சூரியனின் ஆளுகைக்குள் இருக்கிறது. இருட்டினால் தான் தெரியும் நிலவின் தன்மை!

҉  02

2 comments

  1. ஓபெநிங் செம செம, ரோம்ப சிறிய அத்தியாயம்.,

    //வழக்கை விட சிக்கலாய்ப் போனது செழியனின் மனம்// மனநிலையின் சரியான விளக்கம்/விவரம், நச்!!!

    ஆனால் கதை மட்டும் அப்பிடியே நிற்பது போல (எனக்கு) தோன்றுகிறது !

    நாற்சந்தியிலிருந்து,
    ஓஜஸ் 🙂

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s